புதன், 6 ஏப்ரல், 2016

ஏப்ரல் 6 நிகழ்வுகள்

இன்று
ஏப்ரல் 6

நிகழ்வுகள்
*************
கிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.

1782 - தாய்லாந்து மன்னன் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டான். முதலாம் ராமா மன்னனாக முடி சூடினான்.

1814 - நெப்போலியன் பொனபார்ட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.

1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரிச்மண்ட் நகரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கூட்டமைப்பின் இராணுவத்தினர் தமது கடைசிச் சமரை வடக்கு வேர்ஜீனியாவில் நடத்தினர்.

1869 - செலுலோயிட் கண்டுபிடிக்கப்பட்டது.

1896 - 1,500 ஆண்டுகளாக ரோம் பேரரசர் முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.

1917 - முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி மீது போரை அறிவித்தது.

1919 - மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்..

1936 - ஐக்கிய அமெரிக்கா, ஜோர்ஜியாவில் சுழற்காற்று தாக்கியதில் 203 பேர் கொல்லப்பட்டனர்.

1941 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியா மற்றும் கிரேக்கத்தை ஜெர்மனி முற்றுகையிட்டது.

1965 - "ஏளி பேட்" (Early Bird) என்ற தொடர்பாடற் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது.

1968 - இண்டியானா மாநிலத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 41 பேர் கொல்லப்பட்டு, 150 காயமடைந்தனர்.

1973 - பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1994 - ருவாண்டா மற்றும் புருண்டி அதிபர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டாவில் இனப்படுகொலைகள் ஆரம்பமானது.

1998 - இந்தியாவைத் தாக்கக்கூடியதான நடுத்தர ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்தது.

2005 - குர்தியத் தலைவர் ஜலால் தலபானி ஈராக் அதிபரானார்.

பிறப்புகள்
*********
1483 - ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர் (இ. 1520)

1815 - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1876

1901 - பியர் ஜார்ஜியோ ஃபிராசாதி, இத்தாலிய ஆர்வலர் (இ. 1925)

1928 - ஜேம்ஸ் டூயி வாட்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

1931 - சுசித்ரா சென், வங்காளத் திரைப்பட நடிகை (இ. 2014)

1938 - கோ. நம்மாழ்வார், இயற்கை ஆர்வலர் (இ. 2013)

1956 - திலீப் வெங்சர்கார், இந்தியத் துடுப்பாளர்.

1963 - ராஃபாயெல் கொறேயா, எக்குடோர் அரசுத்தலைவர்

இறப்புகள்
*******
1199 - இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் (பி. 1157)

1520 - ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர் (பி. 1483)

1528 - ஆல்பிரெஃக்ட் டியுரே, செருமானிய ஓவியர் (பி. 1471)

1971 - இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி, உருசிய-அமெரிக்க இசையமைப்பாளர் (பி. 1882)

1992 - ஐசாக் அசிமோவ், உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1920)

2011 - சுஜாதா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1952)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...