வெள்ளி, 8 ஏப்ரல், 2016

ஏப்ரல் 8 நிகழ்வுகள்

இன்று
ஏப்ரல் 8

நிகழ்வுகள்
**********
217 - ரோம் பேரரசின் மன்னன் கரகல்லா படுகொலை செய்யப்பட்டான்.

1767 - தாய்லாந்தின் அயுத்தயா இராச்சியம் பர்மியரிடம் வீழ்ந்தது.

1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டான்.

1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானாவில் மான்ஸ்ஃபீல்ட் என்ற இடத்தில் கூட்டமைப்பு படைகள் கூட்டுப் படைகளை தோற்கடித்தன.

1866 - ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு எதிராக இத்தாலியும் புரூசியாவும் அணி திரண்டன.

1867 - முதலாவது எக்ஸ்போ கண்காட்சி பாரிசு நகரில் ஆரம்பமானது.

1919 - பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகாத்மா காந்தி டில்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

1929 - டில்லி நடுவண் அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பத்துகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர்.

1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் பிலிப்பீன்சின் பட்டான் மாநிலத்தைக் கைப்பற்றினர்.

1950 - இந்தியாவும் பாக்கித்தானும் லியாக்கத்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1957 - எகிப்தில் சூயஸ் கால்வாய் மீளத்திறக்கப்பட்டது.

1973 - சைப்பிரசில் 32 குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன.

1985 - போபால் பேரழிவு: போபாலில் நச்சு வாயுக் கசிவினால் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிகழ்வுக்காக இந்தியா யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது.

2000 - அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் கொல்லப்பட்டனர்..

2004 - சூடான் அரசுக்கும் இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

பிறப்புகள்
***********
1883 - ஆர். பி. கைக்வின், ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 1972)

1892 - ரிச்சர்ட் நியூட்ரா, ஆத்திரிய-அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (இ. 1970)

1892 - மெரி பிக்ஃபோர்ட், கனடிய-அமெரிக்க நடிகை (இ. 1979)

1911 - மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1997)

1938 - கோபி அன்னான், 7வது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்

1947 - ராபர்ட் கியோசாகி, அமெரிக்கத் தொழிலதிபர்

1949 - ஜோன் மட்டன், ஆங்கிலேய திரைப்பட இயக்குனர்

1954 - கோ. வா. இலோகநாதன், இந்திய-அமெரிக்க பொறியியலாளர் (இ. 2007)

1983 - அல்லு அர்ஜுன், இந்திய நடிகர்

இறப்புகள்
***********
1857 - மங்கள் பாண்டே, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படை வீரர் (பி. 1827)

1973 - பாப்லோ பிக்காசோ, எசுப்பானிய ஓவியர் (பி. 1881)

2013 - மார்கரெட் தாட்சர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1925)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...