திங்கள், 19 டிசம்பர், 2022

இட்லி மென்மையாக செய்ய சில டிப்ஸ்!!


1) மிக்சியில் இட்லிக்கு அரிசியை அரைக்கும் போது அரிசியை 5-6 மணி நேரம் சு டான நீரில் ஊற வைக்க வேண்டும்.

2) இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் மாவில் போடவும். அப்படி செய்வதால் இரண்டு நாட்கள் கெடாமலும் புளிக்காமலும் இருக்கும்.

3) இட்லி மாவுடன் சிறிது வெண்டைக்காய் போட்டு அரைத்தால் இட்லி மாவு மிருதுவாக இருக்கும்.

4) இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கைப்பிடி சமைத்த சாதம் சேர்த்து அரைத்தால் இட்லி மென்மையாக இருக்கும்.

5) இட்லி மாவில் உளுந்து போதாமல் மாவு கெட்டியாயிருந்தால் பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்சியில் போட்டு அரைத்து, மாவில் கலந்து விட்டால் இட்லி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

6) இட்லி மாவுடன் சிறிது அவல் அல்லது ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் இட்லி மாவு மிருதுவாக இருக்கும்.

7) இட்லி மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான கீரை இட்லி தயார்.

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...