புதன், 13 ஜூலை, 2016

அழகு குறிப்புகள் - 4

பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை 'நற நற'வென அரைத்து தயிருடன் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடுங்கள். சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி விடும்.

ஒரே நாளில் முகத்தில் உள்ள பிம்பிளை மறைய வைக்கும் சில இயற்கை வழி தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்தால், இது சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது.

அதிலும் பிம்பிள் அதிகம் இருந்தால், தக்காளியின் சாற்றினை தினமும் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சீக்கிரம் பிம்பிள் மறையும்.

முட்டை உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். குறிப்பாக முட்டையில் உள்ள புரோட்டீன் சரும செல்களுக்கு மிகவும் நல்லது. அத்தகைய முட்டையின் வெள்ளைக்கருவில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து கழுவ முகம் பளிச்சென்று மாறும்.

முட்டையின் வெள்ளைக்கருவில் தயிர் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி, 15 நிமிடம் கழித்து அலச, தலைமுடி பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்.

தேன் மிகச்சிறந்த மாய்ஸ்சுரைசர், டோனர் மற்றும் கிளின்சர். இந்த தேனை தினமும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கருவளையம் நீங்கி, கண்களும் பொலிவோடு இருக்கும்.

1 டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடியில், சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பற்களில் தடவி பிரஷ் செய்து வர, வாய் துர்நாற்றம், பல் வலி போன்றவை நீங்கும். குறிப்பாக இந்த முறையை கைவிரலால் பிரஷ் செய்வது நல்லது.

10 துளிகள் ரோஸ் வாட்டரில், 6 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் அவை முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் எண்ணெய்ப்பசைகளை முற்றிலும் வெளியேற்றி, பருக்களை வேகமாக போக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகரில் தலைமுடிக்கான நன்மைகள் அதிகம் உள்ளது. இது மயிர் கால்களைத் தூண்டி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது ஸ்கால்ப்பின் pH அளவை சீராகப் பராமரித்து, ஸ்கால்ப்பை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசமஅளவில் எடுத்து கலந்து, தலைக்கு ஷாம்பு போட்ட பின், இறுதியில் இக்கலவையால் தலைமுடியை அலச வேண்டும்.

கற்றாழை ஜெல்லில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக நிறைந்துள்ளது. மேலும் இது சிறந்த ஸ்கின் லைட்னரும் கூட. எனவே இந்த ஜெல்லை கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இல்லாவிட்டால், தினமும் இரவில் படுக்கும் முன் கற்றாழை ஜெல்லை கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவலாம். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.

காலையில் எழுந்ததும் சிறிது கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைவதைக் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...