சனி, 30 ஜூன், 2018

சங்கடஹர சதுர்த்தி விரதம்

எந்த விதமான
சங்கடங்களையும்  உடைத்தெறியும்
"சங்கடஹர சதுர்த்தி" !!

"""""""""""""""""''""""""""""""""""'""""""""""""""""""""""
👉 விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவுக்கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
"""""""""""""""""'"""""""""""""""""""""""""""""""""""""""""
👉 பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
👉 ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
👉 இந்த சதுர்த்தி திதியானது விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதமாகும்.
**********************************
"விரதம் "இருக்கும் முறை :
*******
👉 சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால், பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப் பெருமானின் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
👉 மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக்கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு "வெள்ளை எருக்கு, அருகம்புல்" மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
👉 ஆலயத்தை "எட்டு முறை" வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து "சந்திரனை" தரிசித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம். பிறகு சிற்றுண்டி அருந்தலாம்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
👉 இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் மாலையில் விநாயகப் பெருமானின் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதத்தை பூர்த்தி செய்யலாம்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
விரதத்தின் பலன்கள் :
************************
👉 இவ்விரதத்தை கடைபிடிப்பதால் நோய்கள் குணமடைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
👉 மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.
""""'""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
👉 சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் குறையும்.★★★

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...