ஞாயிறு, 21 ஜூலை, 2013

வீட்டுக் குறிப்புகள்


எழுதியவர் பிரபாவதி.கோ 

1. சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று கொண்டே வெங்காயத்தை நறுக்கினால் கண்களில் கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம்.

2. சாதம் வெள்ளை வெளே ரென்று  இருக்க  அரிசி களைந்து  வைக்கும் போது அதில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றை பிழிய வேண்டும்.

3. உண்மையான தேன் என்றால் ஒரு காகிதத்தில் ஒரு துளி தேனை வைத்தால் அது காகிதத்தால் உறிஞ்சப்படாமலும் , பரவாமலும் அப்படியே நிற்கும்.

4. வெங்காயம் வெட்டும் போது அருகில் மெழுகுவர்த்தியைஏற்றிக் கொண்டு வெங்காயத்தை நறுக்கினால் கண்களில் கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம்.  

5. கிழங்குகளை உப்பு நீரில் ஊற வைத்து பிறகு வேகவைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

6. மருதாணி போடும் போடு வெறும் தண்ணிரை ஊற்ற கூடாது.நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு கையால் நன்றாக பிசிறினால் தண்ணீர் வழவழபாகி விடும்.அந்த தண்ணீரை மருதாணி பவுடரில் கலக்கினால் சீக்கிரம் உதிராமல் நல்ல கலராக வரும்.

7. நீரில் சிறிது வினிகரை கலந்து பாத்திரங்களை கழுவினால் பளிசிசென்று இருப்பதுடன் கைகளும் மென்மையாக இருக்கும்.

8. கல் உப்பை ஒரு கைபிடியளவு மிக்சியில் அரைத்தால் பிளேடு கூர்மையாகும்.

9. பட்டு துணிகளை உப்பு கலந்த நீரில் அலசினால் வண்ணம் பாதுகாப்பதுடன் துணியும் மிருதுவாக இருக்கும்.

10. குலோப் ஜாமூன் செய்யும் போது சிறிதளவு வெண்ணை சேர்த்தால் ஜாமூன் மிருதுவாக வரும்.

11. தேங்காய் பர்பி செய்யும் போது தேங்காய் துருவலுடன் சிறிதளவு பால் சேர்த்து மிக்ஸியில் சிறிது நேரம் ஓடவிட்டால் பர்பி வெள்ளையாக வரும்.

12. ஊறுகாய்க்கு கல் உப்பை பொடித்து போட்டால் கெடாது.

13. வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது அதனுடன் சிறிது சிரகம்,தேங்காய் துருவலை வறுத்து பொடி செய்து சேர்த்தால் பொரியல் மணமாய் ருசியாக இருக்கும்.

14. காய வைத்த வேப்பிலையை அரிசியில் போட்டு வைத்தால் வண்டுகள் வராமல் இருக்கும்.

15. பாலை அகலமான பாத்திரத்தில் ஊற்றி வைத்தால் எவ்வளவு நேரமானாலும் கெடாது.

16. தேங்காயை துறுவி வெயிலில் காய வைத்தால் வேண்டிய போது உபயோகிக்கலாம் .

17. அடைக்கு அறைக்கும் போது காய்ந்த மிளகாயை போட்டு பின் பச்சை மிளகாயை போட வேண்டும்.

18. புளியை உப்பு சேர்த்து கரைத்தால் புளிப்பு சுவை நன்றாக இருக்கும்.

19. ஒரு துண்டு இஞ்சி சேர்த்து சட்னி செய்தால் சுவை கூடும்.

20. ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து இனிப்பு பண்டங்கள் செய்தால் ருசி கூடும்.

21. கத்தியில் சிறிது எலுமிச்சை சாற்றை தடவி கொண்டு ஆப்பிள்,வாழைக்காயை நறுக்கினால் கருக்காது.

22. தக்காளியை தினமும் சாப்பிட்டால், சருமம் இளமையாக இருக்கும்.

23. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துளி தேனையிட்டால் அது நீரோடு கரையாமல், நேராக கீழே சென்று அமர்ந்தால் அது  உண்மையான தேன்.

24. வெங்காயம் நறுக்கும் போது தண்ணீரில் ஊற வைத்து  பின் அதனை வெட்டனால் கண்ணீர் வராமல் இருக்கும்.

25. வெங்காயம் வெட்டுவதற்கு 10-15 நிமிடம் ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வராமல் இருக்கும்.

26. வெங்காயத்தை வைத்து நறுக்கும் பலகையில் சிறிது வினிகரை தேய்த்து வெட்டினால்
கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம்.   .

27. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு சேர்த்து, வெங்காயத்தைப் போட்டு ஊற வைத்து,நறுக்கினா
ல் அழுவதைத் தடுக்கலாம்.

28. கிழங்குகள் வெந்த பின் தான் உப்பு சேர்க்க வேண்டும்.

29. கிழங்குகளை அரிசி கழுவிய நீரில் வேக வைத்தால் சீக்கிரம் வேகும்.

30.ஊறுகாயில் ஒரு சிட்டிகை சோடியம் பென்சொயிடு போட்டு வைத்தால் கெடாது.

31.தினமும் மூன்று வேளை தயிரை உட்கொண்டால் உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கலாம்.

32. ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு பருப்பை வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

33. சப்பாத்தி செய்யும் போது சிறிது மைதா சேர்த்து கொண்டால் சப்பாத்தி உப்பும்.

34.சாம்பாரில் உப்பு அதிகமானால் உருளை கிழக்கை வெட்டிப் போடவும்.

35. சோம்பு,பிடிகரனை ஆகியவற்றை இட்லி தட்டில் வேக வைத்தால் குழையாது.

36. குலோப் ஜமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் கலந்தால் உறையாமலும் கேட்டுப் போகாமலும் இருக்கும்.

37. நமுத்துப் போய் விட்ட  பாண்டங்களை சூடான வெறும் வாணலியில் போட்டு எடுத்தால் முறுமுறுப்பாகி விடும்.

38. பிசைந்த சப்பாத்திமாவுடன் தோல் சீவிய ஒரு உருளை கிழங்கை போட்டு வைத்தால் கெடாது.

39. பிசைந்த சப்பாத்தி மாவுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் அதன் மேல் பூசி வைத்தால் மாவு கெடாது.

40. வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.
 

41. பில்டரில் காபிப் பொடி போடுவதற்கு முன் அதிலுள்ள துளைகளின் மேல் பரவலாக சர்க்கரையை போட்டால் துளை அடைத்துக் கொள்ளாது.

43. நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.



44. கையில் நல்லெண்ணெய் தடவி கொண்டு சேனை கிழங்கை நறுக்கினால் அரிக்காது.

45. வயிற்றுப்போக்குஏற்பட்டால், அதிக அளவு நீர்ச் சத்து உடலில் குறையும். இதனைச் சமாளிக்க, இளநீர் அருந்தலாம்.

46. மைசூர்பாக் செய்து இறக்கும் பொழுது ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

47. வாழைக்காய்,கத்தரிக் காயை அரிந்ததும் உப்பு தண்ணீரில் போட்டால் கருக்காது.

48. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்தால் பழுக்காது.

49. அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

50. வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

51. மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

52. பச்சை மிளகாய் பழுக்காமல் இருக்க அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி  போட்டு வைக்கலாம்.

53. கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.
 

54. பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.


55. புளிக்கரைசலை ஐஸ்டிரேயில் ஊற்றி ப்பிரிட்ஜில் ப்பிரீசரில் வைத்து தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளலாம்.

57. தாகம்  எடுக்கும் போது பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.
  

58. நறுக்கிய ஆப்பிள்,பேரிக்கையை உப்பு நீரில் போட்டால் கருக்காது.

59. சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும். 

60. சமையல்  செய்யும் போதே உப்பு  போட்டு விட்டால் சுவை நன்றாக இருக்கும்.

61. முகத்தில் பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்டால், இளநீரை இரவில் படுக்கும்போது முகத்தில் தடவி, காலையில் கழுவ வேண்டும். இதைத் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால், தோல் பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.

62. தேங்காய் துருவலை பாலிதீன் பையில் போட்டு ப்பிரீசரில் வைத்தால் சில நாட்கள் வரை கெடாது.

63. கொதிக்கும் நீரில் தக்காளியை போட்டு எடுத்தால் தோல் எளிதாக உரியும்.

64. பல்லிகளை விரட்ட மயில் இறகை சுவரில் ஒட்டவும்.

65. நக போலிஷ் கெட்டியாகி விட்டால் அசிடோன் சில சொட்டுக்கள் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

66. ரவையில் பூச்சி பிடிக்காமல் இருக்க லேசாக வறுத்து வைக்கவும்.

67. சுவரில் உள்ள சுண்ணாம்பு உதிரிந்து விட்டால் சிறிதளவு டூத்பேஸ்டு தடவவும்.

68. இரவில் தூங்குமுன் கண்ணில் சில சொட்டு விளக்கெண்ணெய் விட்டால் கண்கள் சுத்தமாகி விடும்.

69. எறும்புகள் வராமல் இருக்க படிகாரத்தூள் தூவி விடவும்.

70. செடிகளில் பூச்சிகள் இருந்தால் சாம்பலை தெளித்தால் போய் விடும்.

71. முட்டை ஓடுகளை தூக்கி எறியாமல் அதன் மீது ஸ்கெட்ச் பேனாவால் படம் வரைந்து சுவரில் மாட்டினால் பல்லிகள் வராது,அலங்காரமாகவும் இருக்கும்.

72. உப்பு நீரில் வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.

73. தண்ணீரில் சீரகம் போட்டு காய்ச்சி குடித்தால் குரல் வளம் பெரும்.

74. கண் எறிச்சல் தீர கண்களின் மேல் மல்லிகைப் பூக்களை வைத்து கட்டிக் கொண்டு ஓய்வெடுத்தால் குறையும்.

75. பட்சணங்களை சுடும் போது எண்ணெய் அதிகம் செலவாகாமல் இருக்க ஒரு கோலி குண்டு அளவு புளியை கொதிக்கும் எண்ணெய்யில் போடவும்.

76. பூண்டை தோல் உரிக்க பரிஜ்ஜில் வைத்து எடுத்து உரிக்கவும்.

77. தொலைபேசியை ஒரு சொட்டு 'சென்ட்'ஆல் துடைத்தால் வாசனையாக இருக்கும்.

78. துணிகளை ஊற வைக்கும் போது கலியன சாம்பூ கவர்களை போட்டு ஊற வைத்தால் துணிகள் நல்ல வாசனையுடன் இருக்கும்.

79. காலணி (ஷு ) நனைந்து விட்டால் செய்திதாளை அதனுள் நன்றாக திணித்து வைத்தால் ஈரத்தை செய்திதாள் ஊறிஞ்சிவிடும்.

80. ஷு ' மீது பழைய ஆயிண்டுமெண்டை தடவி பிறகு அதன் மேல் பாலிஷ் செய்தால் பளபளப்பாக இருக்கும்.

81. ஏர் கூலரில் சில சொட்டுகள் பர்ப்யூம் ஊற்றினால் குளிர்ந்த காற்றுடன் நல்ல நறுமானமும் வீசும்.

82.விபூதியால் பித்தளை பொருட்களை தேய்த்தால் பளபளப்பாகும்.

83. சேனைக் கிழங்கை தோல் எடுத்த பிறகே வேக வைக்க வேண்டும.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...