செவ்வாய், 16 மார்ச், 2021

மார்ச் 16

இன்று

மார்ச் 16

நிகழ்வுகள்
*************
கிமு 597 - பாபிலோனியர்கள் ஜெருசலேமைக் கைப்பற்றினர்.

1190 - சிலுவைப் படையினர் (Crusaders) யோர்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

1521 - மகலன் பிலிப்பீன்சை அடைந்தான்.

1792 - சுவீடன் மன்னன் மூன்றாம் குஸ்டாவ் சுடப்பட்டான். இவன் மார்ச் 29 இல் இறந்தான்.

1926 - முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவுகணையை மசாசுசெட்சில் ராபர்ட் கொடார்ட் என்பவர் செலுத்தினார்.

1939 - பிராக் அரண்மனையில் இருந்து ஹிட்லர் பெஹேமியா, மொராவியாவை ஜேர்மனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.

1942 - முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது).

1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது.

1945 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 20-நிமிடக் குண்டுவீச்சில் ஜெர்மனியின் வூர்ஸ்பேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

1962 - மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விமானம் 107 பயணிகளுடன் காணாமல் போனது.

1963 - பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கி 11,000 பேர் வரை இறந்தனர்.

1966 - ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது.

1968 - வியட்நாம் போர்: மை லாய் என்ற இடத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1969 - வெனிசுவேலாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.

1985 - அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் டிசம்பர் 4, 1991 இல் விடுதலை ஆனார்.

1988 - ஈராக்கில் குருதிய நகரான ஹலப்ஜாவில் நச்சு வாயுத் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

2006 - மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.

பிறப்புகள்
**********
1751 - ஜார்ஜ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர் (இ. 1836)

1789 - கியோர்க் ஓம், ஜெர்மனிய இயற்பியலாளர் (இ. 1854)

1839 - ரெனே சளி-புரூடோம், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1907)

1918 - பிரெடெரிக் ரெயின்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1998)

1929 - இரா. திருமுருகன், தமிழறிஞர்

1953 - ரிச்சர்ட் ஸ்டால்மன், கட்டற்ற மென்பொருள் இயக்கம், க்னூ திட்டம் போன்றவற்றின் தோற்றுவிப்பாளர்.

1954 - அருண் விஜயராணி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2015)

இறப்புக்கள்
************
1914 - சார்ல்ஸ் கோபட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1843)

1935 - ஜோன் மாக்லியட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1876)

1940 - செல்மா லாகர்லோஃப், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1858)

1945 - எம். ஜே. லெகொக் அடிகளார், அருட்தந்தை (பி. 1880)

1989 - அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய கவிஞர். (பி. 1922

1998 - டெரெக் பார்ட்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...