சனி, 30 ஜூன், 2018

💦வரலாற்றில் இன்று💦01.07.2018

*சூலை 1 (July 1)*

கிரிகோரியன் ஆண்டின் 182 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 183 ஆம் நாளாகும்.

ஆண்டு முடிவிற்கு மேலும் 183 நாட்கள் உள்ளன.

*💧நிகழ்வுகள்*

1770 – லெக்செல்லின் வால்வெள்ளி பூமிக்கு மிக்கிட்டவாக (0.0146 வா.அ  தூரம்) வந்தது.

1819 – யோகான் திராலெசு என்பவர் சிC/1819 என்1 என்ற வால்வெள்ளியை  அவதானித்தார்.

1825 – ஐக்கிய இராச்சிய  நாணயங்கள் இலங்கையில்  அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள்  ஆக்கப்பட்டன.

1837 – இங்கிலாந்து, மற்றும் வேல்சில்  பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு நடைமுறைக்கு வந்தது.

1843 – மதராஸ் வங்கி  ஆரம்பிக்கப்பட்டது.

1858 – சார்லஸ் டார்வின், ஆல்பிரடு அரசல் வாலேசு ஆகியோரின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இலண்டன் லின்னியன் சபையில் படிக்கப்பட்டன.

1862 – உருசிய மாநில நூலகம்  திறக்கப்பட்டது.

1863 – நெதர்லாந்தினால் அடிமை முறை தமது நாட்டில் ஒழிக்கப்பட்டதை சுரிநாம் கொண்டாடியது.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கெட்டிசுபெர்க்கு சண்டை  ஆரம்பமானது.

1867 – பிரித்தானிய வட அமெரிக்க சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கனடாவில் கனடியக் கூட்டமைப்பு, நடுவண் மேலாட்சி அரசு முறை கனடிய அரசையலமைப்பில்  கொண்டுவரப்பட்டது. கனடாவின் முதலாவது பிரதமராக சர் ஜோன் ஏ. மெக்டொனால்டு பதவியேற்றார். இந்நாள் கனடா நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

1873 – இளவரசர் எட்வர்ட் தீவு கனடா கூட்டமைப்பில் இணைந்தது.

1874 – முதலாவது வணிகரீதியிலான தட்டச்சுக் கருவி விற்பனைக்கு வந்தது.

1881 – உலகின் முதலாவது பன்னாட்டு தொலைபேசி அழைப்பு கனடாவ்சின் சென். ஸ்டீவன் நகருக்கும், அமெரிக்காவின் கலைசு நகருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.[1]

1890 – கனடாவும் பெர்முடாவும் தந்திச் சேவையில் இணைந்தன.

1903 – முதலாவது தூர் த பிரான்சு மிதிவண்டிப் பந்தயம் இடம்பெற்றது.

1916 – முதல் உலகப் போர்: பிரான்சின்  சோம் நகரில் இடம்பெற்ற போரில் 19,000 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர்.

1921 – சீனப் பொதுவுடமைக் கட்சி  ஆரம்பிக்கப்பட்டது.

1923 – கனடிய நாடாளுமன்றம் சீனக்  குடியேற்றத்தை தடைச் செய்தது.

1931 – யுனைடெட் ஏர்லைன்ஸ்  போயிங் ஏர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் சேவையை ஆரம்பித்தது.

1932 – ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.

1933 – வில்லி போஸ்ட் உலகை முதன் முதலில் தனியே சுற்றி வந்து சாதனை படைத்தார். 15,596 மைல்களை இவர் ஏழு நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் சுற்றி வந்தார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: முதலாம் அல்-அலமைன் சண்டை  ஆரம்பமானது.

1947 – இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகத்து 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய  நாடாளுமன்றம் முடிவெடுத்தது.

1948 – முகம்மது அலி ஜின்னா  பாக்கித்தானின் நடுவண் வங்கியான பாக்கித்தானிய அரசு வங்கியை  ஆரம்பித்தார்.

1949 – கொச்சி, திருவிதாங்கூர்  சமத்தானங்கள் திருவாங்கூர்-கொச்சி என்ற ஒரே மாநிலமாக (பின்னைய கேரளம்) இணைந்தன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொச்சி இராச்சியம் முடிவுக்கு வந்தது.

1958 – கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தொலைக்காட்சி  ஒளிபரப்பை கனடா முழுவதும் நுண்ணலை மூலமாக வழங்கியது.

1959 – பன்னாட்டு யார், பவுண்டு  மற்றும் அங்குலம், மைல், அவுன்சு  ஆகியவற்றுக்கான குறிப்பிட்ட அளவைகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பொதுநலவாய  நாடுகளில் அமுலுக்கு வந்தது.

1960 – கானா குடியரசு ஆனது. குவாமே நிக்ரூமா நாட்டின் முதலாவது அரசுத்தலைவர் ஆனார்.

1960 – இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை பெற்றது.

1962 – ருவாண்டா, புருண்டி விடுதலை பெற்றன.

1963 – சிப் குறியீடுகள் ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

1966 – கனடாவின் முதலாவது வண்ணத் தொலைக்காட்சி சேவை ரொறன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1967 – தேய்வழிவுப் போர்  தொடங்கப்பட்டது.

1968 – அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் வாசிங்டன், டி. சி., இலண்டன் மற்றும் மாஸ்கோ ஆகிய நகரங்களில் 62 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது.

1976 – போர்த்துகல் மதீராவுக்கு  சுயாட்சி வழங்கியது.

1978 – ஆத்திரேலியாவின் வட ஆட்புலம் சுயாட்சியுள்ள மாநிலமானது.

1980 – "ஓ கனடா" அதிகாரபூர்வமாக கனடாவின் நாட்டுப்பண்ணாக  அங்கீகரிக்கப்பட்டது.

1983 – வட கொரியாவின் இலியூசின் ஜெட் விமானம் கினி-பிசாவு நாட்டில் மலையில் மோதியதில், அதில் பயணம் செய்த அனைத்து 23 பேரும் உயிரிழந்தனர்.

1990 – செருமானிய மீளிணைவு: ஜெர்மன் சனநாயகக் குடியரசு  டொச்சு மார்க்கைத் தனது நாணயமாக ஏற்றுக் கொண்டது.

1991 – பனிப்போர்: வார்சா உடன்பாடு பிராகா நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.

1997 – ஆங்காங்கின் அதிகாரத்தை சீனா பொறுப்பெடுத்துக் கொண்டதன் மூலம் 156 ஆண்டுகால பிரித்தானியக் குடியேற்றவாத அரசு முடிவுக்கு வந்தது. பொறுப்புக் கொடுக்கும் நிகழ்வில் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர், சார்லசு, வேல்சு இளவரசர், சீனத் தலைவர் யான் சமீன், அமெரிக்க அரசுச் செயலர் மாடிலின் ஆல்பிரைட்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

2002 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.

2002 – தெற்கு செருமனியில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 71 பேர் உயிரிழந்தனர்.

2004 – காசினி-ஹியூஜென்சு  விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.

2007 – இங்கிலாந்தில் மூடிய பொது இடங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டது.

2013 – குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் 28-வது உறுப்பு நாடாக இணைந்தது.

2013 – நெப்டியூனின் எஸ்/2004 என் 1  நிலவு கண்டுபிடிக்கப்பட்டது.

2016 – லாத்வியா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் 35-வது உறுப்பு நாடாக இணைந்தது.

*💧பிறப்புகள்*

1864 – வலையட்டூர் வெங்கையா, இந்தியக் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாளர் (இ. 1912)

1906 – புலவர் குழந்தை, தமிழகத் தமிழறிஞர், புலவர் (இ. 1972)

1913 – பி. பி. குமாரமங்கலம், இந்திய இராணுவத்தின் 7வது தலைமைப் படைத் தலைவர் (இ. 2000)

1925 – கொண்டல் சு. மகாதேவன், தமிழக எழுத்தாளர்.

1927 – சந்திரசேகர், இந்தியாவின் 11வது பிரதமர் (இ. 2007)

1934 – தாமரைக்கண்ணன், தமிழக எழுத்தாளர், கல்வெட்டு ஆய்வாளர் (இ. 2011)

1935 – ஞானி, தமிழக எழுத்தாளர்

1935 – டி. ஜி. எஸ். தினகரன், இந்திய கிறித்தவ மறைபரப்புனர் (இ. 2008)

1938 – துரைமுருகன், தமிழக அரசியல்வாதி, வழக்கறிஞர்

1939 – வே. ச. திருமாவளவன், தமிழக எழுத்தாளர்

1949 – வெங்கையா நாயுடு, இந்திய அரசியல்வாதி

1950 – கணேசு தேவி, இந்திய மொழியியலாளர்

1961 – கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (இ. 2003)

*💧இறப்புகள்*

1962 – புருசோத்தம் தாசு தாண்டன், இந்திய அரசியல்வாதி (பி. 1882)

1978 – வெ. சாமிநாத சர்மா, தமிழகத் தமிழறிஞர், பன்மொழி அறிஞர் (பி. 1895)

1991 – கா. கோவிந்தன், தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1915)

*💧சிறப்பு நாள்*

மருத்துவர்கள் நாள் - இந்தியா

படைத்துறையினரின் நாள் - சிங்கப்பூர்

கனடா நாள்

குழந்தைகள் நாள் - பாக்கித்தான்

அடிமை ஒழிப்பு நாள் - நெதர்லாந்து அண்டிலிசு, சுரிநாம்

பொறியாளர் நாள் - பகுரைன், மெக்சிக்கோ

விடுதலை நாள் - ருவாண்டா, சோமாலியா

குடியரசு நாள் - கானா

சங்கடஹர சதுர்த்தி விரதம்

எந்த விதமான
சங்கடங்களையும்  உடைத்தெறியும்
"சங்கடஹர சதுர்த்தி" !!

"""""""""""""""""''""""""""""""""""'""""""""""""""""""""""
👉 விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவுக்கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
"""""""""""""""""'"""""""""""""""""""""""""""""""""""""""""
👉 பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
👉 ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
👉 இந்த சதுர்த்தி திதியானது விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதமாகும்.
**********************************
"விரதம் "இருக்கும் முறை :
*******
👉 சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால், பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப் பெருமானின் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
👉 மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக்கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு "வெள்ளை எருக்கு, அருகம்புல்" மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
👉 ஆலயத்தை "எட்டு முறை" வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து "சந்திரனை" தரிசித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம். பிறகு சிற்றுண்டி அருந்தலாம்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
👉 இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் மாலையில் விநாயகப் பெருமானின் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதத்தை பூர்த்தி செய்யலாம்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
விரதத்தின் பலன்கள் :
************************
👉 இவ்விரதத்தை கடைபிடிப்பதால் நோய்கள் குணமடைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
👉 மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.
""""'""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
👉 சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் குறையும்.★★★

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...