புதன், 27 ஜனவரி, 2016

டிசம்பர் 16 நிகழ்வுகள்


1431 - இங்கிலா்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.

1497 - வாஸ்கொடகாமா முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.

1598 - கொரிய, ஜப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில் கொரியா வெற்றி பெற்றது.

1653 - சேர் ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து நாடுகள் அடங்கிய பொதுநலவாயத்தின் தலைவரானார்.

1707 - ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.

1773 - அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் - அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.

1835 - நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் 530 கட்டிடங்கள் சேதமடைந்தன.

1857 - இத்தாலியின் நேப்பில்சில் இடம்பெற்ற 6.9 நிலநடுக்கம் 11,000 பேரைக் கொன்றது.

1920 - சீனாவில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.

1922 - போலந்து அரசுத்தலைவர் கேப்ரியல் நருடோவிச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1925 - இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம்.

1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் சரவாக்கீன் மிரி நகரைக் கைப்பற்றினர்.

1960 - ஐக்கிய அமெரிக்க விமானம் நியூ யோர்க்கை அண்மிக்கும் போது மோதியதில் 134 பேர் கொல்லப்பட்டனர்.

1971 - வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.

1971 - பாஹ்ரேன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1991 - கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
பிறப்புக்கள்

**************

1770 - லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜெர்மனிய மேற்கத்திய இசை இயற்றுநர் (இ. 1827)

1866 - வசிலி கண்டின்ஸ்கி, ரஷ்ய ஓவியர் (இ. 1944)

1917 - ஆர்தர் சி. கிளார்க், ஆங்கில எழுத்தாளர்

1930 - லலிதா - திரைப்பட நடிகை (திருவிதாங்கூர் சகோதரிகளில் மூத்தவர் (பத்மினி, ராகினி) (இ. 1982)

1933 - அடையார் கே. லட்சுமணன், பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர் (இ. 2014)

இறப்புகள் 

************

1916 - கிரிகோறி ரஸ்புட்டீன், ரஷ்ய மதகுரு, (பி. 1869)

1999 - ஜோசப் ஆனந்தன், தமிழ் நாடக எழுத்தாளர்

சிறப்பு நாள் 

*************

பாஹ்ரேன் - தேசிய நாள் (1971)

வங்காள தேசம் - வெற்றி நாள் (1971)

கசக்ஸ்தான் - விடுதலை நாள் (1991)

நேபாளம் - அரசியலமைப்பு சட்ட நாள் (1962)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...