செவ்வாய், 5 ஏப்ரல், 2016

ஏப்ரல் 5 நிகழ்வுகள்


இன்று
ஏப்ரல் 5

நிகழ்வுகள்
***********
1614 - வர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடி போக்கஹொண்டாஸ் ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள்.

1654 - ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது.

1722 - டச்சு மாலுமி ஜேக்கப் ரோகவீன் ஈஸ்டர் தீவைக் கண்டுபிடித்தார்.

1792 - அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் முதற் தடவையாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.

1804 - முதற்தடவையாக விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது.

1818 - ஜோஸ் டெ சான் மார்ட்டின், பெர்னார்டோ ஓ'ஹிகின்சு தலைமையில் சிலியின் விடுதலை இயக்கம் வெற்றி கண்டது. 2,000 எசுப்பானியர்களும், 1000 சிலியர்களும் உயிரிழந்தனர்.

1879 - பொலிவியா, மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது.

1897 - கிரேக்கத்துக்கும் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.

1930 - மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்தார்.

1932 - பின்லாந்தில் மதுவிலக்கு கொள்கை முடிவுக்கு வந்தது.

1936 - மிசிசிப்பியில் சுழற்காற்று தாக்கியதில் 233 பேர் கொல்லப்பட்டனர்.

1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் மூழ்கின.

1944 - இரண்டாம் உலகப் போர்: கிளெய்சோரா என்ற கிரேக்க நகரில் 270 உள்ளூர் மக்கள் ஜெர்மனியினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1945 - பனிப்போர்: யுகோசுலாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார்.

1946 - 11 மாதங்கள் ஆக்கிரமிப்பின் பின்னர் சோவியத் படைகள் டென்மார்க் தீவான போர்ன்ஹோல்மை விட்டு விலகின.

1949 - அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் தீப்பிடித்ததில் 77 பேர் கொல்லப்பட்டனர்.

1955 - ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியிலிருந்து வின்ஸ்டன் சேர்ச்சில் விலகினார்.

1956 - பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபருடன் போரை அறிவித்தார்.

1956 - இலங்கைப் பொதுத்தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன வெற்றி பெற்றது.

1957 - இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.

1964 - பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.

1971 - இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் தென் பகுதிகளில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1976 - மக்கள் சீனக் குடியரசில் தியனன்மென் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெற்றது.

1981 - தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

1998 - அகாசி கைக்ஜோ, உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம், சப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது.

பிறப்புகள்
**********
1588 - தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1679)

1827 - ஜோசப் லிஸ்டர், ஆங்கிலேய மருத்துவர் (இ. 1912)

1900 - ஸ்பென்சர் ட்ரேசி, அமெரிக்க நடிகர் (இ. 1967)

1908 - ஜெகசீவன்ராம், இந்தியாவின் 4வது துணைப் பிரதமர் (இ. 1986)

1920 - ஆர்தர் ஹெய்லி, ஆங்கிலேய-கனடிய எழுத்தாளர் (இ. 2004)

1933 - க. கைலாசபதி, இலங்கை திறனாய்வாளர், தமிழறிஞர் (இ. 1982)

1937 - ஜோசப் லெலிவெல்ட், அமெரிக்க எழுத்தாளர்

1947 - குளோரியா மகபகல்-அர்ரொயோ, பிலிப்பீன்சின் 14வது அரசுத்தலைவர்

1958 - லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர் (இ. 2009)

இறப்புகள்
***********
1928 - ராய் கில்னர், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1890)

1957 - ராம. அழகப்பச் செட்டியார், இந்திய தொழிலதிபர் (பி. 1909)

1962 - ஆனந்த சமரக்கோன், சிங்கள இசைக் கலைஞர், பாடலாசிரியர் (பி. 1911)

1964 - டக்ளசு மக்கார்த்தர், அமெரிக்க ஜெனரல் (பி. 1880)

1975 - சங் கை செக், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1887)

1976 - ஹோவார்ட் ஹியூஸ், அமெரிக்க பொறியாளர், இயக்குனர் (பி. 1905)

1992 - சாம் வோல்ற்றன், அமெரிகத் தொழிலதிபர், வோல் மார்ட் நிறுவனர் (பி. 1918)

1993 - திவ்யா பாரதி, இந்திய நடிகை (பி. 1974)

1994 - கர்ட் கோபேன், அமெரிக்கப் பாடகர் (பி. 1967)

2008 - சார்ள்டன் ஹெஸ்டன், அமெரிக்க நடிகர் (பி. 1923)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...