வியாழன், 7 ஏப்ரல், 2016

ஏப்ரல் 7 நிகழ்வுகள்

இன்று
ஏப்ரல் 7

நிகழ்வுகள்
************
1521 - பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார்.

1541 - பிரான்சிஸ் சேவியர் போர்த்துக்கீச இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார்.

1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது.

1827 - ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.

1906 - வேசுவியஸ் மலை தீக்கக்கியதில் நேப்பில்சில் பலத்த சேதம் ஏற்பட்டது.

1906 - ஸ்பெயின், மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது.

1927 - முதலாவது தொலை தூர தொலைக்காட்சி சேவை வாஷிங்டன் டிசி, நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் இடம்பெற்றது.

1928 - வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.

1939 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது.

1942 - இரண்டாம் உலகப் போர்: I  தீவு ஜப்பான் கைப்பற்றியது.

1943 - யூதப் படுகொலைகள்: உக்ரேனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாசிகள் 1,100 யூதர்களை அரை நிர்வாணமாக்கி நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர்.

1945 - இரண்டாம் உலகப் போர்: உலகின் மிகப்பெரும் போர்க்கப்பலான ஜப்பானின் யமாட்டோ ஓக்கினாவா அருகில் தென்கோ நடவடிக்கையின் போது அமெரிக்கப் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது.

1946 - பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.

1948 - உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் அவையால் தொடங்கப்பட்டது.

1948 - சீனாவில் ஷங்காயில் பௌத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்த குருக்கள் கொல்லப்பட்டனர்.

1963 - யூகோஸ்லாவியா சோசலிசக் குடியரசாகியது. மார்ஷல் டீட்டோ அதிபரானார்.

1964 - ஐபிஎம் தனது System/360 ஐ அறிவித்தது.

1978 - யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல் துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல் துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.

1978 - நியூத்திரன் குண்டு தயாரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா கைவிட்டது.

1983 - ஸ்ரோரி மஸ்கிரேவ், டொன் பீட்டர்சன் இருவரும் மீள் விண்ணோடத்தில் இருந்து விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.

1989 - கொம்சொமோலெட்ஸ் என்ற சோவியத் நீர்மூழ்கிக் கப்பல் நோர்வேயில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

1992 - ஸ்ருப்ஸ்கா குடியரசு விடுதலையை அறிவித்தது.

1994 - ருவாண்டாவின் கிகாலியில் டூட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.

2001 - மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது.

2003 - அமெரிக்கப் படைகள் பக்தாத் நகரைக் கைப்பற்றினர். சதாம் உசேனின் அரசு இரு நாட்களின் பின்னர் வீழ்ந்தது.

2007 - தமிழ்நாட்டில் சென்டூரில் நெடுஞ்சாலை அமைப்புக்கென கொண்டுசெல்லப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்று வெடித்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்
**********
1506 - பிரான்சிஸ் சவேரியார், எசுப்பானிய மதப்பரப்புனர், புனிதர், இயேசு சபையை நிறுவியவர் (இ. 1552)

1770 - வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1850)

1889 - கேப்ரியெலா மிஸ்திரெல், நோபல் பரிசு பெற்ற சிலி கவிஞர் (இ. 1957)

1903 - மு. பாலசுந்தரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1965)

1920 - ரவி சங்கர், இந்திய சித்தார் கலைஞர் (இ. 2012)

1926 - பிரேம் நசீர், இந்திய நடிகர் (இ. 1989)

1935 - எஸ். பி. முத்துராமன் தமிழ்த்திரைப்பட இயக்குனர்.

1944 - கெர்ஃகாத் சுரோடர், செருமனியின் 7வது அரசுத்தலைவர்

1954 - ஜாக்கி சான், ஆங்காங் நடிகர்

1964 - ரசல் குரோவ், நியூசிலாந்து நடிகர்

இறப்புகள்
*********
1804 - டூசான் லூவர்சூர், எயிட்டி இராணுவத் தளபதி (பி. 1743)

1947 - ஹென்றி ஃபோர்ட், அமெரிக்க தொழிலதிபர் (பி. 1863)

2014 - வி. கே. மூர்த்தி, இந்திய ஒளிப்பதிவாளர் (பி. 1923)

2015 - கமலினி செல்வராஜன், ஈழத்து நாடக, திரைப்பட நடிகை, வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1954)

சிறப்பு நாள்
************
உலக சுகாதார நாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...