வியாழன், 18 மார்ச், 2021

மார்ச் 18

 

மார்ச் 18

நிகழ்வுகள்
************
1241 - போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் சேதமாக்கப்பட்டது.

1438 - ஹாப்ஸ்பேர்க்கின் இரண்டாம் ஆல்பேர்ட் ஜெர்மனியின் மன்னனாக முடி சூடினான்.

1850 - அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1874 - வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது.

1909 - ஐனார் டேசாவு குறுகிய அலை வானொலி அலைபரப்பி யை உபயோகித்து முதலாவது ஒலிபரப்பாளரானார்.

1913 - கிரேக்கத்தின் முதலாவது ஜோர்ஜ் மன்னன் படுகொலை செய்யப்பட்டான்.

1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி சமரில் பெரும் கடற்படைத் தாக்குதல் இடம்பெற்றது. பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக் கப்பல்கள் மூன்று மூழ்கடிக்கப்பட்டன.

1922 - ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார்.

1925 - இலினோய் மற்றும் இண்டியானா மாநிலங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 695 பேர் கொல்லப்பட்டனர்.

1937 - டெக்சாஸ் மாநிலத்தில் நியூ லண்டன் நகரில் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட இயற்கை வாயு வெடிப்பில் 295 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.

1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சையும் ஐக்கிய இராச்சியத்தையும் எதிர்த்துப் போரிட ஹிட்லரும் முசோலினியும் கூட்டிணைந்தனர்.

1944 - இத்தாலியில் வேசூவியஸ் மலை தீக்கக்கியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: 1,250 அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பேர்லின் நகரைத் தாக்கின.

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானில் ஜப்பானுக்கும் நேச நாடுகளிக்கும் இடையில் ஒகினவா சமர் ஆரம்பமாகியது.

1953 - மேற்கு துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 250 பேர் கொல்லப்பட்டனர்.

1962 - அல்ஜீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1965 - சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் ஆனார்.

1970 - கம்போடியாவின் மன்னர் நொரொடோம் சிஹானூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு லொன் நொல் கம்போடியாவின் பிரதமரானார்.

1971 - பெருவில் நிலச்சரிவு காரணமாக 200 பேர் கொல்லப்பட்டனர்.

1980 - ரஷ்யாவில் வஸ்தோக்-2எம் ஏவுகணை ஏவப்படுகையில் வெடித்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

1989 - எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.

1990- கிழக்கு ஜெர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக தேர்தல் இடம்பெற்றது.

2003 - ஐக்கிய அமெரிக்கா ஈராக்க்குடன் போரை ஆரம்பித்தது. ஈராக்கின் மத்தியா வங்கியில் இருந்து 1 பில்லியன் பெறுமதியான பணம் சதாம் ஹுசேனினாலும் அவரது குடும்பத்தினராலும் எடுத்துச் செல்லப்பட்டது.

2003 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஆறாம் சுற்றுப் பேச்சுக்கள் ஜப்பான் ஹாக்கோன் நகரில் ஆரம்பமாயின.

பிறப்புக்கள்
**************
1828 - வில்லியம் கிரேமர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 1908)

1837 - குரோவர் கிளீவ்லாண்ட், ஐக்கிய அமெரிக்காவின் 22வது, 24வது குடியரசுத் தலைவர் (இ. 1908)

1858 - ருடோல்ஃப் டீசல், ஜெர்மனியக் கண்டுபிடிப்பாளர் (இ. 1913)

1919 - இந்திரஜித் குப்தா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவர். (இ. 2001)

1936 - பிரடெரிக் கிளார்க், தென்னாபிரிக்க அதிபர், நோபல் பரிசு பெற்றவர்

இறப்புக்கள்
***************
1889 - வில்லியம் நெவின்ஸ், யாழ் மத்திய கல்லூரி தலைமை ஆசிரியர், ஆங்கிலம்-தமிழ் அகராதி தொகுத்து வெளியிட்டவர்

1996 - ஒடீசியஸ் எலீட்டிஸ், நோபல் பரிசு பெற்ற கிரேக்க எழுத்தாளர் (பி. 1911)

2007 - பாப் வுல்மர், துடுப்பாட்டக்காரரும் துடுப்பாட்ட பயிற்சியாளரும் (பி. 1948)

சிறப்பு நாள்
**************
துருக்கி - கலிப்பொலி நினைவு நாள்
.

செவ்வாய், 16 மார்ச், 2021

மார்ச் 16

இன்று

மார்ச் 16

நிகழ்வுகள்
*************
கிமு 597 - பாபிலோனியர்கள் ஜெருசலேமைக் கைப்பற்றினர்.

1190 - சிலுவைப் படையினர் (Crusaders) யோர்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

1521 - மகலன் பிலிப்பீன்சை அடைந்தான்.

1792 - சுவீடன் மன்னன் மூன்றாம் குஸ்டாவ் சுடப்பட்டான். இவன் மார்ச் 29 இல் இறந்தான்.

1926 - முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவுகணையை மசாசுசெட்சில் ராபர்ட் கொடார்ட் என்பவர் செலுத்தினார்.

1939 - பிராக் அரண்மனையில் இருந்து ஹிட்லர் பெஹேமியா, மொராவியாவை ஜேர்மனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.

1942 - முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது).

1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது.

1945 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 20-நிமிடக் குண்டுவீச்சில் ஜெர்மனியின் வூர்ஸ்பேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

1962 - மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.

1963 - பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கி 11,000 பேர் வரை இறந்தனர்.

1966 - ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது.

1968 - வியட்நாம் போர்: மை லாய் என்ற இடத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1969 - வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.

1985 - அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் டிசம்பர் 4, 1991 இல் விடுதலை ஆனார்.

1988 - ஈராக்கில் குருதிய நகரான ஹலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

2006 - மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.

பிறப்புகள்
**********
1751 - ஜார்ஜ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர் (இ. 1836)

1789 - கியோர்க் ஓம், ஜெர்மனிய இயற்பியலாளர் (இ. 1854)

1839 - ரெனே சளி-புரூடோம், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1907)

1918 - பிரெடெரிக் ரெயின்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1998)

1929 - இரா. திருமுருகன், தமிழறிஞர்

1953 - ரிச்சர்ட் ஸ்டால்மன், கட்டற்ற மென்பொருள் இயக்கம், க்னூ திட்டம் போன்றவற்றின் தோற்றுவிப்பாளர்.

1954 - அருண் விஜயராணி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2015)

இறப்புக்கள்
************
1914 - சார்ல்ஸ் கோபட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1843)

1935 - ஜோன் மாக்லியட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1876)

1940 - செல்மா லாகர்லோஃப், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1858)

1945 - எம். ஜே. லெகொக் அடிகளார், அருட்தந்தை (பி. 1880)

1989 - அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய கவிஞர். (பி. 1922

1998 - டெரெக் பார்ட்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)


திங்கள், 15 மார்ச், 2021

மார்ச் 15

இன்று

மார்ச் 15

நிகழ்வுகள்
******"***""**"
கிமு 44 - ரோமன் குடியரசின் மன்னன் யூலியஸ் சீசர் மார்க்கஸ் புரூட்டாஸ் மற்றும் பல ரோமன் செனட்டர்களால் குத்திக் கொல்லப்பட்டான்.

933 - பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் ஜெர்மானிய மன்னன் முதலாம் ஹென்றி ஹங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.

1493 - கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் திரும்பினார்.

1776 - தெற்கு கரோலினா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடு இதுவாகும்.

1802 - இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.

1815 - நேப்பில்ஸ் மன்னன் ஜோக்கிம் முராட் ஆஸ்திரியா மீது போர் தொடுத்தான்.

1848 - ஹங்கேரியில் புரட்சி வெடித்தது. ஹாப்ஸ்பேர்க் ஆட்சியாளர்கள் சீர்திருத்தக் கட்சியின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

1877 - முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் மெல்பேர்ணில் ஆரம்பமானது.

1917 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் த்சார் மன்னன் முடி துறந்தான்.

1922 - எகிப்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முறையாக விடுதலை அடைந்த பின்னர் முதலாம் ஃபுவாட் எகிப்தின் மன்னனானான்.

1943 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியப் படைகள் உக்ரேனின் ஹார்க்கொவ் நகரை சோவியத் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றினர்.

1961 - தென்னாபிரிக்கா பொதுநலவாய நாடுகளில் இருந்து வெளியேறியது.

1970 - எக்ஸ்போ '70 உலகக் கண்காட்சி ஜப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமானது.

1984 - விடுதலைப் புலிகளின் ஆதிகாரபூர்வ ஏடு விடுதலைப் புலிகள் வெளியிடப்பட்டது.

1985 - முதலாவது இணைய டொமைன் பெயர் (symbolics.com) பதியப்பட்டது.

1988 - ஈராக்கியப் படைகள் குருதிய நகரான ஹலப்ஜா மீது இரசாயன நச்சுக் குண்டுகளை வீச ஆரம்பித்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

1990 - பிரித்தானிய ஊடகவியலாளர் பர்சாட் பாசொஃப்ட் ஈராக்கில் தூக்கிலிடப்பட்டார்.

1990 - மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் ஒன்றியத்தின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவானார்.

1991 - இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜேர்மனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து ஜேர்மனி முழுமையான விடுதலையைப் பெற்றது.

2004 - சூரியக் குடும்பத்தில் அதி வேகமான பொருள் 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது.

2007 - இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்
*************
1767 - ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 7வது குடியரசுத் தலைவர் (இ. 1845)

1830 - பவுல் ஹெயிஸ், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய எழுத்தாளர் (இ. 1914)

1854 - எமில் பேஹ்ரிங்க், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (இ. 1917)

1915 - அழகு சுப்பிரமணியம் ஆங்கில இலக்கியத்துறையில் புகழ் பெற்ற இலங்கையர் (இ. 1973)

1920 - டொன்னல் தோமஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

1930 - அல்ஃவியோரவ், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர்

இறப்புக்கள்
**************
கிமு 44 - யூலியஸ் சீசர், ரோமன் குடியரசின் மன்னன் (பி. கிமு 100)

1897 - ஜேம்ஸ் சில்வெஸ்டர், கணிதவியலர் (பி. 1814)

1962 - ஆர்தர் கொம்ப்டன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1892)

2004 - ஜோன் போப்பில், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1925)

சிறப்பு நாள்
************
ஜப்பான் - ஒவுனென் மட்சுறி, புத்தியிர்ப்பு, இயற்கைசார் விழா.

உலக நுகர்வோர் நாள்


ஞாயிறு, 14 மார்ச், 2021

மார்ச் 14

இன்று

மார்ச் 14

நிகழ்வுகள்
************
1489 - சைப்பிரஸ் மகாராணி கத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிஸ் நகருக்குக் விற்றார்.

1794 - எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் காட்டன் ஜின் என்ற இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1898 - டாக்டர் வில்லியம் கப்ரியேல் றொக்வூட், இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

1926 - கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 248 பேர் கொல்லப்பட்டனர்.

1939 - செக்கோசிலவாக்கியாவின் பொஹேமியா மற்றும் மொராவியா மாகாணங்களை ஜேர்மனியப் படைகள் ஆக்கிரமித்தனர்.

1951 - கொரியப் போர்: இரண்டாவது முறையாக ஐ.நா படைகள் சியோல் நகரைக் கைப்பற்றியது.

1978 - இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பற்றியது.

1979 - சீனாவில் பெய்ஜிங் நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.

1984 - சின் ஃபெயின் தலைவர் ஜெரி ஆடம்ஸ் பெல்ஃபாஸ்ட் நகரில் கொலை முயற்சி ஒன்றில் படுகாயமடைந்தார்.

1994 - லினக்ஸ் கரு (kernel) 1.0.0 வெளியிடப்பட்டது.

1995 - ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் (நோர்மன் தகார்ட்) ஒருவர் முதன் முதலாகப் பயணித்தார்.

1998 - தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.

2007 - மேற்கு வங்காளம், நந்தி கிராமத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

2007 - முதல் உலக கணக்கு தினம் கொண்டாடப்பட்டது.

பிறப்புக்கள்
*************
1879 - அல்பர்ட் ஐன்ஸ்டீன், இயற்பியலாளர் (இ. 1955)

1918 - கே. வி. மகாதேவன், இசையமைப்பாளர் (இ. 2001),

1965 - அமீர் கான், நடிகர்

இறப்புக்கள்
******"*******
1883 - கார்ல் மார்க்ஸ், ஜெர்மனிய மெய்யியலாளர் (பி. 1818)

1932 - ஜோர்ஜ் ஈஸ்ற்மன் அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (பி. 1854)

1995 - வில்லியம் பவுலர், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)

சிறப்பு நாள்
*************
பை நாள்


Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...