Tuesday, July 31, 2012

அந்த இரவு...

திரைகூத்து பத்திரிகையில் எனது சிறுகதை, வெளியிட்ட திரைகூத்து இதழுக்கும் திரு.ரஹீம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி...சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.
கோ 
தோட்டத்தில் உலவி கொண்டு இருந்த கவிதா ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்.யாரும் தென்பட வில்லை,என்னவே சலசலப்பு வந்த திசையை நோக்கி மெதுவாக நடந்தாள்.யாரும் தென்பட வில்லை.கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாருமே தென்பட வில்லை.

"யாரூ?" குரல் கொடுத்தாள்.பதில் வர வில்லை.

யாரோ தன்னை நோக்கி வருவது போல் தோன்றியது,ஆனால் அப்படி யாரும் வர இல்லை.அங்கும் இங்கும் சுற்றி பார்த்தாள். இதற்கு மேலும் அங்கு இருப்பது நல்லதில்லை என்று உணர்ந்து, வேகமாக நடந்தாள்.யாரோ பின் தொடர்வதை போல் உணர்ந்தாள்.ஒரு நொடி நின்று பின்னால் திரும்பி பார்த்தாள்.யாரும் இல்லை.

"யாராவது இருக்கீங்களா ?"பதில் இல்லை.இது தனது பிரமை என்று நினைத்துக் கொண்டு மீண்டும் நடக்க தொடங்கினாள்.மீண்டும் அதே காலடி ஓசை.நிச்சயமாக,யாரோ பின் தொடர்கிறார்கள் என் நினைத்து வேகமாக ஓடினாள்.

உச்சி வெயிலில் கல்லிலும் முள்ளிலும் ஓடி ஓடி களைத்து போய் மயங்கி விழுந்தாள்.மயக்கம் தெளிந்து பார்க்கையில் தான் ஒரு அடர்ந்த காட்டுக்குள் இருப்பதை உணர்ந்தாள்.சுற்றும் முற்றும் பார்த்தாள்.

"நான் இங்கு எப்படி வந்தேன்?"யோசித்து பார்த்தாள் ஆனால் ஏதும் நினைவிற்கு வர வில்லை.நிலவின் ஒளி தவிர வேறு எந்த வெளிச்சமும் தெரிய வில்லை.

"ஹலோ,யாராவது இருக்கீங்களா?"குரல் கொடுத்து பார்த்தாள்.ஆனால் எந்த பயனும் இல்லை.பதில் ஏதும் இல்லை.திடீர் என்று சில்லேன்று காற்று விசியதும் மரங்கள் எல்லாம் வேகமாக அசைந்ததில்,ஏற்பட்ட சத்தத்தை கேட்டு  ஒரு நிமிடம் பயத்தில் உறைந்து போனாள்.

எப்படியாவது இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்து, எழுந்து நடக்க தொடங்கினாள். ஆந்தைகளின் அகவல்களும்,நரிகளின் ஊளைகளும் அவளை குலை நடுங்க செய்தன.எப்பொழுதும் வீட்டை விட்டு, தனியே வெளியே வராதவள் இன்று இப்படி யாரும் இல்லாத  கட்டுக்குள்  சிக்கி தவிக்கிறாள்.அந்த காட்டில் மரங்களின் நிழல்கள் கூட அவளை அச்சுறுத்தின.

காட்டுக்குள் தனியாக பயந்து பயந்து நடந்து சோர்ந்து போனாள்.ஆள் நடமாட்டமே இல்லாத இந்த காட்டுக்குள் நம்மை யாரும் வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று எங்கியவள்,இனி யாரும் வந்து காப்பாற்ற போவதில்லை என்று நினைக்கையில் அவளுக்கு அழுகை வந்தது.இன்று கிலசரின் இல்லாமலே கண்ணீர் வழிந்து அவள் கன்னங்களை ஈரப்படுத்தியது. தூரத்தில் ஏதோ ஒரு வெள்ளிச்சம் தென்பட்டது.

பயத்தில் உறைந்து,சோர்ந்து போயிருந்த அவளுக்கு ஒரு நம்பிக்கை வெளிச்சமாக அது தோன்றியது. வெளிச்சம் வந்த திசையை நோக்கி ஓடினாள்.ஒரு மூதாட்டி நெருப்பு மூட்டி குளிர்  காய்ந்து கொண்டிருந்தாள்.அவர்களை பார்த்ததும் நிம்மதி பேருமுச்சி விட்டபடி அவர் அருகில் சென்று உட்கருந்து கொண்டாள்.

"இந்த நெருப்பு குளிருக்கு இதமா இருக்கு இல்ல ?" என்று மூதாட்டியை பார்த்தாள்.
அதை ஆமோதிப்பது போல் தலையாசைத்தாள் அந்த மூதாட்டி.

"இந்த நேரத்தில் நீங்க இங்கே என்ன பண்றீங்க?" என்று பேச்சை தொடங்கினாள்  கவிதா.

"அது ஒரு பெரிய கதை" என்று பேரு முச்சு விட்டாள் மூதாட்டி.

"என் கணவர் ராணுவத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இறந்து விட்டார்.எனக்கு இரண்டு மகன்கள்.நன்றாக அவர்களை வளர்த்து படிக்க வைத்து.அரசாங்க வேலையும் வாங்கி கொடுத்து.நல்ல முறையில் கல்யாணமும் செய்து வைத்தேன்.திருமணதிற்கு பிறகு மனைவி இனித்தாள்,தாய் கசந்தேன்.என் சொத்தை எழுதி வாங்கி கொண்டு என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட திட்டம் போட்டார்கள் அதற்காக என் மருமகள்கள் என்னை சித்தரவதை செய்தார்கள் அதை எல்லாம் தாங்க முடியாமல் நான்.என் சொத்தை அநாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டு இங்கு வந்து சேர்த்தேன்" என்றாள்

கவிதாவிற்கு ஒரு கணம் இதயம் நின்று விட்டு துடித்தது.அந்த மார்கழி பனியிலும் வியர்த்து கொட்டியது.சுதாரித்து கொண்டு அந்த மூதாட்டியை பார்த்து கேட்டாள்.

"அப்புறம் எப்படி பிழைத்தீர்கள்?"

"ஹா ஹா ஹா... பிழைத்திருந்தா சுடுகாட்டுல எதுக்கு இருக்க போறேன்?நான் செத்து நாலு வருஷம் ஆகுது" சிரித்தபடியே விடையளித்தாள் மூதாட்டி.

கவிதா அதிர்ச்சியில் உறைந்து போனாள்.இவ்வளவு நேரம் தான் பேசிக் கொண்டிருந்தது ஒரு ஆண்மாவிடம் என்ற நினைப்பே அவளுக்குள் ஒருவித அச்சம் கலந்த நடுக்கத்தை ஏற்படுத்தியது. 

அந்த அதிர்ச்சியில் இருந்து அவள் மீள்வதற்கு முன்பே அந்த மூதாட்டி தொடருந்தாள்.

"ஏதோ என் கஷ்டகாலம் நான் இப்படி செய்து விட்டேன்.ஆனால் நீ எதற்கு தற்கொலை செய்து கொண்டாய்?காதல் தோல்வியா என்ன?"

அந்த கேள்வி அவளை ஒரு கணம் உலுக்கி விட்டது. அவள் முற்றிலும் நிலை குலைந்து போனாள்.

"என்ன உலறுகிறிர்கள் நீங்கள்?நான் வளர்ந்து வரும் இளம் நடிகை.இன்னும் ஒரு வாரத்தில் என்னக்கும் பிரபல தொழிலதிபர் மகன் கார்த்திக்கிற்கும்  திருமணம்.அப்படி இருக்கும் போது நான் எதற்கு முட்டாள் தனமா தற்கொலை எல்லாம் செய்து கொள்ள போகிறேன்???"

"அதெல்லாம், எனக்கு எப்படிம்மா தெரியும்?உன்னை புதைக்க வந்த போது உன் பெற்றோர் கதறி அழுதபொழுது காதில் விழுந்ததை தான் உன்னிடம் கேட்டேன்" என்று பதிலளித்தாள்.

"சரி வந்து படு....பொழுது விடிய போகுது"என்று கூறி தன் கல்லறைக்குள் சுருண்டு கொண்டாள் மூதாட்டி.

"ஆனால் நான் இப்போது தானே காட்டில் இருந்து ஓடி வந்தேன்?" என்ற கேள்வியுடன் மூதாட்டியை குழப்பத்துடன் நோக்கினாள்.

"காட்டிலும் மேட்டிலும் அலைவது தானே நம்போன்ற ஆன்மாக்களின் வேலை.போக போக உனக்கும் பழகி விடும்"

அப்பொழுது தான்,அவள் நினைவிற்கு வந்தது.தன் காதலன் கார்த்திக்குடன் அவன் வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு தன் வீட்டிற்கு வந்து படுத்துத் தூங்கியது.பிறகு எப்படி  தான் தற்கொலை செய்திருக்க முடியும்?புரியாமல் தவித்தாள்


-------------------- முற்றும் -----------------------------

2 comments:

  1. Thanks for sharing these stories. Long time that I have read writer Prabavathy's stories :)

    ReplyDelete
  2. Pleasure is mine Uma...Thanks for reading my stories and posting your warm comments...

    ReplyDelete

ஜனவரி 9, 2019

👉 👉 வரலாற்றில் இன்று👈👈 ஜனவரி 9 கிரிகோரியன் ஆண்டின் ஒன்பதாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 356 (நெட்டாண்டுகளில் 357) நாட்கள் உள்ளன....