இப்பழங்களை உப்பு மற்றும் மிளகாய்த்தூளுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
நாவல்பழம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு ஏற்பட காரணம் அதன் துவர்ப்புச்சுவை. பாக்கு சாப்பிட்டால் எப்படி நாக்கு லேசாகத் தடிக்கிறதோ, அப்படித்தான் நாவல் பழம் சாப்பிடும்போது தொண்டையில் லேசான இறுக்கம் ஏற்படும். துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளின் தன்மைகளில் இதுவும் ஒன்று.
நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தொண்டைக்கட்டு, தற்காலிகமானது. சிறிது நேரத்தில் தானாகவே சரியாகிவிடும்.
தொண்டை கட்டும், ஜலதோஷம் பிடிக்கும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பலரும் இந்தப் பழங்களைத் தவிர்க்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை.
இப்போது நாவல் பழ சீசன். அது முடிவதற்குள் முடிந்தவரை இந்தப் பழங்களைச் சாப்பிடுவது அவசியம். நாவல்பழத்தில் உள்ள ஆந்தோசயனின் என்ற நிறமி, புற்றுநோய்க்கு எதிராகப் போராடக்கூடியது.
சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் மற்றும் அதன் கொட்டை என இரண்டையுமே எடுத்துக்கொள்ளலாம். நாவல் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டைகளை வெயிலில் உலர்த்திப் பொடித்துக் கொள்ளவும். தினமும் காலையில் அதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். ரத்தச் சர்க்கரை அளவு குறையும். ஆனால், இதை மட்டுமே செய்துவிட்டு ரத்தச் சர்க்கரை அளவு குறையும் என எதிர்பார்க்கக்கூடாது. இதை கூடுதலாக ஒரு சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக