திங்கள், 8 ஜூலை, 2013

குப்பை தொட்டியாய் மாறிய சமூக நலக் கூடம்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம் எம் டி  எ காலனியில் மெயின் ரோட்டில் உள்ளது இந்த சமூக நலக் கூடம்.

சமூக நலக் கூடம்
பத்து வருடங்களுக்கு முன் இங்கு நடக்காத திருமணம் இல்லை.வெறும் திருமணங்கள் மட்டும் இல்லை நிச்சய தார்த்தம்,பிறந்த நாள் விழா,பள்ளி ஆண்டு விழா என மேலும் பல வகையான சமுக நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்றிருக்கின்றன .



குப்பைகளின் குவியல்

ஏதோ சில காரணங்களுக்காகஅரசாங்கம் இதன் பயன்பாட்டை நிறுத்திவிட்டதால்,இந்த சமுக நலக் கூடம் பூட்டப் பட்டது.


அன்று முதல் இந்த இடத்தை பொது மக்கள் குப்பைகளை கொட்டவும்,தங்கள் வீடு இடிபாடுகளை கொட்டவும் இந்த இடத்தை பயன்படுத்துகிறார்கள்.






பின்புறம் 
சிலர் சிறுநீர் கழிக்கவும்,சிலர் இரவில் மது பாட்டில்கள் கொண்டு வந்து மது அருந்தவும் மேலும் சிலர் புகை பிடிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.


அருகில் வசிப்பவர்கள் யாராவது தட்டி கேட்டால் எது என்ன உங்க சொத்தா என்று கேட்கிறார்கள்.
Debris along with Garbages

Community hall back side view
இங்கே நாய்களும் பூனைகளும் குட்டி போட்டு இனபெருக்கம் செய்கின்றன.இவற்றோடு போட்டி போட்டு கொண்டு கொசுக்களும் பெருகி வருகின்றன.
Using it for Parking



அரசாங்கம் எதாவது நடவடிக்கை எடுக்கும் என்று பலமுறை புகார் கொடுத்ததும் இது வரை எந்த பலனும் இல்லை.

Fenced by residents
இங்கே சேர்ந்து இருக்கும் குப்பையால் கொசுக்கள் பெருகி அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறது.
குப்பைமேடாகி போன சமுக நலக் கூடம் 
பொது மக்கள் அதிகமாக வந்து இங்கு சிறுநீர் கழிப்பதால் அங்கு ஒரே துர்நாற்றம் வீசுகிறது.இது அருகில் வசிப்பவர்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது.

இதை தடுக்க அங்கு வசிப்பவர்கள் வேலி அமைத்தும் எந்த பயனும் இல்லை.ஓரிரு நாட்களில் அதை உடைத்துக் கொண்டு மீண்டும் அதை பயன்படுத்துகிறார்கள்.

சிறுநீர் கழிக்கும் ஒருவர் 











விலங்கு கழிவுகளுடன் குப்பைகளும் சேர்ந்து துர்நாற்றம் விசுவதுடன் நோய் ஏற்படவும் ஆபாயம் இருப்பதால் அங்கு வசிப்பவர்கள் மிகுந்த அட்சம் அடைகிறார்கள்.
He is using it as a open toilet
பத்திரிகை துறையாவது எதாவது செய்யும் என்ற நம்பிக்கையில் பல முறை பத்திரிகையில் இந்த இடத்தின் நிலையை வெளியிட்டு இருந்தாலும் அரசாங்கமோ அரசியல் தலைவர்களோ அதை பற்றி கவலை படுவதாக இல்லை.


A CLOSE UP
அரசாங்கம் கூடிய விரைவில் இந்த பிரச்சணையை தீர்க்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர் பாப்போம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...