செவ்வாய், 8 ஜனவரி, 2019

ஜனவரி 9, 2019

👉 👉 வரலாற்றில் இன்று👈👈

ஜனவரி 9 கிரிகோரியன் ஆண்டின் ஒன்பதாம் நாளாகும்.

ஆண்டு முடிவிற்கு மேலும் 356 (நெட்டாண்டுகளில் 357) நாட்கள் உள்ளன.

                   🌸 நிகழ்வுகள் 🌸

475 – பைசண்டைன் பேரரசன் சீனோ அவனது தலைநகரான கொன்ஸ்டண்டீனப்போல் நகரை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டான்.

1431 – ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

1707 – ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து பேரரசுகளை இணைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

1760 – ஆப்கானியர்கள் மரதர்களைத் தோற்கடித்தனர்.

1768 – பிலிப் ஆஸ்ட்லி என்பவர் முதன் முதலாக நவீன சர்க்கஸ் காட்சியை லண்டனில் நடத்தினார்.

1788 – கனெடிகட் 5வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.

1793 – ஜான் பியர் பிளன்சார் வாயுக்குண்டில் பறந்த முதல் அமெரிக்கர் ஆனார்.

1799 – பிரித்தானியப் பிரதமர் வில்லியம் பிட் நெப்போலியனுக்கெதிரான போருக்கு நிதி சேர்ப்பதற்காக வருமான வரியை அறிமுகப்படுத்தினார்.

1816 – ஹம்பிறி டேவி சுரங்கத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டேவி விளக்கை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தார்.

1857 – கலிபோர்னியாவில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1858 – டெக்சாஸ் குடியரசின் கடைசித் தலைவர் அன்சன் ஜோன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்க முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இரண்டாவது மாநிலமாக மிசிசிப்பி பிரிந்தது..

1878 – இத்தாலியின் மன்னனாக முதலாம் உம்பேர்ட்டோ முடி சூடினான்.

1905 – ரஷ்யத் தொழிலாளர் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் குளிர்கால அரண்மனையை முற்றுகையிட்டனர். சார் மன்னரின் படைகள் பலரைச் சுட்டுக் கொன்றனர் (ஜூலியன் நாட்காட்டியின் படி). இந்நிகழ்வே 1905 ரஷ்யப் புரட்சி ஆரம்பமாவதற்கு வழிகோலியது.

1915 – மோகன்தாசு கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாள் வெளிநாடுவாழ் இந்தியர் நாள்.

1916 – முதலாம் உலகப் போர்: ஒட்டோமான்களின் வெற்றியுடன் கலிப்பொலி நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

1921 – புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

1951 – ஐநாவின் தலைமையகம் நியூ யோர்க் நகரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

1964 – மாவீரர் நாள்: பனாமா கால்வாயில் பனாமாவின் தேசியக்கொடியை இளைஞர்கள் ஏற்ற முயன்ற பின்னர் அமெரிக்கப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சமர் மூண்டது. 21 பொதுமக்களும் 4 படையினரும் கொல்லப்பட்டனர்.

1972 – ஹொங்கொங்கில் குயீன் எலிசபெத் கப்பல் தீக்கிரையானது.

1974 – யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிவடைந்தது.

1986 – பொலரொயிட் உடன் காப்புரிமப் பிரச்சினை முறிவடைந்ததைத் தொடர்ந்து கொடாக் நிறுவனம் உடனடி படம்பிடிகருவி தயாரித்தலை நிறுத்தியது.

1990 – நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.

1991 – லித்துவேனியாவின் விடுதலைக் கோரிக்கையை நசுக்குவதற்காக சோவியத் ஒன்றியம் வில்னியூஸ் நகரை முற்றுகையிட்டது.

2001 – சீனாவின் ஷென்சூ 2 விண்கலம் ஏவப்பட்டது.

2005 – சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கென்யாவில் கைச்சாத்திடப்பட்டது.

                 🌸 பிறப்புகள் 🌸

1868 – சோரென்சென், டென்மார்க் வேதியியலாளர் (இ. 1939)

1908 – சிமோன் ட பொவார், பிரெஞ்சுப் பெண் எழுத்தாளர் (இ. 19886)

1913 – ரிச்சர்ட் நிக்சன், ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (இ. 1994)

1917 – டி. ஆர். ராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1990)

1922 – ஹார் கோவிந்த் கொரானா, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இந்தியர்.

1927 – துரைசாமி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (இ. 1971)

1934 – மகேந்திர கபூர், இந்தித் திரைப்படப் பாடகர் (இ. 2008)

1959 – ரிகொபேர்ட்டா மென்ச்சு, நோபல் பரிசு பெற்ற கௌதமாலா எழுத்தாளர்.

1989 – மைக்கல் பீஸ்லி, அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்

                   🌸 இறப்புகள் 🌸

1873 – மூன்றாம் நெப்போலியன், பிரெஞ்சு மன்னன் (பி. 1808)

1924 – சேர் பொன்னம்பலம் அருணாசலம், இலங்கையின் தேசியத் தலைவர் (பி. 1853)

1961 – எமிலி பால்ச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1867)

1998 – கெனிச்சி ஃபூக்கி, நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய வேதியியலாளர் (பி. 1918)

                   🌸 சிறப்பு நாள் 🌸

பனாமா – மாவீரர் நாள்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாள்

👉 🌴🌴🌴🌸🌸🌸🌴🌴🌴 👈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...