ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

குங்குமத்தை எந்த விரலினால் வைக்க வேண்டும்...?

குங்குமத்தை எந்த விரலினால் வைக்க வேண்டும் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு உள்ளது. ஆனால் குங்குமத்தை ஒவ்வொரு விரலினால் வைத்துக் கொண்டால் ஒவ்வொரு பலன் கிடைக்கும். மோதிர விரலினால் வைத்துக் கொண்டால் சாந்தி, மன அமைதியும் கிட்டும். நடுவிரலினால் வைத்துக் கொண்டா ஆயுள் ஸம்ருத்தியாக் இருக்கும். பெருவிரலினால் வைத்துக் கொண்டால் சக்தி கிட்டும். ஆள்காட்டி விரலினால் வைத்துக் கொண்டால் பக்தி, முக்தி கிட்டும். பிளாஸ்டிக் பொட்டு வைத்துக் கொள்வதை விட நல்ல தரமான குங்குமத்தை வைத்துக் கொள்வதினால் கிருமி நாசமாகும். குங்குமத்தை தினந்தோறும் வைத்துக் கொள்ளுங்கள். நெற்றிப் பொட்டில் குங்குமத்தை வைத்தால் ஞான சக்கரத்தை பூஜை செய்ததாகும். அழகு, அலங்காரத்தில் ஒரு பாகம் மட்டுமே அல்லாது இவையெல்லாம் குங்குமத்தை வைத்துக் கொள்வதில் உள்ள அம்சங்கள். நாடிகள் சேரும் பாகங்களில்… நம் சரீரம் சரிவர இயங்க வேண்டும் என்றால் நாடிகள் சரியாக வேலை செய்ய வேண்டும். சரீரத்தில் இரண்டு முக்கியமான நாடிகள் உள்ளன. அவற்றில் ஒன்று ‘இட’ இரண்டாவது ‘பிங்கள’. இந்த இரண்டு நாடிகளும் நெற்றிப் பொட்டில் ஒன்று சேரும். சரீரத்தில் உள்ள அனைத்து நாடிகளுக்கும் இணைப்பாக நெற்றிப் பொட்டில் உள்ளது. இந்த இடத்தை ‘ஸுஷும்ன” நாடி என்று கூறுவர். இந்த இட்த்தில் குங்குமமோ, சந்தனமோ, விபூதியோ வைத்துக் கொள்வதன் மூலம் நாடியின் வேலை சீராக இருக்கும் என்பது ஐதீகம். அதே போல் குங்குமம் வைத்துக் கொள்வதன் மூலம் த்ருஷ்டி தோஷம் அண்டாது. குங்கும்ம் வைத்துக் கொண்டவர்களுக்கு எதிராளி மானசீகமாக வசியமாகி விடுவர். அதே போல் குங்குமத்தில் உள்ள சிவப்பு நிறம் நமக்குள் மனோசக்தி, தியாக மனப்பான்மை, பயமின்மை, பரோபகார குணம் இவற்றை அதிகரிக்கும் என்ற கருத்து உள்ளது.

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...