சங்குப்பூ இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஊதா நிற பூ. மற்றொன்று வெள்ளை நிறப்பூ. இவை இரண்டுமே மருத்துவ குணம் உடையது.
வெள்ளை சங்கு பூ தாவரத்திற்கு மருத்துவ பயன் அதிகமாக உள்ளதாக நமது மருத்துவ முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்குப்பூ சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
நீல நிற சங்கு பூவில் தேநீர் செய்து பருகலாம். இது உடலுக்கு குளிர்ச்சி தரும். இதனுடன் சப்ஜா விதைகள், பாதாம் பிசின் மற்றும் தேன் போன்றவைகளை சேர்த்து பருகினால் மேலும் சுவை அதிகரிக்கும். வெயிலுக்கு இதமாகவும் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக