வியாழன், 26 ஜூன், 2025

குன்றிமணிகளின் ரகசியம்

பார்ப்பதற்கு சிகப்பும்  கருப்புமாய் முட்டை முட்டையை இருக்கும் இந்த  மணிகளின் பெயர் குன்றிமணி இவற்றை விநாயகர் சதுர்த்தி பண்டிகைகளுக்கு செய்யப்படும் விநாயகர் சிலைகளில் இவற்றை விநாயகர் கண்களாக பார்த்திருக்கிறோம். 


இந்த குன்றிமணி பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். குன்றுமணி அல்லது குன்றிச் செடி என்பது ஒரு கொடித் தாவரம் ஆகும். கடுமையான சிவப்பு நிறத்தில் கருமை நிறத்தில் ஒரு மறுவைக் கொண்ட இதன் விதை பொதுவாகக் குண்டுமணி என அறியப்படுகிறது. இதன் வேறு பெயர்கள்: குன்றி, குண்டு மணி, மனோசீலை, குன்று மணி, குன்றி வித்து. சிலர் நண்டின் கண்களுக்கு இதனை ஒப்பிடுவர். கவர்ச்சியான இந்த விதை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. எனினும் இதன் தோல் மிகவும் கடினமாக இருப்பதால், இதை முழுதாக விழுங்கினால் எவ்வித பாதிப்பும் இல்லை என அறியப்படுகிறது. 


சில பகுதிகளில் இம் மணிகளை அணிவகைகள் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மரபு வழி நகைத்தொழில் செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குக் குன்றிமணிகளைப் பயன்படுத்துவது உண்டாம் . சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு ஊருக்கு சென்ற பொழுது இந்த குண்டுமணிகளை பறித்து  சேகரித்து வைத்து புகைப்படங்கள் எடுத்திருந்தேன் 

இப்பொழுது அந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது என் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக