ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

ஏப்ரல் 10 நிகழ்வுகள்

இன்று
ஏப்ரல் 10

நிகழ்வுகள்
***********
1658 - ஊர்காவற்துறைக் கோட்டை டச்சுக்காரரினால் கைப்பற்றப்பட்டது.

1710 - காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன.

1741 - புரூசியா ஆஸ்திரியாவை மோல்விட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வெற்றி கண்டது.

1790 - ஐக்கிய அமெரிக்காவில் காப்புரிமம் (Patent) பற்றிய விதிகள் எழுதப்பட்டன.

1815 - இந்தோனீசியாவில் டம்போரா மலை தீக்கக்கியதில் பல தீவுகள் அழிந்தன. 71,000 பேர் கொல்லப்பட்டனர்.

1821 - கொன்ஸ்டண்டீனோபோலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி துருக்கியர்களினால் தூக்கிலிடப்பட்டார்.

1826 - துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.

1848 - இங்கிலாந்தில் கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 250 பேர் கொல்லப்பட்டனர்.

1864 - முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னனாக முடி சூடினான்.

1868 - அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய மற்றும் இந்தியக் கூட்டுப் படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 எதியோப்பியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய/பிரித்தானியப் படையினரில் இருவர் மாட்டுமே கொல்லப்பட்டனர்.

1869 - கியூபாவில் கியூபா புரட்சிக் கட்சி ஜொசே மார்ட்டீயினால் தொடங்கப்பட்டது.

1912 - டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.

1919 - மெக்சிக்கோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1963 - ஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி 129 பேருடன் காணாமல் போனது.

1972 - வியட்நாம் போர்: அமெரிக்க விமானங்கள் வடக்கு வியட்நாமில் குண்டுகளை வீசின.

1979 - டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

1984 - ஈழப்போர்: பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.

1985 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.

1991 - இத்தாலியின் மொபி பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல் லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதியதில் 140 பேர் கொல்லப்பட்டனர்.

1992 - லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம் ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.

1998 - அயர்லாந்து குடியரசுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்த பெல்பாஸ்ட் உடன்பாடு எட்டப்பட்டது.

2002 - விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.

2006 - இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்
************
1870 (பழைய முறை) - விளாடிமிர் லெனின் (இ. 1924)

1887 - பெர்னாடோ ஹொசே, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1971)

1898 - ஆபிரகாம் கோவூர், பகுத்தறிவாளர், உளவியல் வல்லுனர் (இ. 1878)

1917 - ரொபேர்ட் வூட்வார்ட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1979)

1918 - ஜோர்ன் அட்சன், சிட்னி ஒப்பேரா மாளிகையை வடிவமைத்தவர் (இ. 2008)

1927 - மார்ஷல் நிரென்பேர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

இறப்புகள்
*********
1585 - பாப்பரசர் 13வது கிரெகரி, பி. 1502)

1688 - பெர்னாவோ டி குவைறோஸ், இந்தியாவில் சமய போதகராக வந்த போர்த்துக்கல் நாட்டவர் (பி. 1617)

1931 - கலீல் ஜிப்ரான், லெபனான் கவிஞர், ஓவியர் (பி. 1883)

1995 - மொரார்ஜி தேசாய், இந்தியாவின் முன்னாள் பிரதமர் (பி. 1896)

2012 - என்.வரதராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர்

2015 - ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாளர், வர்ணனையாளர் (பி. 1930)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...