சனி, 30 ஏப்ரல், 2016

ஏப்ரல் 30 நிகழ்வுகள்

இன்று
ஏப்ரல் 30
நிகழ்வுகள்
*********
313 - ரோமப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு ரோமப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
1006 - மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது.
1483 - இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது அங்கு ஜூலை 23, 1503 வரை அங்கு இருந்தது.
1803 - ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.
1838 - நிக்கராகுவா மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில் இருந்து விடுதலையை அறிவித்தது.
1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியானது.
1945 - அடொல்ஃப் ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படையினர் பெர்லினில் ஜெர்மனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.
1975 - வியட்நாம் போர்: கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றினர். தென் வியட்நாமியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.
1982 - திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1991 - யாழ்ப்பாணம் நீராவியடியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
1993 - ஜெனீவாவில் ஐரோப்பிய அணுக்கருவியல் ஆய்வு அமைப்பில் உலகளாவிய வலையமைப்பு பிறந்தது.
1999 - ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது.
2006 - ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற இந்தியப் பொறியியலாளர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பிறப்புகள்
********
1777 - கார்ல் ஃப்ரெடெரிக் காஸ், கணிதவியலர் (இ. 1855)
1870 - தாதாசாஹெப் பால்கே, இந்திய திரைப்படத்துறையின் முன்னோடி (இ. 1944)
1959 - சிரீபன் கார்ப்பர், கனடாவின் 22வது பிரதமர்
1961 - ஐசேயா தாமஸ், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
**********
1945 - அடொல்ஃப் ஹிட்லர், ஜெர்மனியை ஆண்ட ஆஸ்திரிய சர்வாதிகாரி (பி. 1889)
1961 - லோங் அடிகள், யாழ்ப்பாணத்தில் பணி புரிந்த அயர்லாந்து அடிகள் (பி. 1896)
சிறப்பு நாள்
*************
வியட்நாம் - விடுதலை நாள் (1975)
மெக்சிக்கோ - சிறுவர் நாள்

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

ஏப்ரல் 29 நிகழ்வுகள்

இன்று
ஏப்ரல் 29
நிகழ்வுகள்
*********
1672 - பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டான்.
1770 - ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டான்.
1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லென்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது.
1882 - பெர்லின் நகரில் எலெக்ட்ரோமோட் எனப்படும் பேருந்து வெள்ளோட்டம் விடப்பட்டது.
1903 - கனடாவின் அல்பேர்ட்டாவில் 30 மில்லியன் கன மீட்டர் நிலச்சரிவு ஏற்பட்டதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
1916 - முதலாம் உலகப் போர்: பிரித்தானிய இந்தியப் படைகள் ஓட்டோமான் படைகளிடம் ஈராக்கின் கூட் என்ற இடத்தில் சரணடைந்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் ஜெர்மனிய இராணுவம் நேச அணிகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது.
1945 - இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தின் பல பகுதிகளிலும் உணவுப்பொதிகளை விமானத்தில் இருந்து வீசும் மானா நடவடிக்கையை ஐக்கிய இராச்சிய வான்படையினர் ஆரம்பித்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர் ஏவா பிரௌன் என்ற தனது நீண்ட நாளைய காதலியை தனது பெர்லின் சுரங்க அறையில் வைத்து மணம் புரிந்தார். இருவரும் அடுத்த நாள் ஏப்ரல் 30இல் தற்கொலை புரிந்து கொண்டனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் டாக்கவ் என்ற இடத்தில் இருந்த வதை முகாமை அமெரிக்கப் படைகள் விடுவித்தனர்.
1946 - ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஹிடெக்கி டோஜோ மற்றும் 28 முன்னாள் தலைவர்கள் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.
1970 - வியட்நாம் போர்: அமெரிக்க மற்றும் தென் வியட்நாம் படைகள் வியட் கொங் போராளிகளைத் தேடி கம்போடியாவை முற்றுகையிட்டன.
1975 - வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க குடிமக்கள் சாய்கோன் நகரை விட்டு புறப்பட்டனர்.
1986 - லொஸ் ஏஞ்சலீஸ் நகர பொது நூலகம் தீப்பிடித்ததில் 400,000 நூல்கள் அழிந்தன.
1991 - வங்காள தேசத்தில், சிட்டாகொங்கில் இடம்பெற்ற சூறாவளியில் 138,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 10 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர்.
1995 - நவக்கிரி என்ற இடத்தில் இலங்கை இராணுவத்தினரின் அவ்ரோ விமானம் 50 படையினருடன் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
2005 - 29 ஆண்டு கால முற்றுகையின் பின்னர் லெபனானில் இருந்து சிரியா முற்றாக வெளியேறியது.
2007 - வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3 மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய்க் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசித் தாக்கின.
பிறப்புகள்
*********
1818 - இரண்டாம் அலெக்சாண்டர், ரஷ்யாவின் பேரரசன் (இ. 1881)
1848 - ரவி வர்மா, இந்திய ஓவியர் (இ. 1906)
1891 - பாரதிதாசன், புரட்சிக்கவிஞர், பாவேந்தர் (இ. 1964)
1938 - திமிலை மகாலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (இ. 2010)
1957 - மேமன்கவி, ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கியப் படைப்பாளி
1970 - அன்ட்ரே அகாசி, முன்னணி டென்னிஸ் ஆட்டக்காரர்
இறப்புகள்
***********
1843 - வின்சென்ட் ரொசாரியோ, இலங்கையின் முதல் ஆயர்.
1980 - ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக், ஆங்கிலத் திரைப்பட இயக்குனர் (பி. 1899)
2015 - மயூரன் சுகுமாரன், இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (பி. 1981)
2015 - கோபுலு, தமிழக ஓவியர் (பி. 1924)
சிறப்பு நாள்
************
ஜப்பான் - தேசிய நாள்
அனைத்துலக நடன நாள்

புதன், 27 ஏப்ரல், 2016

ஏப்ரல் 27நிகழ்வுகள்

இன்று
ஏப்ரல் 27
நிகழ்வுகள்
************
1124 - முதலாம் டேவிட் ஸ்கொட்லாந்து மன்னனானான்.
1296 - இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்னன் டன்பார் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஸ்கொட்லாந்தரைத் தோற்கடித்தான்.
1521 - நாடுகாண் பயணி பேர்டினண்ட் மகலன் பிலிப்பீன்சில் பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.
1522 - மிலான் நகரைக் கைப்பற்ற இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மற்றும் சுவிட்சர்லாந்துப் படையினரை ஸ்பானியப் படையினர் தோற்கடித்தனர்.
1565 - பிலிப்பீன்சின் முதலாவது ஸ்பானியக் குடியேற்ற நாடு சேபு (Cebu) அமைக்கப்பட்டது.
1667 - பார்வையற்ற ஜோன் மில்ட்டன் தான் எழுதிய பரடைஸ் லொஸ்ட் என்ற காவியத்தின் காப்புரிமையை £10க்கு விற்றார்.
1813 - 1812 போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் ஒண்டாரியோவின் தலைநகர் யோர்க்கை கைப்பற்றினர்.
1840 - லண்டனில் புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிக்கல் நாட்டப்பட்டது.
1865 - 2,400 பேரை ஏற்றிச் சென்ற ஐக்கிய அமெரிக்காவின் சுல்டானா என்ற நீராவிக்கப்பல் டென்னசிக்கருகில் வெடித்து மூழ்கியதில் 1,700 பேர் கொல்லபட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கூட்டணிப் படையினராவார்.
1904 - அவுஸ்திரேலியாவின் முதலாவது தேசிய அரசை அவுஸ்திரேலியத் தொழிற் கட்சி அமைத்தது.
1909 - துருக்கியின் சுல்த்தான் இரண்டாம் அப்துல் ஹமீட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் ஐந்தாம் மெஹ்மெட் ஆட்சிக்கு வந்தான்.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் கிரேக்கத் தலைநகர் ஏத்தன்ஸ் நகரை அடைந்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: கடைசி நாசி ஜெர்மன் படைகள் பின்லாந்தில் இருந்து வெளியேறினர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: நாசிக் கட்சியின் அதிகார பூர்வ பத்திரிகையான வோல்கிஷெர் பியோபாக்டர் நிறுத்தப்பட்டது.
1959 - மக்கள் சீனக் குடியரசில் இருந்து கடைசி கனேடிய மதபரப்புனர் வெளியேறினர்.
1960 - பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் ஐநாவின் நேரடி ஆட்சியின் கீழிருந்த டோகோ விடுதலை அடைந்தது.
1961 - சியேரா லியோனி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1967 - கனடாவின் மொன்ட்ரியால் நகரில் எக்ஸோ 67 கண்காட்சி ஆரம்பமானது.
1974 - அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனுக்கெதிராக வாஷிங்டன் டிசியில் 10,000ற்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றனர்.
1978 - இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் ஆப்கானித்தானில் போர் தொடங்கியது.
1981 - Xerox PARC முதன் முறையாக கணனி mouse ஐ அறிமுகப்படுத்தியது.
1992 - சேர்பியா மற்றும் மொண்டெனேகிரோவை உள்ளடக்கிய யூகொஸ்லாவிய கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது.
1993 - காபோனில் இடம்பெற்ற விமான விபத்தில் காம்பியாவின் தேசிய காற்பந்தாட்ட அணியினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.
1994 - தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் இடம்பெற்றது.
2001 - தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை (ஹீனி கல) விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. 600-ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.
2002 - நாசாவின் பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தடவையாக தொடர்புகள் கிடைத்தது.
2007 - எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரில் இருந்த சோவியத்தின் செம்படையின் நினைவுச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.
பிறப்புகள்
***********
1723 - பிலிப்பு தெ மெல்லோ, கொழும்பில் பிறந்த கிறிஸ்தவத் தமிழ் அறிஞர் (இ. 1790)
1852 - சர் பி. தியாகராய செட்டி, திராவிட அரசியல் தலைவர் (இ. 1925)
1902 - கந்தமுருகேசனார், ஈழத்துப்பெரியார், மூதறிஞர் (இ. 1965)
1912 - சோரா சேகல், இந்தியத் திரைப்பட நடிகை (இ. 2014)
1942 - வலேரி பொல்யாக்கொவ், ரஷ்ய விண்வெளி வீரர்
1945 - பிரபஞ்சன், தமிழ் எழுத்தாளர், விமர்சகர்
இறப்புகள்
************
1521 - பெர்டினென்ட் மகலன், போர்த்துக்கேய மாலுமி (பி. 1480)
2015 - க. அருணாசலம், ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1946)
சிறப்பு நாள்
**************
சியேரா லியோனி - விடுதலை நாள் (1961)
டோகோ - விடுதலை நாள் (1960)

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

ஏப்ரல் 26 நிகழ்வுகள்

இன்று
ஏப்ரல் 26
நிகழ்வுகள்
"*********
1802 - நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினான்.
1805 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் லிபியாவின் டேர்ன் நகரைக் கைப்பற்றினர்.
1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோசப் ஜோன்ஸ்டன் தலைமையில் கூட்டமைப்புப் படையினர் வட கரோலினாவின் டேர்ஹம் நகரில் கூட்டணியினரிடம் சரணடைந்தனர்.
1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றனர்.
1937 - ஸ்பானிய உள்நாட்டுப் போர்: ஸ்பெயினின் கேர்னிக்கா நகரம் ஜெர்மனியினரின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
1945 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியின் கடைசி வெற்றிகரமான தாக்குதல் போட்சன் என்ற இடத்தில் இடம்பெற்றது.
1954 - பிரெஞ்சு இந்தோசீனா, மற்றும் வியட்நாமில்வில் அமைதியைக் கொண்டுவரும் முகாமாக ஜெனீவாவில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.
1962 - நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.
1964 - தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு தான்சானியா என ஒரு நாடாகியது.
1981 - மட்டக்களப்பில் பட்டித்திடலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1982 - தென் கொரியாவில் முன்னாள் காவல்துறையினன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1986 - உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.
1994 - ஜப்பானில் சீன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 264 பேர் கொல்லப்பட்டனர்.
1994 - உச்சி குவார்க் (Top Quark) உபஅணுத் துணிக்கை ஓன்றைத் தாம் அவதானித்ததாக இயற்பியலாளர்கள் அறிவித்தனர்.
2005 - 29-ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.
பிறப்புகள்
*********
1564 - வில்லியம் சேக்சுபியர், ஆங்கில எழுத்தாளர் (இ. 1616)
1762 - சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1827)
1906 - ஜி. பட்டு ஐயர், திரைப்பட நடிகர், இயக்குனர்
1970 - சரண்யா, திரைப்பட நடிகை.
இறப்புகள்
***********
1920 - சிறீனிவாச இராமானுசன், கணித மேதை (பி. 1887)
1897 - பெ. சுந்தரம் பிள்ளை, மனோன்மணீயம் என்ற நாடக நூலைப் படைத்த தமிழறிஞர் (பி. 1855)
1977 - எஸ். ஜே. வி. செல்வநாயகம், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் (பி. 1898)
சிறப்பு நாள்
**********
தான்சானியா - தேசிய நாள்
அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்

திங்கள், 25 ஏப்ரல், 2016

ஏப்ரல் 25 நிகழ்வுகள்

இன்று
ஏப்ரல் 25
நிகழ்வுகள்
*************
1607 - எண்பதாண்டுப் போர்: கிப்ரால்ட்டரில் டச்சுக் கடற்படையினர் ஸ்பானிய கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர்.
1829 - மேற்கு அவுஸ்திரேலியாவில் சார்ல்ஸ் ஃபிரெமாண்டில் சலேஞ்சர் என்ற கப்பலில் வந்து தரையிறங்கி சுவான் ஆற்று குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் வாஷிங்டன், டிசியை அடைந்தனர்.
1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டணிப் படைகள் டேவிட் பராகுட் தலைமையில் லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரை கூட்டமைப்பினரிடம் இருந்து கைப்பற்றினர்.
1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினர் பெரும் வெற்றி பெற்றனர்.
1898 - ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயின் மீது போரை அறிவித்தது.
1915 - முதலாம் உலகப் போர்: ஆஸ்திரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியை முற்றுகையிட்டனர்.
1916 - அயர்லாந்தில் இராணுவச் சட்டத்தை ஐக்கிய இராச்சியம் பிறப்பித்தது.
1916 – அன்சாக் நாள் முதற் தடவையாக நினைவு கூரப்பட்டது.
1945 - நாசி ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது.
1961 - ரொபர்ட் நொய்ஸ் ஒருங்கிணைந்த மின்சுற்றுக்கான (integrated circuit) காப்புரிமத்தைப் பெற்றார்.
1966 - தாஷ்கெண்ட் நகரத்தின் பெரும் பகுதி நிலநடுக்கத்தால் அழிந்தது. 300,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1974 - போர்த்துக்கலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.
1982 - காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலியப் படைகள் முழுவதுமாக சினாய் தீபகற்பத்தில் இருந்து வெளியேறியது.
1983 - பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கிரகத்தின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.
1983 - ஹிட்லரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் "ஹிட்லரின் நாட்குறிப்புகள்" நூலின் முதல் பகுதியை ஜெர்மனியின் "ஸ்டேர்ன்" இதழ் வெளியிட்டது.
1986 - சுவாசிலாந்தின் மன்னனாக மூன்றாம் முசுவாட்டி முடிசூடினார்.
1988 - இரண்டாம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு இஸ்ரேல் மரண தண்டனை விதித்தது.
2005 - இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்களால் 1937 இல் களவாடப்பட்ட 1700-ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு எதியோப்பியாவுக்கு கொண்டுவரப்பட்டது.
2005 - ஜப்பானில் தொடருந்து விபத்தில் 107 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் தற்கொலைதாரியினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்து 5 பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
************
1599 - ஒலிவர் குரொம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர், அரசியல்வாதி (இ. 1658)
1874 - மார்க்கோனி, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இத்தாலியர் (இ. 1937)
1906 - புதுமைப்பித்தன், தமிழக எழுத்தாளர் (இ. 1948)
1940 - அல் பசீனோ, அமெரிக்கத் திரைப்பட நடிகர்
1949 - டொமினிக் ஸ்ட்ராஸ்-கான், பிரெஞ்சு பொருளியலாளர், அரசியல்வாதி
இறப்புகள்
************
1744 - ஆன்டர்சு செல்சியசு, சுவீடிட வானியலாளர் (பி. 1701)
1989 - வ. சுப. மாணிக்கம், தமிழறிஞர் (பி. 1917
2005 - சுவாமி இரங்கநாதானந்தர், இந்திய மதகுரு (பி. 1908)
2007 - ஆர்தர் மில்ட்டன், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1928)
சிறப்பு நாள்
***********
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து - ஆன்சாக் நாள்
போர்த்துக்கல் - விடுதலை நாள் (1974)
இத்தாலி - நாசிகளிடம் இருது விடுதலை (1945)

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

ஏப்ரல் 24 நிகழ்வுகள்


ஏப்ரல் 24
நிகழ்வுகள்
*************"
1704 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப் பத்திரிகை "த பொஸ்டன்" நாளிதழ் வெளியிடப்பட்டது.
1863 - கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1877 - ஓட்டோமான் பேரரசு மீது ரஷ்யா போரை அறிவித்தது.
1908 - லூசியானாவில் புயல் காரணமாக 143 பேர் கொல்லப்பட்டனர்.
1913 - வானளாவிக் கோபுரம் வூல்வேர்த் கோபுரம் நியூயார்க் நகரில் கட்டப்பட்டது.
1915 - ஆர்மீனிய இனப்படுகொலை: கொன்ஸ்டன்டீனபோலில் பல்லாயிரக்கணக்கான ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏனையோர் நாட்டைவிட்டு விரட்டப்பட்டனர்.
1955 - இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவெறி, மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1961 - 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த "வாசா" என்ற சுவீடனின் கப்பல் மீட்டெடுக்கப்பட்டது.
1965 - டொமினிக்கன் குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1967 - சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் அவரது குதிகுடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்.
1968 - மொரீசியஸ் ஐநாவின் உறுப்பு நாடாகியது..
1970 - முதல் சீனச் செய்மதி டொங் ஃபாங் ஹொங் 1 ஏவப்பட்டது.
1970 - காம்பியா பொதுநலவாய அமைப்பினுள் குடியரசாகியது.
1981 - முதலாவது ஐபிஎம் தனி மேசைக் கணினி அறிமுகமானது.
1990 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் தொலைக்காட்டியை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1993 - இந்தியாவில் பஞ்சாயத்து இராச்சியம் அமைக்கப்பட்டது.
1993 - லண்டன் நகரில் மேற்கொள்ளப்பட்ட சுமையுந்து குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு 44 பேர் படுகாயமடைந்தனர்.
2006 - நேபாளத்தில் மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து 2002 இல் கலைக்கபட்ட நாடாளுமன்றத்தை மீள அமைக்க மன்னர் உத்தரவிட்டார்.
2007 - பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
பிறப்புகள்
*********
1581 - வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சுப் புனிதர் (இ. 1660)
1820 - ஜி. யு. போப், தமிழுக்கு சேவை செய்த அமெரிக்கர் (இ. 1908)
1880 - கிடியொன் சண்டுபெக்கு, சுவீடிய-அமெரிக்கப் பொறியாளர், பல்லிணைவுப் பட்டிகை தயாரித்தவர் (இ. 1954)
1889 - ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ், ஆங்கிலேய அரசியல்வாதி (இ. 1952)
1929 - ராஜ்குமார், இந்திய நடிகர் (இ. 2006)
1934 - ஜெயகாந்தன், இந்திய எழுத்தாளர் (இ. 2015)
1941 - ரிச்சர்ட் ஆல்புரூக், அமெரிக்க ஊடகவியலாளர், தூதுவர் (இ. 2010)
1941 - ஜான் வில்லியம்சு, அமெரிக்க இசைக்கலைஞர்
1947 - ரோஜர் கோர்ன்பெர்க், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
1951 - தம்பிஐயா தேவதாஸ், ஈழத்து எழுத்தாளர்
1973 - சச்சின் டெண்டுல்கர், இந்தியத் துடுப்பாளர்
1987 - வருண் தவான், இந்திய நடிகர்
இறப்புகள்
***********
1622 - சிக்மரிங்ஞன் பிதேலிஸ், செருமானியப் புனிதர் (பி. 1577)
1731 - டானியல் டீஃபோ, ஆங்கிலேய உளவாளி, ஊடகவியலாளர் (பி. 1660)
1960 - மேக்ஸ் வோன் உலோ, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1879)
1967 - விளாடிமிர் கொமரோவ், உருசிய விமானி, விண்வெளிவீரர் (பி. 1927)
1976 - மார்க் டோபே, அமெரிக்க ஓவியர் (பி. 1890)
2011 - சத்திய சாயி பாபா, தென்னிந்திய ஆன்மிக குரு (பி. 1926)
சிறப்பு நாள்
**************
காம்பியா - குடியரசு நாள் (1970)

சனி, 23 ஏப்ரல், 2016

காக்கா முட்டை...

படித்ததில் பிடித்தது:-

இக்காலத்தில் சில குழந்தைகளின், 'ஐக்யூ' பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது.
சிறு பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் நண்பர் ஒருவர்.
சென்னை, திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியையாகப் பணி புரியும், அவர் சொன்னது:
சாதாரணமா தனியார் பள்ளிகளில், தமிழை தீண்டத்தகாத மொழியாகப் பார்த்து, ஒதுக்கி வைப்பாங்க.
ஆனா, நான் பணிபுரியும் பள்ளி கொஞ்சம் வித்தியாசமானது;
இங்கே, தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுப்பாங்க.
சமீபத்தில், யூ.கே.ஜி., குழந்தைகளுக்கு, படம் பார்த்து கதை சொல்லும் வகுப்பு எடுத்துட்டு இருந்தேன்.
அதில் ஒரு கதையில், ஆலமரத்தில் கூடுகட்டி, முட்டையிட்டிருக்கும் காக்கையின் முட்டைகளை, அதே மரத்தின் பொந்தில் வசிக்கும் பாம்பு, 'ஸ்வாகா' செய்து வருவதையும், பாம்பை பழிவாங்க நினைக்கும் காகம், ராணியின் முத்து மாலையை, காவலர்கள் கண்முன்னே கவர்ந்து வந்து, அதை பாம்பு வசிக்கும் பொந்தில் போட, பாம்பை கொன்று, முத்து மாலையை, காவலர்கள் எடுத்துச் சென்று, காகத்தை அதன் பிரச்னையில் இருந்து விடுவிப்பதையும் குழந்தைகளுக்கு விளக்கினேன்.
தலையைத் தலையை ஆட்டியபடி எல்லா குழந்தைகளும் கதையை ரசிக்க, ஒரேயொரு குழந்தை மட்டும் எழுந்து நின்று,
'இது என்ன கதை மிஸ்?' என்றாள்.
'இது தான் நீதிக்கதை...' என்றேன்.
'இந்தக் கதையில என்ன நீதி இருக்கு?' எனக் கேட்டாள்.
'தன்னைவிட பலசாலியான எதிரிகளை, தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்ங்கிறது தான் நீதி...' என்றேன்.
'அதுக்காக காகம் என்ன செஞ்சது?' என்றாள்.
'ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டது...' என்றேன்.
உடனே, அக்குழந்தை, 'ஒருத்தருக்கு சொந்தமான பொருளை, அவங்களுக்கு தெரியாம எடுத்துட்டு வந்தா, அது திருட்டு தானே...
அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க மிஸ்...
திருடறது தப்பு இல்லயா?' எனக் கேட்டாள்.
குழந்தையின் அந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
'திருதிரு' வென்று விழித்தேன். குழந்தை மேலும் தொடர்ந்தாள்...
'என்ன தான் காக்காவோட முட்டைகளை பாம்பு சாப்பிட்டாலும், அதுக்காக பாம்பை கொலை செய்றது தப்பில்லயா மிஸ்... பாம்பும் ஒரு உயிர் தானே...' என்றாள்.
நானும், 'தப்பு தான்!' என்றேன்.
உடனே, 'இந்தக் கதையில திருடுறதையும், கொலை செய்றதையும் தானே எங்களுக்கு சொல்லித் தந்திருக்கீங்க;
இது நீதிக் கதையா?' எனக் கேட்டாள்.
வயசுக்கு மீறி பேசும் குழந்தைகளை அதுவரை திரைப்படங்கள்ல மட்டும் தான், பார்த்திருக்கிறேன்; அன்று நேரிலேயே பாத்தேன்.
இதே கதையை தான், நம் பெற்றோரும், நாமும் படித்துள்ளோம். யாராவது இது குறித்து, இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்துள்ளோமா?
அக்குழந்தை, 'காக்காவோட முட்டைகளும் பத்திரமா இருக்கணும்; பாம்பும் சாகக் கூடாது. அதுக்கு வேற வழி தோணலியா மிஸ்?' எனக் கேட்டாள்.
'தோணலியே கண்ணு...' என்று, என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன்.
ஆனாலும், உள்ளுக்குள் குறுகுறுப்பு! குறை கூறத் தெரிந்த குழந்தைக்கு, அதற்கு வழி கூறும் ஐடியா தெரிந்திருக்குமோ என நினைத்து,
'குட்டிமா... இதுக்கு வேற ஏதாவது வழி இருக்குதா செல்லம்...' என்றேன்.
உடனே அது, 'இருக்கே!' என்று கூறி, 'காகம் சாது; பாம்பு துஷ்டன். 'துஷ்டனை கண்டா தூர விலகு'ன்னு நீங்க தானே சொல்லி இருக்கீங்க...
அதனால, பொந்து இல்லாத வேற ஒரு மரத்துல போய் காக்கா கூடு கட்டி, முட்டை போடலாம்ல்லே மிஸ்...
அப்ப, முட்டையும் பத்திரமாக இருக்கும்; பாம்பும் சாகாதுல்ல...' என்றாள்.
இதைக் கேட்டதும், உறைந்து போனேன்.
இப்படியொரு கோணத்தில், நாம் ஏன் இதுவரை சிந்தித்து பார்த்ததில்லை என, நினைச்சேன் எனக் கூறி முடித்தார் அந்த இளம் ஆசிரியை.
நம்முடைய தலைமுறை வரை கேள்வி கேட்காமல் பெரியவர்கள் சொல்வதை, 'பிளைண்ட்' டாக நம்பிக் கொண்டிருந்தோம்;
இக்காலத்து பிள்ளைகள், துணிந்து கேள்வி கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர். வரவேற்கத்தக்க முன்னேற்றம் தான் என எண்ணினேன்!
   

தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள்

1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா.
பி. சேதுப்பிள்ளை

1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி

1957 - (விருது வழங்கப்பட வில்லை)

1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின்
உரைநடை) - சி. ராஜகோபாலச்சாரி

1959 - (விருது வழங்கப்பட வில்லை)

1960 - (விருது வழங்கப்பட வில்லை)

1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார்

1962 - அக்கரைச்சீமை (பயண நூல்) - சோமு (மீ. ப. சோமசுந்தரம்)

1963 - வேங்கையின் மைந்தன் - அகிலன் (பி. வி.
அகிலாண்டம்)

1964 - (விருது வழங்கப்பட வில்லை)

1965 - ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி. ஸ்ரீ
ஆச்சார்யா

1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை
வரலாறு) - ம. பொ. சிவஞானம்

1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி. வா.
ஜகன்னாதன்

1968 - வெள்ளைப் பறவை (கவிதை) - அ. சீனிவாச
ராகவன்

1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன்

1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி

1971 - சமுதாய வீதி (நாவல்) - நா. பார்த்தசாரதி

1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) -
ஜெயகாந்தன்

1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்

1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய
விமர்சனம்) - கே. டி. திருநாவுக்கரசு

1975 - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய
விமர்சனம்) - ஆர். தண்டாயுதம்

1976 - (விருது வழங்கப்பட வில்லை)

1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி

1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
(விமர்சனம்) - வல்லிக்கண்ணன்

1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) -
தி. ஜானகிராமன்

1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்

1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - மா. ராமலிங்கம்

1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) -
பி. எஸ். ராமையா

1983 - பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய
விமர்சனம்) - தொ. மு. சிதம்பர ரகுநாதன்

1984 - ஒரு காவிரியைப் போல - லட்சுமி திரிபுரசுந்தரி

1985 - கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) -
அ. ச. ஞானசம்பந்தன்

1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய
விமர்சனம்) - க. நா. சுப்பிரமணியம்

1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்

1988 - வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) - வா.
செ. குழந்தைசாமி

1989 - சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) - லா. ச.
ராமாமிர்தம்

1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு. சமுத்திரம்

1991 - கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) - கி.
ராஜநாராயணன்

1992 - குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) -
கோவி. மணிசேகரன்

1993 - காதுகள் (நாவல்) - எம். வி. வெங்கட்ராம்

1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)

1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்

1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு)
- அசோகமித்ரன்

1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முகமது
மீரான்

1998 - விசாரணைக் கமிஷன் (நாவல்) - சா. கந்தசாமி

1999 - ஆலாபனை (கவிதைகள்) - அப்துல் ரகுமான்

2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்
(விமர்சனம்) - தி. க. சிவசங்கரன்

2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி. சு. செல்லப்பா

2002 - ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) - சிற்பி பாலசுப்ரமணியம்

2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) -
வைரமுத்து

2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) - ஈரோடு
தமிழன்பன்

2005 - கல்மரம் (நாவல்) - ஜி. திலகவதி

2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) -
மு.மேத்தா

2007 - இலையுதிர் காலம் (நாவல்) - நீல. பத்மநாபன்

2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை
பொன்னுசாமி

2009 - கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) - புவியரசு

2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதை) (சிறுகதைகள்)
- நாஞ்சில் நாடன்

2011 - காவல் கோட்டம் (நாவல்) - சு. வெங்கடேசன்

2012 - தோல் (நாவல்) - டி. செல்வராஜ்

2013 - கொற்கை(புதினம்) - ஜோ டி குரூஸ்

2014 - அஞ்ஞாடி - பூமணி

நீயே ஜெயிப்பாய....

படித்ததில் பிடித்தது:-

விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு !
தோற்றால் புலம்பாதே . . .
போராடு !
கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு !
தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு !
நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி !
ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் !
நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை !
கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு !
உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு !
கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு !
மொத்தத்தில் நீ பலமாவாய் . . .
சித்தத்தில் நீ பக்குவமாவாய் . . .
உன்னால் முடியும் . . .
உயர முடியும் . . .
உதவ முடியும் . . .
உனக்கு உதவ நீ தான் உண்டு !
உன்னை உயர்த்த நீ தான் . . . நம்பு . .
உன்னை மாற்ற நீ தான் . . . முடிவெடு . . .
நீயே பாறை . . .நீயே உளி . . .
நீயே சிற்பி . . .நீயே செதுக்கு . . .
நீயே விதை . . .நீயே விதைப்பாய் . . .
நீயே வளர்வாய் . . .நீயே அனுபவிப்பாய் . . .
நீயே நதி . . . நீயே ஓடு . . .
நீயே வழி . . . நீயே பயணி . . .
நீயே பலம் . . . நீயே சக்தி . . .
நீயே ஜெயிப்பாய் .

ஏப்ரல் 23 நிகழ்வுகள்

இன்று
ஏப்ரல் 23
நிகழ்வுகள்
*********
1343 - எஸ்தோனியாவில் ஜெர்மனியர்களுக்கெதிரான கலவரங்களில் 1,800 ஜெர்மனியர்கள் கொல்லப்பட்டனர்.
1635 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
1639 - புனித ஜார்ஜ் கோட்டை மதராசில் கட்டப்பட்டது.
1660 - சுவீடன், மற்றும் போலந்து ஆகியவற்றிற்கிடையில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.
1867 - சக்கரம் ஒன்றில் படங்களைச் செருகி தொடர் படமாகக் காட்டக்கூடிய சோயிட்ரோப் (zoetrope) என்ற கருவிக்கான காப்புரிமத்தை வில்லியம் லிங்கன் என்பவர் பெற்றார்.
1896 - நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் (Koster and Bial's Music Hall) "வாட்வில்லி" குழுவினரால் "இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் விட்டாஸ்கோப் என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.
1905 - யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலில் தானுந்து கொண்டுவரப்பட்டது.
1932 - நெதர்லாந்தில் 153-ஆண்டுகள் பழமையான டி ஆட்ரியான் என்ற காற்றாலை தீயில் எரிந்து அழிந்தது.
1940 - மிசிசிப்பியில் நாட்செஸ் என்ற இடாத்தில் இரவு விடுதி ஒன்று தீப்பற்றியதில் 198 பேர் கொல்லப்பட்டனர்.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முப்படைகள் தாக்குதலை ஆரம்பிக்க முன்னர் கிரேக்க மன்னர் இரண்டாம் ஜோர்ஜ் ஏதன்ஸ் நகரை விட்டு வெளியேறினார்
1948 - அரபு-இஸ்ரேல் போர், 1948: இஸ்ரேலின் முக்கிய துறைமுகம் ஹைஃபா பாலஸ்தீனர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
1966 - முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது
.
1982 - கொங்க் குடியரசு அமைக்கப்பட்டது
1984 - எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
1987 - ஐக்கிய அமெரிக்காவின் கொனெக்ரிகட் மாநிலத்தில் பிரிட்ஜ்போர்ட் என்ற இடத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 28 கட்டிடத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1990 - நமீபியா ஐநா மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்புகளில் சேர்க்கப்பட்டது.
1993 - இந்திய அரசியல் கட்சி இந்திய தேசிய லீக் உருவானது.
1993 - இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
1993 - எரித்தீரியாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் எதியோப்பியாவில் இருந்து பிரிவதற்கு எரித்திரியர்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்தனர்.
1997 - அல்ஜீரியாவில் ஒமாரியா என்ற இடத்தில் 42 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பிறப்புகள்
*********
1791 - ஜேம்ஸ் பியூக்கானன், ஐக்கிய அமெரிக்காவின் 15வது அதிபர் (இ. 1868)
1858 - மாக்ஸ் பிளாங்க், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய இயற்பியலாளர் (இ. 1947)
1867 - ஜொகான்னெஸ் ஃபிபிகர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1928)
1897 - லெஸ்டர் பியர்சன், நோபல் பரிசு பெற்ற கனடியப் பிரதமர் (இ. 1972)
1902 - ஹால்டோர் லாக்ஸ்னெஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1998)
1935 - இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (இ. 2009)
1938 - எஸ். ஜானகி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
1977 - கால் பென், குஜராத்தி-அமெரிக்க நடிகர்
இறப்புகள்
***********
1616 - வில்லியம் ஷேக்ஸ்பியர், ஆங்கில நாடக எழுத்தாளர் (பி. 1564)
1951 - சார்ல்ஸ் டோவ்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1865)
1992 - சத்யஜித் ராய், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் (பி. 1921)
1993 - லலித் அத்துலத்முதலி, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் (பி. 1942)
2007 - போரிஸ் யெல்ட்சின், முன்னாள் ரஷ்ய அதிபர் (பி. 1931)
2009 - ரூபராணி ஜோசப், இலங்கை மலையகப் பெண் எழுத்தாளர்
சிறப்பு நாள்
**********
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

ஏப்ரல் 22 நிகழ்வுகள்

இன்று
ஏப்ரல் 22
நிகழ்வுகள்
************
1500 - பிரேசிலைக் கண்ட முதல் ஐரோப்பியர் போர்த்துக்கீசரான பேதுரோ கப்ரால்.
1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெஞ்சமின் கிரியெர்சன் தலைமையில் நடு மிசிசிப்பியைத் தாக்கினர்.
1889 - நடுப் பகலில் பல்லாயிரக் கணக்கானோர் காணிகளைக் கைப்பற்றுவதற்காக ஓடினார்கள். சில மணி நேரங்களில் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரம் மற்றும் கத்ரி (Guthrie) ஆகியவற்றில் 10,000 பேர் அங்கிருந்த வெற்றுக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறினர்.
1898 - அமெரிக்க கடற்படையினர் கியூபாவின் துறைமுகங்களை முற்றுகையிட்டு ஸ்பானிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினர்.
1912 - ரஷ்யாவின் பொதுவுடமைக் கட்சியின் பத்திரிகை ப்ராவ்டா சென் பீட்டர்ஸ்பேர்க் இலிருந்து வெளிவர ஆரம்பித்தது.
1915 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஈப்ர (Ypres) ஜெர்மனி முதன் முதலாக குளோரீன் வாயுவை வேதியியல் ஆயுதமாகப் பாவித்தது.
1944 - இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் நியூ கினியின் ஒல்லாந்தியா என்ற இடத்தில் தரையிறங்கினர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: குரோவேசியாவில் ஜசெனோவாச் வதை முகாம் கைதிகள் சிறையுடைப்பில் ஈடுபட்டபோது 520 கைதிகள் கொல்லப்பட்டனர். 80 பேர் தப்பியோடினர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை இலகுவாகக் கைப்பற்றியதைக் கேள்வியுற்ற ஹிட்லர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
1970 - முதலாவது பூமி நாள் கொண்டாடப்பட்டது.
1983 - ஹிட்லரின் நாட்குறிப்புகள் கிழக்கு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டதாக டேர் ஸ்டேர்ன் என்ற ஜெர்மனிய இதழ் அறிவித்தது.
1992 - மெக்சிக்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 206 பேர் கொல்லப்பட்டு 500 பேர் வரையில் படுகாயமுற்றனர்.
1997 - அல்ஜீரியாவில் கெமிஸ்ரி என்ற இடத்தில் 93 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1997 - பெருவின் தலைநகர் லீமாவில் ஜப்பானிய தூதுவர் இல்லத்தில் 126 நாட்களாகப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 71 பேர் அரசுப் படைகளின் தாக்குதலின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
2000 - ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.
2004 - வட கொரியாவில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 150 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - நேபாளத்தில் மன்னருக்கெதிராக கலகத்தில் ஈடுபட்ட மக்களாட்சிக்கு ஆதரவானோர் மீது காவல்துறையினர் சுட்டதில் 243 பேர் காயமுற்றனர்.
2006 - இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
பிறப்புகள்
**********
1451 - முதலாம் இசபெல்லா, எசுப்பானிய அரசி (இ. 1504)
1724 - இம்மானுவேல் கண்ட், ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவவியலாளர் (இ. 1804)
1870 - விளாதிமிர் லெனின், ரஷ்யப் புரட்சியாளர், லெனினிசம் என்ற கோட்பாட்டின் நிறுவுனர் (இ. 1924)
1881 - அலெக்சாண்டர் கெரென்சுகி, உருசியாவின் 10வது பிரதமர் (இ. 1970)
1899 - விளாடிமிர் நபோக்கோவ், உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 1977)
1904 - ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1967)
1909 - ரீட்டா லெவி மோண்டால்சினி, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற இத்தாலியர் (இ. 2012)
1916 - எகுடி மெனுகின், அமெரிக்க-சுவிசு இசையமைப்பாளர் (இ. 1999)
1937 - ஜேக் நிக்கல்சன், அமெரிக்க நடிகர்
1940 - க. சட்டநாதன், ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர்
1981 - ஜொனாதன் ட்ரொட், பிரித்தானியத் துடுப்பாளர்
1982 - காகா, பிரேசில் காற்பந்து வீரர்
இறப்புகள்
***********
296 - காயுஸ் (திருத்தந்தை)
1616 - மிகெல் தே செர்வாந்தேஸ், எசுப்பானிய எழுத்தாளர் (பி. 1547)
1989 - எமீலியோ சேக்ரே, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க-இத்தாலியர் (பி. 1905)
1994 - ரிச்சர்ட் நிக்சன், 37வது அமெரிக்க அரசுத்தலைவர் (பி. 1913)
2002 - லிண்டா லவ்லேஸ், அமெரிக்க நடிகை (பி. 1949)
2013 - லால்குடி ஜெயராமன், வயலின் மேதை (பி. 1930)
சிறப்பு நாள்
*******
பூமி நாள்

வியாழன், 21 ஏப்ரல், 2016

ஏப்ரல் 21 நிகழ்வுகள்


ஏப்ரல் 21
நிகழ்வுகள்
************
கிமு 753 - ரொமூலஸ் மற்றும் ரேமுஸ் இருவரும் ரோம் நகரை அமைத்தனர்.
கிமு 43 - ரோமப் பேரரசு: ஆவுலஸ் ஹேர்ட்டியஸ் உடன் இடம்பெற்ற சமரில் மார்க் அந்தோனி மீண்டும் தோற்றான். ஆனால், ஹேர்ட்டியஸ் இச்சமரில் கொல்லப்பட்டான்.
1509 - ஏழாம் ஹென்றியின் இறப்புக்குப் பின்னர் அவனது மகன் எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1526 - பானிப்பட்டில் முதலாவது போர் டில்லியின் சுல்தானுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம்பெற்றது. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினான்.
1792 - பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய டைராடெண்டெஸ் தூக்கிலிடப்பட்டான்.
1863 - கடவுளின் தூதர் தாமே என பகாவுல்லா பகிரங்கமாக அறிவித்தார். ரித்வான் தோட்டத்தில் செய்த இந்த அறிவிப்பு நாள் உலகம் முழுவதும் உள்ள பஹாய்களால் ‘ரித்வான் முதல்’ நாள் என விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.
1916 - இலங்கையில் அமெரிக்க மிசனறிகள் ஒன்றுகூடி முதன் முதலில் ஒரு திருச்சபையை ஆரம்பித்தனர்.
1822 - இலங்கையில் அமெரிக்கத் திருச்சபையின் குருக்களாக (pastor) முதற்தடவையாக உள்ளூரில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். ஜோர்டன் லொட்ஜ், நத்தானியேல் நைல்ஸ், சார்ல்ஸ் ஹொட்ஜ், எபனேசர் போர்ட்டர் ஆகியோர் தெரிவானார்கள்.
1944 - பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1945 - இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் சோவியத் படைகள் ஜெர்மனியின் உயர் தலைமைப்பீடத்தைத் தாக்கினர்.
1960 - பிரசீலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது.
1967 - கிரேக்கத்தில் பொதுத்தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில் இராணுவத் தளபதி ஜோர்ஜ் பப்படபவுலோஸ் ஆட்சியைக் கைப்பற்றி அடுத்த ஏழாண்டுகளுக்கு பதவியில் இருந்தார்.
1975 - வியட்நாம் போர்: தெற்கு வியட்நாம் அதிபர் நூயென் வான் டியூ சாய்கோனை விட்டு வெளியேறினார்.
1987 - இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனார்.
1989 - பெய்ஜிங் நகரில் தியனன்மென் சதுக்கத்தில் கிட்டத்தட்ட 100,000 மாணவர்கள் சீர்திருத்தத் தலைவர் ஹீ யாபாங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டனர்.
1994 - சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்தார்.
பிறப்புகள்
**********
1651 - யோசப் வாஸ் அடிகள், இலங்கையில் சேவையாற்றிய கத்தோலிக்க மதகுரு (இ. 1711)
1837 - பிரெட்ரிக் பேஜர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1922)
1864- மக்ஸ் வெபர், ஜெர்மனிய சமூகவியலாளர் (இ. 1920)
1882 - பேர்சி பிரிட்ஜ்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1961)
1889 - பவுல் காரெர், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (இ. 1971)
1925 - வாண்டுமாமா, குழந்தை எழுத்தாளர் (இ. 2014)
1926 - இரண்டம் எலிசபெத், ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி
1956 - மங்கள சமரவீர, இலங்கை அரசியல்வாதி
இறப்புகள்
**********
1910 - மார்க் டுவைன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1835)
1938 - முகமது இக்பால், பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞர் (பி. 1877]])
1946 - ஜான் மேனார்ட் கெயின்ஸ், பிரித்தானியப் பொருளியலாளர் (பி. 1883)
1964 - பாரதிதாசன், புரட்சிக் கவிஞர், பாவேந்தர் (பி. 1891)
1965 - எட்வர்ட் ஆப்பில்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
1978 - டி.ஆர்.மகாலிங்கம், தமிழ்த்திரைப்பட, நாடக நடிகர் (பி. 1923)
சிறப்பு நாள்
********
ரித்வான் முதல் நாள் - பஹாய் சமயம்

திங்கள், 18 ஏப்ரல், 2016

ஏப்ரல் 19 நிகழ்வுகள்

இன்று
ஏப்ரல் 19

நிகழ்வுகள்
***********
1587 - ஸ்பானிய போர்க் கப்பலை சேர் பிரான்சிஸ் டிரேக் மூழ்கடித்தார்.

1775 - அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது.

1810 - வெனிசுவேலாவில் இராணுவ ஆட்சி நிறுவப்பட்டது.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களினார் ஐக்கிய அமெரிக்கப் படைகள் தாக்கப்பட்டனர். நான்கு படையினரும் 12 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

1892 - ஐக்கிய அமெரிக்காவில் முதன் முதலில் தானுந்து ஒன்றை சார்ல்ஸ் டூரியா என்பவர் மசாசுசெட்சில் ஸ்ப்றிங்ஃபீல்ட் என்ற இடத்தில் செலுத்தினார்.

1902 - குவாத்தமாலாவில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் 2,000 பேர் இறந்தனர்.

1904 - கனடாவின் டொரோண்டோ நகரத்தின் பெரும் பகுதிகள் தீயினால் அழிந்தது.

1928 - ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் 125வதும் கடைசியுமான தொகுதி வெளிவந்தது.

1936 - பாலஸ்தீனர்களின் ஆங்கிலேயர்களுக்கெதிரான முதலாவது கிளர்ச்சி தொடங்கப்பட்டது.

1954 - உருது, மற்றும் வங்காள மொழி ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.

1971 - முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1975 - இந்தியாவின் முதலாவது செய்மதி ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.

1988 - அன்னை பூபதி மட்டக்களப்பில் ஆக்கிரமிப்பாளருக்கெதிராக உண்ணா நோன்பிருந்து இறந்தார்.

1989 - அமெரிக்காவின் அயோவா என்ற கப்பலில் பீரங்கி மேடை ஒன்று வெடித்ததில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

1993 - ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் டாவீடீயன் என்ற மதக்குழு ஒன்றின் கட்டிடத்தை 51 நாட்களாக சுற்றி வளைத்த அமெரிக்க எஃப்பிஐ இன் முற்றுகை கட்டிடம் தீப்பற்றியதில் முடிவுக்கு வந்தது. மதக்குழுத் தலைவர் டேவிட் கொரேஷ் உட்பட 87 பேர் கொல்லப்பட்டனர்.

1995 - அமெரிக்காவின் ஓக்லகாமா நகரத்தில் நடுவண் அரசுக் கட்டிடம் ஒன்று தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானாதில் 168 பேர் கொல்லப்பட்டனர்.

1995 - சந்திரிகா - விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதனை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் இரண்டு பீரங்கிக் கப்பல்கள் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.

1999 - ஜெர்மனியின் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது.

2006 - நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறப்புகள்
**********
1832 - ஜொசே ஐசாகிர், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1916)

1912 - கிளென் சீபோர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1999)

1957 - முகேஷ் அம்பானி, இந்தியாவின் தொழிலதிபர்

இறப்புகள்
**********
1882 - சார்ள்ஸ் டார்வின், பரிணாமக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் (பி. 1809)

1906 - பியரி கியூரி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1859)

1988 - அன்னை பூபதி, ஈழத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (பி. 1932)

1998 - ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ எழுத்தாளர் (பி. 1914)

2013 - சிவந்தி ஆதித்தன் தினத்தந்தி உரிமையாளர் (பி. 1936)

2013 - செ. குப்புசாமி தொழிற்சங்கத் தலைவர் (பி. 1926)

சிறப்பு நாள்
*************
தமிழ் ஈழம் - நாட்டுப்பற்றாளர் நாள்

சியெரா லியொன் - குடியரசு நாள் (1971)

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

ஏப்ரல் 15 நிகழ்வுகள்

இன்று
ஏப்ரல் 15
நிகழ்வுகள்
**************
1450 - பிரான்சின் போர்மிக்னி என்ற இடத்தில் ஆங்கிலேயரின் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்ததன் மூலம் வடக்கு பிரான்சில் ஆங்கிலேயரின் அதிகாரம் முடிவுக்கு வந்தது.
1755 - சாமுவேல் ஜோன்சன் என்பவர் தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார்.
1815 - சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது.
1865 - ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்காவின் 17வது அதிபரானார்.
1892 - ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
1912 - இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் பனிப்பாறை ஒன்றுடன் மோதிய பிரித்தானியாவின் டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியதில் 1503 பேர் பலியாயினர்.
1923 - இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பாவிக்கப்பட்டது.
1940 - இரண்டாம் உலகப் போர்: நாசிப் படைகளினால் கைப்பற்றப்பட்டிருந்த நோர்வேயின் நார்விக் நகர் மீது கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் 200 போர் விமானங்கள் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகர் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1943 - கூட்டுப் படைகளின் போர் விமானம் ஒன்றில் இருந்து மினேர்வா தானுந்து தொழிற்சாலை மீது வீசப்பட்ட குண்டு குறி தவறி பெல்ஜியத்தின் மோர்ட்செல் நகர் மீது வீழ்ந்ததில் 936 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியில் நாசிகளின் பேர்ஜேன்-பெல்சன் வதை முகாம் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டது.
1986 - லிபியா மீது ஐக்கிய அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்தியது.
1989 - இங்கிலாந்தின் ஹில்ஸ்பரோ காற்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 96 பேர் இறந்தனர்.
1989 - சீனாவில் தியனன்மென் சதுக்க ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
1997 - மக்காவில் ஹஜ் பயணிகளின் முகாம் ஒன்றில் தீப்பற்றியதில் 341 பேர் கொல்லப்பட்டனர்.
2002 - ஏர் சீனாவின் போயிங் விமானம் தென் கொரியாவில் வீழ்ந்ததில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
1976 - தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.
பிறப்புகள்
**********
1452 - லியனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர் (இ. 1519)
1469 - குரு நானக் தேவ், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1539)
1707 - லியோனார்டு ஆய்லர், சுவிட்சர்லாந்து நாட்டின் கணிதவியலாளர் (இ. 1783)
1874 - ஜொகான்னஸ் ஸ்டார்க், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (இ. 1957)
1896 - நிக்கொலாய் செமியோனொவ், நோபல் பரிசு பெற்ற இரசியர் (இ. 1986)
1907 - நிக்கலாஸ் டின்பேர்ஜென், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1988)
இறப்புகள்
************
1865 - ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்க அதிபர் (பி. 1809)
1980 - ஜீன்-போல் சார்ட்டெர், நோபல் பரிசினை ஏற்க மறுத்த பிரெஞ்சு மெய்யியலாளர் (பி. 1905)

புதன், 13 ஏப்ரல், 2016

ஏப்ரல் 13 நிகழ்வுகள்

இன்று
ஏப்ரல் 13

நிகழ்வுகள்
***********
1111 - ஐந்தாம் ஹென்றி புனித ரோம் பேரரசின் மன்னனாக முடி சூடினான்.

1605 - ரஷ்யாவின் சார் மன்னன் பொரிஸ் குடுனோவ் மரணமானான். இரண்டாம் ஃபியோதர் சார் மன்னனானான்.

1829 - பிரித்தானிய நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு மத உரிமை அளித்தது.

1849 - ஹங்கேரி நாடு குடியரசானது.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: சம்ட்டர் கோட்டை அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளிடம் சரணடைந்தது.

1868 - பிரித்தானிய மற்றும் இந்தியப் படைகள் மக்டாலாவைக் கைப்பற்றியதில் அபினீசியப் போர் முடிவுக்கு வந்தது.

1873 - ஐக்கிய அமெரிக்காவில் லூசியானாவில் கோல்ஃபாக்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையில் 105 கறுப்பினத்தவரும் 3 வெள்ளையினத்தவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

1919 - ஜாலியன்வாலா பாக் படுகொலை: அம்ரித்சரில் ஜாலியன்வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் உயிரிழந்தனர்.

1930 - மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.

1939 - இந்தியாவில் இந்திய செம்படை என்ற இராணுவ அமைப்பு பிரித்தானியர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்ட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

1941 - ஜப்பானுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கட்டின் என்ற இடத்தில் சோவியத் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலந்து போர்க் கைதிகளின் புதைகுழிகளைத் தாம் கண்டுபிடித்ததாக ஜெர்மனி அறிவித்தது.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியில் கார்டெலகான் என்ற இடத்தில் ஆயிரம் போர் மற்றும் அரசியல் கைதிகள் நாசிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1953 - இயன் ஃபிளமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார்.

1954 - காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.

1970 - அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிஜன் தாங்கி வெடித்தது.

1974 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக செய்மதி வெஸ்டார் 1 ஏவப்பட்டது.

1975 - லெபனானில் 27 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1979 - இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது
.
1984 - இந்தியா காஷ்மீரின் சியாச்சென் கிளேசியரை ஆக்கிரமித்தது.

1987 - மக்காவு தீவை மக்கள் சீனக் குடியரசிடம் 1999 இல் ஒப்படைக்கும் ஒப்பந்தம் போர்த்துக்கலுக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்தானது.

1997 - டைகர் வூட்ஸ் கோல்ஃப் மாஸ்ரர்ஸ் வென்ற இளம் வீரரானார்.

2006 - கூகிள் காலண்டர் வெள்ளோட்டம் விடப்பட்டது.

2007 - பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

2012- வட கொரியா ஏவிய ஊனா-3 என்ற ஏவூர்தி வானில் வெடித்துச் சிதறியது.

பிறப்புகள்
***********
1743 - தோமஸ் ஜெபர்சன், மூன்றாவது அமெரிக்க அரசுத்தலைவர் (இ. 1826)

1905 - புருனோ ரோசி, இத்தாலிய அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1993)

1913 - மே. ரா. மீ. சுந்தரம்], எழுத்தாளர், கவிஞர் (இ. 1995)

1930 - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1959)

1934 - டேம் ஜேன் குட்டால், சிம்பன்சி பற்றி ஆராய்ந்த ஆங்கிலேயப் பெண்மணி

1949 - கிறித்தபர் ஃகிச்சின்சு, அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர்

1960 - ரவூப் ஹக்கீம், இலங்கை முசுலிம் அரசியல்வாதி

1962 - நிருபமா ராஜபக்ச, இலங்கை அரசியல்வாதி

1963 - காரி காஸ்பரோவ், உருசிய சதுரங்க ஆட்டக்காரர்.

1979 - பேரன் டேவிஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்
*********
1918 - இலாவர் கோர்னிலோவ், உருசிய இராணுவத் தளபதி (பி. 1870)

1973 - டட்லி சேனாநாயக்க, இலங்கையின் அரசியல்வாதி, முன்னாள் பிரதமர் (பி. 1911)

2015 - கூன்டர் கிராசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1927)

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

காற்றின் பெயர்கள்.......

காற்றின் பெயர்கள்.......
கண்ணுக்கே தெரியாத காற்றை விவரிக்க தமிழில் இத்தனை சொற்களா ? உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு ! இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் வாழவேண்டும் !
(அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள்:
(1) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
(2) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
(3) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
(4) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
(ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:
(1) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"
(2) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"
(3) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"
(4) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"
(5) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"
(6) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"
(7) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"
(8) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று"
இப்பேற்பட்ட மொழியை தமிழர்கள் புறக்கணிப்பது வேதனையிலும், வேதனை.

ஏப்ரல் 12 நிகழ்வுகள்

இன்று
ஏப்ரல் 12

நிகழ்வுகள்
************
1633 - ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின.

1832 - இலங்கையில் கட்டாய அரச சேவையை ஒழிக்கும் ஆணையைபிரித்தானிய அரசர் பிறப்பித்தார்.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகள் ஐக்கிய அமெரிக்காவின் படைகளை தென் கரோலினாவில் தாக்கியதுடன் போர் வெடித்தது.

1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியில் சரணடைந்த அனைத்து ஆபிரிக்க அமெரிக்க படையினர்களும் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமாவில் மொபைல் என்ற நகரம் கூட்டணி இராணுவத்திடம் வீழ்ந்தது.

1927 - ஷங்காயில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

1955 - ஜோனாஸ் சால்க் என்பவரினால் கண்டுபிடிக்கப்பட்ட போலியோ நோய்த் தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது.

1961 - சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரானார்.

1980 - லைபீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சாமுவேல் டோ நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 130 ஆண்டுகால மக்களாட்சி அமைப்பு முறை முடிவுக்கு வந்தது.

1981 - முதலாவது மீள் விண்ணோடம் கொலம்பியா விண்ணோடம் விண்வெளியை நோக்கி ஏவப்பட்டது.

1983 - பிரித்தானியத் திரைப்படமான காந்தி எட்டு ஒஸ்கார் விருதுகளை வென்றது.

1996 - யாஹூ! இனது முதற் பொதுப் பங்கு வழங்கல்.

2007 - இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது.

பிறப்புகள்
*************
கிமு 599 - மகாவீர், ஜெய்னிச மதத்தை உருவாக்கியவர். (இ. கிமு 527)

1884 - ஓட்டோ மெயெரொஃப், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1951)

1932 - லக்ஸ்மன் கதிர்காமர், இலங்கை அரசியல்வாதி (இ. 2005)

இறப்புகள்
************
1945 - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஐக்கிய அமெரிக்காவின் 32 ஆவது அதிபர் (பி. 1882)

1971 - ஈகர் தம், நோபல் பரிசு பெற்ற உருசியர் (பி. 1895)

1997 - ஜார்ஜ் வால்ட், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1903)

2006 - ராஜ்குமார், கன்னட நடிகர் (பி. 1929)

சிறப்பு நாள்
************
வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்

திங்கள், 11 ஏப்ரல், 2016

ஏப்ரல் 11 நிகழ்வுகள்

இன்று
ஏப்ரல் 11
நிகழ்வுகள்
*************
1079 - போலந்து மன்னன் இரண்டாம் பொலேஸ்லாவ் என்பவனின் கட்டளைக்கிணங்க கிராக்கோவ் ஆயர் ஸ்டானிஸ்லாஸ் தூக்கிலிடப்பட்டார்.
1831 - உருகுவேயில் சல்சிபுதிஸ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்.
1865 - ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார்.
1899 - ஸ்பெயின் புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தது.
1905 - ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.
1921 - விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.
1955 - ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியது. பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
1957 - பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்டது.
1965 - ஐக்கிய அமெரிக்காவில் ஆறு மத்திய மேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 256 பேர் கொல்லப்பட்டனர்.
1970 - அப்போலோ 13 ஏவப்பட்டது.
1979 - தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓட்டம்.
1981 - தெற்கு லண்டனில் பிரான்க்ஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் கலவரத்தில் 300 காவற்துறையினரும் 65 பொதுமக்களும் காயமுற்றனர்.
1987 - இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் லண்டனில் கைச்சாத்தானது.
2002 - வெனிசுவேலாவில் அதிபர் ஹியூகோ சாவெஸ் இற்கெதிராக இராணுவப் புராட்சி இடம்பெற்றது.
2007 - அல்ஜீரியாவின் தாலைநகர் அல்ஜியேர்ஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 33 பேர் கொல்லப்பட்டு 222 பேர் காயமுற்றனர்.
2012 - இந்தோனேசியாவில் சுமாத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
பிறப்புகள்
***********
1869 - கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (இ. 1944)
1910 - ரெங்கநாதன் சீனிவாசன், மொரிசியசு அரசியல்வாதி (இ. 1958)
இறப்புகள்
*************
1918 - ஓட்டோ வாக்னர், ஆஸ்திரியக் கட்டிடக்கலைஞர் (பி. 1841)

பூனை குறுக்கே போனால்....

Today mgs
பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும் .
மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால் , இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது . அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள் . அங்கே சிறுவர்கள், வயதானவர்கள் , பெண்கள் மட்டுமே இருப்பார்கள் .
ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக , அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.
மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர் .
பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து , யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.
அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள் .
நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம் .
பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.
பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.
இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம் ?????
பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம் !!!!!!
இனிய காலை வணக்கம்.

இயற்கை மருத்துவம்

1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி.""

16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு 🌿""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும் 🍒"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை 🌾(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""

25) முகம் அழகுபெற 🍇""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும் 🍃"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும் 🌱“கீழாநெல்லி”

மனித உறவுகள் சீராக இருக்க..... A to Z


A - Appreciation
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.
B - Behaviour
புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
C - Compromise
அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதிர்கள்; நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
D - Depression
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.
E - Ego
மற்றவர்களை விட உங்களையே உயர்த்தி கர்வப்படாதீர்கள்.
F - Forgive
கண்டிக்கக்கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.
G - Genuineness
எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விடயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.
H - Honesty
தவறு செய்தால் உடனே மன்னிப்புக் கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.
I - Inferiority Complex
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் சிறியவன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.
J - Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம் அது கொண்டவனையே அழிக்கும்.
K - Kindness
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
L - Loose Talk
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.
M - Misunderstanding
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.
N - Neutral
எப்போதும் எந்த விடயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்.
O - Over Expectation
அளவுக்கு அதிகமாகவும் தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள்.
P - Patience
சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்.
Q - Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம் தெரியாததைப் பேசுவது தான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.
R - Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.
S - Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
T - Twisting
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.
U - Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.
V - Voluntary
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திரமால் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள். பின்பு, அதற்கு பதில் கொடுங்கள்.
W - Wound
எந்தப் பேச்சும், செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
X - Xero
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.
Y - Yield
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.
Z - Zero
இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியம் ஆகும்.

மார்ச் 6 நிகழ்வுகள்

இன்று
மார்ச் 6
நிகழ்வுகள்
*************
1079 - ஒமார் கயாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்.
1447 - ஐந்தாம் நிக்கலாஸ் திருத்தந்தை ஆனார்.
1479 - கனாரி தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது.
1521 - பேர்டினண்ட் மகலன் குவாம் தீவை அடைந்தார்.
1788 - கைதிகளைக் குடியமர்த்தும் திட்டத்தில் முதற்படியாக முதலாவது தொகுதி கைதிகள் அடங்கிய கப்பல் நோர்போக் தீவை அடைந்தது.
1790 - மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1836 - டெக்சாசில் அலாமோ நகரை மெக்சிக்கோ படைகள் தாக்கிக் கைப்பற்றினர்.
1869 - திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது ஆவர்த்தன அட்டவணையை சமர்ப்பித்தார்.
1940 - குளிர்காலப் போர்: பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் தற்காலிகப் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
1945 - ருமேனியாவில் கம்யூனிச அரசு பதவிக்கு வந்தது.
1946 - வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்ஸ் வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோசீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.
1953 - ஸ்டாலினின் மறைவையடுத்து சோவியத்தின் பிரதமராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயலாளராகவும் கியோர்கி மாலென்கோவ் பதவியேற்றார்.
1957 - ஐக்கிய இராச்சியக் குடியேற்ற நாடுகளான கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்தானிய டொகோலாந்து ஆகியன இணைந்து கானா குடியரசு என்ற பெயரில் விடுதலை பெற்றன.
1964 - காசியஸ் கிளே தனது பெயரை அதிகார பூர்வமாக முகமது அலி என மாற்றிக் கொண்டார்.
1967 - திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
1975 - ஈரானும் ஈராக்கும் தமது எல்லை தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்தன.
1987 - பிரித்தானியாவின் எம்எஸ் ஹெரால்ட் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 193 பேர் கொல்லப்பட்டனர்.
2007 - இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
************
1475 - மைக்கலாஞ்சலோ, இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியர் (இ. 1564)
1508 - ஹுமாயூன், இரண்டாவது முகலாயப் பேரரசர் (இ. 1556)
1806 - எலிசபெத் பிரௌனிங், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1861)
1869 - சேர் ஜேம்ஸ் எமர்சன் டென்னெண்ட், எழுத்தாளர், பயணி, இலங்கைக்கான பிரித்தானிய காலனித்துவ செயலாளர் (பி. 1804)
1927 - கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (இ. 2014)
1937 - வலன்டீனா டெரெஷ்கோவா, சோவியத் விண்வெளி வீரர், விண்ணுக்குச் சென்ற முதற் பெண்
1948 - ஸ்டீவன் சுவார்ட்சு, அமெரிக்கப் பாடலாசிரியர், இசையமைப்பாளர்
1953 - மாதவ் குமார் நேபாள், நேபாளத்தின் 34வது பிரதமர்
1954 - ம. சா. அறிவுடைநம்பி, தமிழ்ப் பேராசிரியர் (இ. 2014)
1972 - சக்கீல் ஓனீல், அமெரிக்கப் பாடகர்
இறப்புகள்
***********
1866 - வில்லியம் ஹியூவெல், ஆங்கிலேய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1794)
1900 - காட்லீப் டைம்லர், செருமானியத் தொழிலதிபர் (பி. 1834)
1939 - லிண்டெமன், செருமானியக் கணிதவியலாளர் (பி. 1852)
1973 - பெர்ல் பக், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1892)
1981 - ஜார்ஜ் கிரே, ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1893)
1982 - அய்ன் ரேண்ட், உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1905)
1986 - ஜோர்ஜியா ஓ'கீஃப், அமெரிக்க ஓவியர் (பி. 1887)
2000 - எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (பி. 1905)
2006 - கே. ஷங்கர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1926)
2015 - கிஷோர், தமிழ்த் திரைப்படத் தொகுப்பாளர் (பி. 1978)
சிறப்பு நாள்
********
கானா - விடுதலை நாள் (1957)

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...