சனி, 9 மார்ச், 2019

இரண்டே இரண்டு சொட்டுகள் போதும்


"மொத்தமும் தேவை இல்லை.
இரண்டே இரண்டு சொட்டுகள் போதும்..."
--என்று ஜோன்ஸ் சால்க்  கூறியதை
உலகம் வியப்பாகப் பார்த்தது.
இரண்டே இரண்டு சொட்டுகளில் குணப்படுத்த முடியாது என்று,
மருத்து  உலகம் கேள்விக் கணை தொடுக்க ஆயத்தமானது,
அவர் தரப்போகும் அந்த இரண்டு சொட்டுக்களுக்காக உலகமே காத்திருந்தது.

ஏப்ரல் 12, 1955.

மிச்சிகன் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைமை மருத்துவரான டாக்டர்.தாமஸ் பிரான்சிஸ் மேடையில் ஏறி ஒலிபெருக்கி முன் வந்து நிற்கின்றார்.

"நீண்ட காலமாக மனித குலம்-நடத்தி வந்த யுத்தம் இன்றோடு முடிவுக்கு வருகிறது.

இந்தத் தடுப்பு மருந்து பாதுகாப்பானது. இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படுகின்றது. இதைக் கண்டுபிடித்த 
நம் பல்கலைக்கழகத்தின் "அந்த மருத்துவர்"
தனக்கு எந்தக் காப்புரிமையும் வேண்டாம் என மறுத்து விட்டார்.

எனவே இன்றில் இருந்து இந்த மருந்து முழுக்க முழுக்க இலவசமாகத் தரப்படுகின்றது"  ---என்று பரபரப்பாக அறிவிக்கின்றார்.

பெருத்த ஆரவாரம் எழுந்தது. அமெரிக்க நாடு முழுவதுமுள்ள தேவாலயங்களின் மணிகள் ஒலிக்கப்படுகின்றன, மக்கள் வழிபாடு நடத்துகின்றார்கள். செய்தியாளர்கள் அந்த மருத்துவரை மொய்த்துக் கொண்டு, கேள்விக் கணை தொடுத்தனர்.

"நீங்கள் ஏன் இந்தத் தடுப்பு மருந்துக்குக்  காப்புரிமையைப் பெறவில்லை,
ட்ரில்லியன்களில் பணம் வந்திருக்குமே?" என்பது தான்.ஒருமித்த குரலில் அந்த ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்டனர்.

அமைதியான சிறு புன்னகையுடன் அவர்களைப் பார்த்த அந்த மருத்துவர்,

"காப்புரிமையா?இதற்கா?எனக்கா? உலகத்திற்கு ஆற்றலைத் தரும் சூரியன்
அதற்காகக் காப்புரிமையைப் பெற்றுள்ளதா?" ---என்று மட்டும் சொல்லிவிட்டு தனது அடுத்த பணிக்கு சென்றுவிட்டார்.

திகைத்தது உலகம்.

அக்காலகட்டத்தில் வைரஸ் கிருமியால் பரவும் நோய்களுக்கு,
உயிருள்ள ஆனால் பலவீனமாக்கப்பட்ட வைரஸை உடலில் செலுத்தி--
உடலின் நோயெதிர்ப்பு சக்தி--அந்த வைரசிற்கு எதிராக போராடும் வல்லமையை,ஆண்டிபாடிகள் வடிவில் உடலைப் பெற வைப்பார்கள்.
எனவே பிற்காலத்தில் நிஜமான வைரஸ் தாக்குதல் வந்தால்,இவனைத் தான் நாம ஏற்கனவே அடிச்சுருக்கோமே என்று உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புத் திறன்
அந்த நோயை விரட்டி விடும்.
ஆனால் அந்த மருத்துவர் பயன்படுத்தியது
இறந்த வைரஸ்களை.
வைரஸ்களை ஆய்வகத்தில் வளர வைத்து-பின் அதில் பார்மால்டிஹைடு வேதிப்பொருளைச் செலுத்த,
அந்த வைரஸ்கள் முற்றிலும் செயலிழந்து போகும்.
பின் அவற்றை உடலுக்குள் செலுத்தினால்--
உடல் வழக்கம் போல ஆண்டிபாடிகளை உருவாக்கும்.
இதையும் அவர் காப்புரிமை செய்யவில்லை.
இப்படி மருத்துவ உலகின் மாபெரும் புரட்சிகளை செய்த அந்த மருத்துவர்தான் "ஜோன்ஸ் சால்க்."
அவரால் இரண்டே இரண்டு சொட்டில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட அந்த நோய்--
"போலியோ"...
நாளை  போலியோ சொட்டு மருந்து தருகின்றார்கள்.
அந்த இரண்டு சொட்டுகளை
மறக்காமல்
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தந்திடுங்கள்......

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...