ஞாயிறு, 29 மே, 2016

மே 26 நிகழ்வுகள்

இன்று
மே 26

நிகழ்வுகள்
***********
1293 - ஜப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

1538 - ஜோன் கால்வின் மற்றும் அவரது சீடர்கள் ஜெனீவா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் பிரான்சின் ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் வாழ்ந்தார்.

1637 - பீக்குவாட் போர்: புரொட்டஸ்தாந்து, மொஹீகன் படைகள் ஜெர்மன் தளபதி ஜோன் மேசன் தலைமையில் ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட்டில் பீக்குவாட் இனத்தவர்களின் ஊர் ஒன்றைத் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் பழங்குடியினரைக் கொன்றனர்.

1838 - கண்ணீர்த் தடங்கள்: ஐக்கிய அமெரிக்காவில் செரோக்கீ பழங்குடிகளின் கட்டாயக் குடியகல்வின் போது 4,000 பேர் கொல்லப்பட்டனர்.
1879 - ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க கண்டமாக் உடன்பாட்டில் ரஷ்யாவும் ஐக்கிய இராச்சியமும் கைச்சாத்திட்டன.

1896 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் சார் மன்னனாக முடி சூடினான்.

1912 - இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.

1917 - இலினொய்யில் நிகழ்ந்த சூறாவளியின் தாக்கத்தினால் 101 பேர் கொல்லப்பட்டு 689 பேர் காயமடைந்தனர்.

1918 - ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.

1958 - இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.

1966 - பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1969 - அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது.

1983 - ஜாப்பானைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஆழிப்பேரலையை உண்டு பண்ணியதால் 104 பேர் கொல்லப்பட்டனர்.

1987 - யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படையினரின் ஒப்பரேஷன் லிபரேஷன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.

1991 - தாய்லாந்தின் விமானம் ஒன்று வெடித்ததில் 223 பேர் கொல்லப்பட்டனர்.

2002 - மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.

2006 - ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.

பிறப்புகள்
**********
1799 - அலெக்சாண்டர் புஷ்கின், உருசியக் கவிஞர் (இ. 1837)

1844 - மகா வைத்தியநாதையர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1893)

1937 - மனோரமா, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை (இ. 2015)

இறப்புகள்
**********
1989 - கா. அப்பாத்துரை, தமிழறிஞர் (பி. 1907)

சிறப்பு நாள்
************
அவுஸ்திரேலியா - தேசிய மன்னிப்பு நாள்

போலந்து - அன்னையர் நாள்

ஜோர்ஜியா - தேசிய நாள்

புதன், 25 மே, 2016

மே 25நிகழ்வுகள்

இன்று
மே 25
நிகழ்வுகள்
************
1659 - ரிச்சார்ட் குரொம்வெல் இங்கிலாந்தின் "ஆட்சிக் காவலர் பெருமகன்" (Lord Protector) பதவியைத் துறந்தார். பொதுநலவாய இங்கிலாந்தின் இரண்டாவது குறுகிய கால அரசு ஆரம்பமானது.
1810 - ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த பியூனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுனரை வெளியேற்றினார்கள்.
1812 - இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் கொல்லப்பட்டனர்.
1837 - கியூபெக்கில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
1865 - அலபாமாவில் "மொபைல்" என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1895 - போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது.
1953 - நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது.
1955 - ஐக்கிய அமெரிக்காவில் கன்சாஸ் மாநிலத்தில் "உடால்" என்ற சிறு நகரை இரவு நேர சூறாவளி தாக்கியதில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
1961 - அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அதிபர் ஜோன் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார்.
1963 - அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது.
1966 - எக்ஸ்புளோரர் 32 விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1977 - ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது.
1979 - ஐக்கிய அமெரிக்காவின் ட்சி-10 விமானம் ஒன்று சிக்காகோவில் விபத்துக்குள்லாகியதில் அதில் பயணித்த 271 பேரும் தரையில் இருவரும் கொல்லப்பட்டனர்.
1982 - போக்லாந்து போரில் கவெண்ட்ரி என்ற ஆங்கிலக் கப்பல் மூழ்கியது.
1985 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1997 - சியேரா லியோனியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார்.
2000 - லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
2001 - அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
2002 - சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் கொல்லப்பட்டனர்.
2002 - மொசாம்பிக்கில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
*********
1458 - மஹ்மூத் பேகடா, குஜராத் சுல்தான் (இ. 1511)
1865 - பீட்டர் சீமன், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1943)
1866 - மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1947)
1878 - சோமசுந்தரப் புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1953)
1918 - நா. முத்தையா, ஆத்மஜோதி இதழாசிரியர் (இ. 1995)
1933 - அநு. வை. நாகராஜன், ஈழத்து எழுத்தாளர்
1954 - முரளி, மலையாள நடிகர் (இ. 2009)
இறப்புகள்
*********
19?? - சி. வைத்திலிங்கம், ஈழத்து சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர்.
1988 - ஏர்ணஸ்ட் ருஸ்கா, ஜெர்மனிய இயற்பியலாளர் (பி. 1906)
2005 - சுனில் தத், இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. 1929)
2013 - டி. எம். சௌந்தரராஜன் தமிழ்த் திரைப்படப் பாடகர், (பி. 1923)
சிறப்பு நாள்
**************
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்.
ஆர்ஜென்டீனா - மே புரட்சி நாள்
சாட், லைபீரியா, மாலி, மவ்ரித்தானியா, நமீபியா, சாம்பியா, சிம்பாப்வே - ஆபிரிக்க விடுதலை நாள்
லெபனான் - விடுதலை நாள் (2000)

சனி, 21 மே, 2016

மே 21நிகழ்வுகள்

இன்று
மே 21
நிகழ்வுகள்
***********
996 - புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான்.
1502 - போர்த்துக்கீச மாலுமி ஜொவாவோ டா நோவா புனித ஹெலெனா தீவைக் கண்டுபிடித்தார்.
1792 - ஜப்பானில் ஊன்சென் மலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,300 பேர் கொல்லப்பட்டனர்.
1851 - கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.
1859 - பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.
1864 - ரஷ்ய-கோக்கசஸ் போர் முடிவடைந்தது.
1871 - பிரெஞ்சு அரசுப் படைகள் பாரிஸ் கம்யூனைத் தாக்கினார். ஒரு வார முற்றுகையில் 20,000 கொம்ம்யூன் மக்கள் கொல்லப்பட்டு 38,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
1894 - 22 வயது பிரெஞ்சு கொடுங்கோலன் எமிலி ஹென்றி கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.
1904 - பாரிசில் சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பு (FIFA) ஆரம்பிக்கப்பட்டது.
1917 - அட்லாண்டாவில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.
1941 - இரண்டாம் உலகப் போர்: பிரேசிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜெர்மனியின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது.
1991 - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.
1991 - எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்டு ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1994 - யேமன் மக்களாட்சிக் குடியரசு யேமன் குடியரசில் இருந்து விலகியது.
1996 - தான்சானியாவில் பூக்கோவா என்ற என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1998 - 32 ஆண்டுகள் இந்தோனீசியாவை ஆண்ட சுகார்ட்டோ பதவி விலகினார்.
2003 - வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2006 - மட்டக்களப்பு மாவட்டத் துணைத் தளபதி கேணல் ரமணன் நினைவு நாள்.
2006 - சுதுமலை புவனேசுவரியம்மை கொடியேற்றம்.
பிறப்புகள்
********
கிமு 427 - பிளாட்டோ, கிரேக்கத் தத்துவவியலாளர் (இ. கிமு 347)
1919 - எம். என். நம்பியார், நடிகர் (இ. 2008)
1921 - அந்திரே சாகரொவ், ரஷ்ய இயற்பியலாளர் (இ. 1989)
1954 - டி. பி. எஸ். ஜெயராஜ், ஊடகவியலாளர்
1960 - மோகன்லால், தென்னிந்திய நடிகர்
1972 - நொடோரியஸ் பி.ஐ.ஜி, அமெரிக்க ராப் இசைக் கலைஞர்
இறப்புகள்
***********
1964 - ஜேம்ஸ் பிராங்க், செருமானிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவ செருமானிய இயற்பியலாளர் (பி. 1882)
1991 - ராஜீவ் காந்தி, முன்னாள் இந்தியப் பிரதமர் (பி. 1944)
2014 - ஆர். உமாநாத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1922)
சிறப்பு நாள்
************
சிலி - கடற்படையினர் நாள்
இந்தியா - பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்

வெள்ளி, 20 மே, 2016

மே 20நிகழ்வுகள்

இன்று
மே 20
நிகழ்வுகள்
***********
526 - சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 300,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1498 - போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.
1570 - உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்.
1605 - ரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் கோவா வந்து சேர்ந்தார்.
1631 - முப்பதாண்டுப் போர்: ஜெர்மனியின் மாக்டெபூர்க் நகரை புனித ரோமப் பேரரசு கைப்பற்றி நகர மக்களின் பெரும்பான்மையோரைப் படுகொலை செய்தனர்.
1813 - நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் ஜேர்மனியின் சாக்சனி நகரில் நுழைந்து ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான்.
1869 - யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது.
1873 - லேவி ஸ்ட்ராவுஸ், ஜேக்கப் டாவிஸ் ஆகியோர் இணைந்து செப்புத் தட்டாணியுடனான நீல ஜீன்சுக்கான காப்புரிமம் பெற்றனர்.
1882 - ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முத்தரப்புக் கூட்டணியை ஏற்படுத்தின.
1891 - தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்.
1902 - ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து கியூபா விடுதலை பெற்றது. தொமாஸ் எஸ்ட்ராடா பால்மா முதலாவது அரசுத் தலைவரானார்.
1940 - முதல் தொகுதி சிறைக்கைதிகள் அவுஷ்விட்ஸ் வதை முகாமை வந்தடைந்தனர்.
1949 - குவோமிங்தான் அரசு தாய்வானில் இராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
1965 - எகிப்தில் கெய்ரோ நகரில் பாகிஸ்தான் விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர்.
1980 - கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக 60 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
1983 - எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன.
1995 - கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக பெரும்பான்மையானோர் வாக்களித்தனர்.
1999 - புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.
2002 - கிழக்குத் தீமோரின் விடுதலையை போர்த்துக்கல் அங்கீகரித்தது. 23 ஆண்டுகால இந்தோனீசிய ஆட்சி, மற்றும் மூன்றாண்டு கால ஐநாவின் தற்காலிக ஆட்சி முடிவுக்கு வந்து கிழக்குத் திமோர் விடுதலை பெற்றது.
பிறப்புக்கள்
**********
1799 - பல்சாக், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1850)
1845 - அயோத்தி தாசர், தமிழறிஞர் (இ. 1914)
1860 - எடுவர்டு பூக்னர், ஜெர்மனிய வேதியியல் அறிஞர் (இ. 1917)
1894 - சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இ. 1994)
1939 - பாலுமகேந்திரா, தமிழ்த் திரைப்பட இயக்குநர் (இ. 2014)
1954 - ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (இ 2009)
இறப்புகள்
********
2005 - செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1943)
1506 - கிறிஸ்தோபர் கொலம்பஸ், இத்தாலியக் கடல் பயணி (பி. 1451)
1947 - பிலிப் லெனார்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)
1957 - த. பிரகாசம், இந்திய சுதந்தர போராட்ட வீரர், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர். (இ. 1872)
2008 - பால்ராஜ், விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி (பி. 1965)
சிறப்பு நாள்
***********
கமரூன் - தேசிய நாள்.
கிழக்குத் தீமோர் - விடுதலை நாள்

புதன், 18 மே, 2016

மே 18 நிகழ்வுகள்

1565 - ஓட்டோமான் படைகள் மால்ட்டாவை அடைந்தன. மால்ட்டாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது.
1652 - வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டத்தை ரோட் தீவு கொணர்ந்தது.
1765 - கனடாவின் மொன்ட்றியால் நகரத்தின் பெரும்பகுதி தீயினால் அழிந்தது.
1803 - ஐக்கிய இராச்சியம் பிரான்ஸ் மீது போரை அறிவித்தது.
1804 - முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக செனட் தெரிவு செய்தது.
1869 - ஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது.
1896 - கோடின்கா துயரம்: ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாசின் முடிசூடும் நிகழ்வுக் கொண்டாட்டத்தின் போது "கோடின்கா" என்ற இடத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 1,389 பேர் இறந்தனர்.
1897 - ஐரிய எழுத்தாளர் பிராம் ஸ்டோக்கர் எழுதிய டிராக்குலா புதினம் வெளியிடப்பட்டது.
1900 - தொங்கா ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக்கப்பட்டது.
1910 - ஹேலியின் வால்வெள்ளியின் வாலினூடாக பூமி சென்றது.
1927 - மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வில் பெரும்பாலும் குழந்தைகள் அடங்கிய 45 பேர் கொல்லப்பட்டனர்.
1944 - கிரிமிய தார்த்தார்கள் சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.
1956 - உலகின் 4வது பெரிய மலையான லகோத்ஸே மலையின் உச்சியை முதன் முதலில் சுவிட்சர்லாந்து மலையேறிகள் எட்டினர்.
1969 - அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1974 - சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.
1980 - வாஷிங்டனில் சென் ஹெலன்ஸ் மலை தீக்கக்கியதில் 57 பேர் கொல்லப்பட்டனர். 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.
1984 - அன்னலிங்கம் பகீரதன் சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.
1990 - பிரான்சில் TGV தொடருந்து உலகின் அதிஉயர் வேகத்தில் (515.3கிமீ/மணி) சென்றது.
1991 - ஹெலன் ஷார்மன் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார்.
1991 - வடக்கு சோமாலியா சோமாலிலாந்து என்ற பெயரில் மீதமான சோமாலியாவில் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆனாலும் அனைத்துலகம் இதனை அங்கீகரிக்கவில்லை.
2006 - நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.
2009 - ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள் என தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.
2010 - நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.
பிறப்புக்கள்
**********"
1048 - ஓமர் கய்யாம், பார்சியக் கவிஞர், கணிதவியலாளர் (இ. 1131)
1868 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் (இ. 1918)
1872 - பெர்ட்ரண்டு ரசல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், வரலாற்றாளர், நோபல் அரிசு பெற்றவர் (இ. 1970)
1897 - பிராங்க் காப்ரா, இத்தாலிய-அமெரிக்க இயக்குனர் (இ. 1991)
1905 - ஹெட்லி வெரிட்டி, ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 1943)
1908 - இயான் பிளெமிங், ஆங்கில எழுத்தாளர் (இ. 1964)
1920 - திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (இ. 2005)
1913 - நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் (இ. 1996)
1929 - வெ. இராதாகிருட்டிணன், விண்வெளி அறிவியலாளர் (இ. 2011)
1933 - தேவ கௌடா, இந்தியாவின் 11வது பிரதமர்
1939 - பீட்டர் குருன்பெர்க், ஜெர்மனிய இயற்பியலாளர்
1944 - ஏ. பி. மருதழகன், மலேசிய எழுத்தாளர்
1955 - சொவ் யுன் ஃபட், ஹொங்கொங் நடிகர்
1959 - கிரகாம் டில்லி, ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 2011)
இறப்புகள்
**************
526 - முதலாம் யோவான் (திருத்தந்தை) (பி. 470)
1911 - குஸ்தாவ் மாலர், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1860)
1956 - மாரீசு டேட், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1895)
1979 - வீ. தி. சம்பந்தன், மலேசிய அரசியல்வாதி (பி. 1919)
2009 - பாலசிங்கம் நடேசன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர்
2010 - கே. ஏ. கிருஷ்ணசாமி, தமிழக அரசியல்வாதி (பி. 1932)
சிறப்பு நாள்
*********
அனைத்துலக அருங்காட்சியக நாள்
போர்க்குற்ற நாள் (இலங்கை)
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் (இலங்கைத் தமிழர்)

செவ்வாய், 17 மே, 2016

மே 17 நிகழ்வுகள்

இன்று
மே 17
நிகழ்வுகள்
***********
1498 - வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.
1521 - பக்கிங்ஹாமின் மூன்றாவது நிலை சீமானான (Duke) எட்வேர்ட் ஸ்டாஃபேர்ட் தூக்கிலிடப்பட்டான்.
1590 - டென்மார்க்கின் ஆன் ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினாள்.
1792 - நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.
1809 - பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டான்.
1814 - நோர்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்டது.
1846 - அடொல்ஃப் சாக்ஸ் என்பவரால் சாக்சபோன் வடிவமைக்கப்பட்டது.
1865 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட்டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1915 - பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.
1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரைக் கைப்பற்றியது.
1969 - சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ் கோளின் வளிமண்டலத்துள் சென்று வீனசில் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
1974 - அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
1983 - லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு லெபனான், இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.
1998 - தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
2006 - தமிழ்த் தொலைக்காட்சி நடிகை ஷ்ரத்தா விஸ்வநாதன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
2009 - தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.
பிறப்புகள்
**********
1749 - எட்வர்ட் ஜென்னர் - ஆங்கில மருத்துவ ஆராய்ச்சியாளர் (இ. 1823)
1888 - டைச் பிரிமென், ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 1965)
1920 - பி. சாந்தகுமாரி, நடிகை, பாடகி
1945 - பி. சி. சந்திரசேகர், இந்தியத் துடுப்பாளர்
1967 - முகமது நசீது, மாலைதீவின் 4வது அரசுத்தலைவர்
1974 - செந்தில் ராமமூர்த்தி, அமெரிக்க நடிகர்
இறப்புகள்
**********
1961 - மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1865)
2006 - ஷ்ரத்தா விஸ்வநாதன், தமிழ்த் தொலைக்காட்சி நடிகை
2007 - நகுலன், தமிழ் எழுத்தாளர்
2014 - சி. கோவிந்தன், தமிழறிஞர், புலவர்
சிறப்பு நாள்
*********
உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்
நோர்வே - அரசியல் நிர்ணய நாள்

திங்கள், 16 மே, 2016

மே 16 நிகழ்வுகள்

இன்று
மே 16
நிகழ்வுகள்
**********
1667 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது.
1811 - கூட்டுப் படைகள் (ஸ்பெயின், போர்த்துக்கல், மற்றும் பிரித்தானியா) பிரெஞ்சுப் படைகளை ஆல்புவேரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தன.
1916 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை அங்குள்ள சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டது.
1920 - ரோமில் ஜோன் ஒஃப் ஆர்க் திருத்தந்தை 15ம் பெனடிக்ட்டினால் புனிதப்படுத்தப்பட்டார்.
1932 - பம்பாயில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1960 - கலிபோர்னியாவில் ஹியூஸ் ஆய்வுகூடத்தில் தியொடர் மாய்மன் முதலாவது லேசர் ஒளிக்கதிரை இயக்கினார்.
1966 - சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
1967 - ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது.
1969 - சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது.
1975 - பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.
1975 - ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதற் பெண் ஆனார்.
1992 - எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது.
2004 - 30களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.
2006 - தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.
2006 - நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிறப்புக்கள்
**********
1931 - நட்வர் சிங், இந்திய அரசியல்வாதி
இறப்புகள்
***********
1830 - ஜோசப் ஃபூரியே, பிரெஞ்சு கணிதவியலாளரும் இயற்பியலாளரும் (பி. 1768)
1947 - பிரடெரிக் ஹொப்கின்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1861)
2010 - அனுராதா ரமணன், எழுத்தாளர் (பி. 1947)
சிறப்பு நாள்
*********
மலேசியா - ஆசிரியர் நாள்

சனி, 14 மே, 2016

மே 14 நிகழ்வுகள்

இன்று
மே 14
நிகழ்வுகள்
*********
1264 - இங்கிலாந்தின் இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றி பிரான்சில் கைது செய்யப்பட்டான்.
1610 - பிரான்சின் நான்காம் ஹென்றி மன்னன் கொலை செய்யப்பட்டான். பதின்மூன்றாம் லூயி முடி சூடினான்.
1643 - பதின்மூன்றாம் லூயி இறக்க, அவனது 4-வயது மகன் பதினான்காம் லூயி இரான்சின் மன்னனானான்.
1796 - பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்.
1811 - பராகுவாய் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.
1861 - ஸ்பெயினில் பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது.
1879 - 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர்.
1900 - கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.
1931 - சுவீடனில் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவற்துறையினர் சுட்டதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1939 - பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெடினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.
1940 - இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்து ஜெர்மனியிடம் சரணடைந்தது.
1943 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலியாவின் செண்டோர் என்ற மருத்துவக் கப்பல் குயின்ஸ்லாந்துக்கருகில் ஜெர்மன் நீர்மூழ்கிக்கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 268 பேர் கொல்லப்பட்டனர்.
1948 - இஸ்ரவேல் நாடு தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசையும் அறிவித்தது. அரபு நாடுகள் இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கின.
1955 - பனிப்போர்: சோவியத் ஒன்றியம் உட்பட எட்டு நாடுகள் சேர்ந்து வார்சா ஒப்பந்தம் எனப்படும் தற்காப்பு ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன.
1965 - இலங்கையில் ரோகண வீஜயவீர மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.
1973 - ஸ்கைலாப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் சட்டர்ன் 5 விண்கப்பலில் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1976 - யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.
2004 - டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் பிரெட்ரிக், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த "மேரி டொனால்ட்சன்" என்னும் பெண்ணை திருமணம் புரிந்தார்.
பிறப்புகள்
**********
1771 – இராபர்ட்டு ஓவன், வேல்சு தொழிலதிபர், சமூக செயற்பாட்டாளர் (இ. 1858)
1907 – அயூப் கான், பாக்கித்தானின் 2வது அரசுத்தலைவர் (இ. 1974)
1910 – கென் வில்ஜான், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (இ. 1974)
1923 – மிருணாள் சென், வங்காளதேச-இந்திய திரைப்பட இயக்குனர்
1944 – ஜோர்ச் லூகாஸ், அமெரிக்கத் திரைப்பட இயக்குனர்
1948 – பாப் வுல்மர், இந்திய-ஆங்கிலேய துட்டாளர், பயிற்சியாளர் (இ. 2007)
1949 – கோ. புண்ணியவான், மலேசிய எழுத்தாளர்
1953 – நொரடோம் சிகாமொனி, கம்போடிய அரசர்
1954 – மூனா, ஈழத்து, செருமானிய ஓவியர், எழுத்தாளர்.
1955 – பீட்டர் கிரிஸ்டன், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்
1959 – டளஸ் அளகப்பெரும, இலங்கை அரசியல்வாதி
1969 – கேட் பிளான்சேட், ஆத்திரேலிய நடிகை
1983 – டாடென்டா தையிபு, சிம்பாப்வே துடுப்பாட்ட வீரர்
1984 – மார்க் சக்கர்பெர்க், ஃபேஸ்புக் நிறுவனர்களில் ஒருவர்
இறப்புகள்
**********
1925 – எச். ரைடர் அக்கார்டு, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1856
)
1940 – எம்மா கோல்ட்மன், லித்துவேனிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1869)
1959 – ஆத்மானந்தர், வேதாந்தி, யோகி (பி. 1883)
2010 – க. சண்முகம்பிள்ளை, இலங்கை மிருதங்கக் கலைஞர் (பி. 1917)
2013 – அஸ்கர் அலி என்ஜினியர், இந்திய எழுத்தாளர் (பி. 1939)
2014 – சுவாமி சித்ரூபானந்தா, இலங்கை பருத்தித்துறை இராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரமத்தின் நிறுவனர்

வியாழன், 12 மே, 2016

மே 12நிகழ்வுகள்

இன்று
மே 12
நிகழ்வுகள்
************
1656 - ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர்.
1689 - பிரான்சுடன் போரிடுவதற்காக இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் ஒக்ஸ்பேர்க் கூட்டணியில் இணைந்தான்.
1780 - அமெரிக்க புரட்சிப் போர்: தென் கரோலினாவின் சார்ல்ஸ்டன் நகரம் பிரித்தானியப் படைகளினால் கைப்பற்றப்பட்டது.
1797 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் இத்தாலியின் வெனிஸ் நகரைக் கைப்பற்றினான்.
1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவில் ஸ்பொட்சில்வேனியா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஆயிரக்கணக்கான கூட்டமைப்பு மற்றும் கூட்டணி படையினர் இறந்தனர்.
1881 - வட ஆபிரிக்காவில் துனீசியா பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
1922 - 20 தொன் விண்கல் வேர்ஜீனியாவில் வீழ்ந்தது.
1937 - ஆறாம் ஜோர்ஜ் மன்னன் பிரித்தானியாவின் மன்னனாக முடி சூடினான்.
1942 - 1,500 யூதர்கள் போலந்தில் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சு வாயு அறையில் வைத்துக் கொல்லப்பட்டனர்.
1949 - சோவியத் ஒன்றியம் பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.
1952 - காஜ் சிங்க் ஜோத்பூரின் மன்னனாக முடி சூடினான்.
1965 - சோவியத் ஒன்றியத்தின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது.
1978 - சாயிரில், கொல்வேசி நகரைத் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
1981 - ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தன்னார்வலர் பிரான்சிஸ் ஹியூஸ் சிறையில் உண்ணாநோன்பிருந்து இறந்தார்.
1982 - போர்த்துகலில் திருத்தந்தை இரண்டாவது ஜோன் போலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
பிறப்புகள்
*************
1820 - புளோரன்ஸ் நைட்டிங்கேல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி (இ. 1910)
1843 - தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பிரித்தானியாவைச் சேர்ந்த பாளி அறிஞர் (இ. 1922)
1895 - ஜே. கிருஷ்ணமூர்த்தி, இந்தியத் தத்துவ அறிஞர் (இ. 1986)
1912 - மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (இ: 1979)
1926 - எம். எஸ். எஸ். பாக்கியம், திரைப்பட நடிகை
1952 - ப. ரங்கராஜன் குமாரமங்கலம் இந்திய அரசியல்வாதி. (இ. 2000)
இறப்புகள்
**********
2001 - அலெக்சி தூபோலெவ், ரஷ்ய விமான வடிவமைப்பாளர் (பி. 1925)
சிறப்பு நாள்
***********
உலக செவிலியர் நாள்

புதன், 11 மே, 2016

மே 11 நிகழ்வுகள்

இன்று
மே 11
நிகழ்வுகள்
***"******
1502 - கொலம்பஸ் தனது கடைசியும் கடைசியுமான கடற் பயணத்தை    
           மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆரம்பித்தார்.

1812 - லண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ஸ்பென்சர்             
           பேர்சிவல் ஜோன் பெல்லிங்ஹம் என்பவனால் கொல்லப்பட்டார்.

1857 - இந்தியக் கிளர்ச்சி, 1857: இந்தியப் புரட்சியாளர்கள் டெல்லியை 
            பிரித்தானியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
1867 - லக்சம்பேர்க் விடுதலை அடைந்தது.
1891 - ஜப்பானில் பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய மன்னர் இரண்டாம் 
            நிக்கலாஸ் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
1905 - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது 
           விளக்கத்தை வெளியிட்டார்.
1924 - மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் 
           ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது.
1943 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் அலூசியன்        
           தீவுகளின் அட்டு தீவைக் கைப்பற்றினர்.
1949 - சியாம் நாடு தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1949 - ஐக்கிய நாடுகள் அவையில் இசுரேல் இணைந்தது
1953 - டெக்சாசில் இடம்பெற்ற சூறாவளியில் 114 பேர் உயிரிழந்தனர்.
1960 - முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது.
1985 - இங்கிலாந்தில் உதைப்பந்தாட்ட போட்டியொன்றில் அரங்கில் 
            இடம்பெற்ற தீயினால் 56 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.
1987 - முதலாவது இதய மாற்றுச் சத்திர சிகிச்சை மேரிலாந்தில் 
            நடத்தப்பட்டது.
1997 - ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை 
            சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது.
1998 - இந்தியா பொக்ரானில் மூன்று அணுச் சோதனைகளை நடத்தியது.

பிறப்புக்கள்
**************
1895 - ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இந்தியத் தத்துவஞானி (இ. 1986)

1897 - சுத்தானந்த பாரதியார், கவியோகி (இ. 1990)

1897 - ஜார்ஜ் பீட்டர் மர்டாக், மானிடவியலாளர் (இ. 1985)

இறப்புகள்
*************
1976 - அல்வார் ஆல்ட்டோ, பின்லாந்து கட்டிடக்கலைஞர் (பி. 1898)

சிறப்பு நாள்
***************
தேசீய தொழில் நுட்ப தினம் - இந்தியா

செவ்வாய், 10 மே, 2016

மே 10 நிகழ்வுகள்

இன்று
மே 10
நிகழ்வுகள்
***********
1503 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் கேமான் தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார்.
1612 - ஷாஜகான் மன்னன் மும்தாஜ் மஹாலைத் திருமணம் புரிந்தான்.
1768 - மூன்றாம் ஜோர்ஜ் மன்னனைப் பெரிதும் குறை கூறி ஜோன் வில்க்ஸ் என்பவர் எழுதிய கட்டுரையை அடுத்து அவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் மூண்டது.
1774 - பதினாறாம் லூயி பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.
1796 - ரஷ்யப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டனர்.
1796 - பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளுக்கெதிரான போரில் பெரும் வெற்றி பெற்றான். 2,000 ஆஸ்திரியர்கள் வரையில் கொல்லப்பட்டனர்.
1810 - ஆர்ஜெண்டீனாவின் தலைநகரான புவெனஸ் அயரெஸ் நகர மண்டபத்தை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
1857 - சிப்பாய்க் கிளர்ச்சி: இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் என்ற இடத்தில் சிப்பாய்கள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.
1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்கக் கூட்டுப் படைகளினால் ஜோர்ஜியாவில் கைப்பற்றப்பட்டார்.
1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தளபதியான வில்லியம் குவாண்ட்ரில் என்பவரை கென்டக்கி என்ற இடத்தில் தாக்கி படுகாயப்படுத்தினர். இவர் ஜூன் 6 இல் இறந்தார்.
1871 - பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடையில் இடையிலான போர் பிரான்ஸ் சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது.
1877 - ருமேனியா துருக்கியிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1908 - அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.
1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது குண்டு இங்கிலாந்தில் கெண்ட் பகுதியில் வீழ்ந்தது.
1940 - இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளுக்குள் ஜெர்மனி ஊடுருவியது.
1940 - வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.
1940 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஐஸ்லாந்தினுள் ஊடுருவியது.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் வான்படையின் தாக்குதலில் லண்டனில் கீழவை நாடாளுமன்றம் (House of Commons) சேதத்துக்குள்ளாகியது.
1946 - ஜவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானர்.
1979 - மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்றன.
1993 - தாய்லாந்தில் விளையாடுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் பெரும்பான்மையாக இளம் பெண்கள் அடங்கிய 188 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1994 - நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்.
1996 - எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்ற கடும் புயலில் சிக்கி 8 மலையேறிகள் கொல்லப்பட்டனர்.
1997 - ஈரானில் ஆர்டேக்குல் அருகே நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,400 பேர் உயிரிழந்தனர்.
2001 - கானாவில் உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 120 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
*********
1932 - கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 2011)
1946 - பிருட்டே கால்டிகாசு, ஜெர்மனிய ஆய்வாளர்
1963 - ஆ. ராசா இந்திய அரசியல்வாதி.
1981 - நமிதா கபூர், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
***********
2003 - கோபி கிருஷ்ணன், எழுத்தாளர் (பி. 1945)
சிறப்பு நாள்
*************
ஐக்கிய அமெரிக்கா - வானியல் நாள்
ஹங்கேரி - பறவைகள் மற்றும் மரங்களின் நாள்
இசுரேல் - தேசிய விடுமுறை
தென் கொரியா - பெற்றோர் நாள்

ஞாயிறு, 8 மே, 2016

மே 8 நிகழ்வுகள்

இன்று
மே 8
நிகழ்வுகள்
*************
1450 - இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் ஹென்றி மன்னனுக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது.
1821 - கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகராக வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது
.
1886 - ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தைக் கண்டுபிடித்தார்.
1902 - கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
1914 - பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் மக்களின் நலனுக்காக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1942 - இரண்டாம் உலகப் போர்: கொக்கோஸ் தீவுகளில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை இராணுவப் பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இக்கிளர்ச்சி அடக்கப்பட்டு மூவர் தூக்கிலிடப்பட்டனர்.
1945 - அல்ஜீரியாவின் சேட்டிஃப் என்ற இடத்தில் நூற்றுக்காணக்கான அல்ஜீரியர்கள் பிரெஞ்சுப் படைகளினால் கொல்லப்பட்டனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.
1984 - லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிக்கப்போவதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
2007 - புதிய வட அயர்லாந்து உயர் சபை அமைக்கப்பட்டது.
பிறப்புக்கள்
*************
1828 - ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் (இ. 1910)
1916 - சுவாமி சின்மயானந்தா, இந்திய ஆன்மிகவாதி (இ. 1993)
இறப்புகள்
************
1947 - ரொபேர்ட் ஹோர்விட்ஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
1951 - மு. நல்லதம்பி, ஈழத்துப் புலவர்
சிறப்பு நாள்
***************
உலக செஞ்சிலுவை நாள்
ஐரோப்பா - வெற்றி நாள் (1945)
தென் கொரியா - பெற்றோர் நாள்

சனி, 7 மே, 2016

மே 7 நிகழ்வுகள்

இன்று
மே 7
நிகழ்வுகள்
*************
1697 - சுவீடனில் ஸ்டொக்ஹோம் நகரின் பழம்பெரும் அரச மாளிகை தீயில் அழிந்தது.
1840 - மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் கொல்லப்பட்டனர்.
1895 - ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் ரஷ்யாவில் வானொலி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1915 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் யூ-20 நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியாவின் லூசித்தானியா என்ற ஆடம்பரக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில் 1,198 பேர் கொல்லப்பட்டனர்.
1920 - போலந்துப் படைகள் உக்ரேனின் கீவ் நகரைத் தாக்கிக் க்கைப்பற்றினர். இவர்கள் பின்னர் ஒரு மாதத்தின் பின்னர் செம்படைகளினால் வெளியேற்றப்பட்டனர்.
1920 - சோவியத் ரஷ்யா ஜோர்ஜியாவை அங்கீகரித்தது. ஆனாலும் ஆறு மாதத்தின் பின்னர் அது ஜோர்ஜியாவைக் கைப்பற்றியது.
1927 - நிக்கராகுவாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் இராணுவத் தளபதி அல்பிரட் யோட்ல் ஜெர்மனியின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கு பிரான்சில் கையெழுத்திட்டார்.
1946 - சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1948 - ஐரோப்பிய அமைப்பு (Council of Europe) உருவாக்கப்பட்டது.
1952 - ஒருங்கிணைந்த மின்சுற்று (integrated circuit) தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.
1954 - வியட்நாமில் "தியன் பியன் பு" (Dien Bien Phu) சமரின் போது பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டது.
1992 - நாசாவின் என்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
1999 - கினி-பிசாவுநாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் அரசுத் தலைவர் ஜொவாவோ பெர்னார்டோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2002 - சீனாவின் விமானம் ஒன்று மஞ்சள் கடலில் வீழ்ந்ததில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
2007 - ரோமப் பேரரசின் ஹெரோட் மன்னனின் கல்லறை ஜெருசலேம் நகருக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டது.
2007 - முன்னர் இந்தியாவுடன் இணைந்திருந்த சிறிய கண்டம் ஒன்று தெற்குக் கடல்களின் அடியில் தமது ஆய்வுக் கப்பலான போலார்ஸ்டேர்ன் (the Polarstern), கண்டுபிடித்துள்ளதாக ஜெர்மனிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2007 - நாடு கடந்த நிலையில் வாழ்ந்த வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார்.
பிறப்புக்கள்
***********
1840 - பியோத்தர் த்சாய்க்கோவ்ஸ்கி, ரஷ்ய இசையமைப்பாளர் (இ. 1893)
1861 - இரவீந்திரநாத் தாகூர், வங்காள மொழிக் கவிஞர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1941)
1968 - கிருஷ்ணா டாவின்சி, தமிழக எழுத்தாளர், இதழாளர் (இ. 2012)
இறப்புகள்
************
1825 - அந்தோனியோ சாலியரி, இத்தாலிய இசையறிஞர் (பி. 1750)
1964 - பி. கண்ணாம்பா, தமிழ்த்திரைப்பட நடிகை (பி. 1910)
1998 - அலன் கோர்மாக், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1924);
சிறப்பு நாள்
************
ரஷ்யா, பல்கேரியா - வானொலி நாள்
நோர்வே - தேசிய நாள்

வியாழன், 5 மே, 2016

மே 5 நிகழ்வுகள்

இன்று
மே 5
நிகழ்வுகள்
***********
1260 - மங்கோலியப் பேரரசின் மன்னனாக குப்ளாய் கான் முடி சூடினான்.
1762 - ரஷ்யாவும் புரூசியாவும் அமைதி உடன்பாட்டை எட்டின.
1916 - டொமினிக்கன் குடியரசை அமெரிக்க கடற்படையினர் கைப்பற்றினர்.
1925 - தென்னாப்பிரிக்காவில் ஆபிரிக்கான் மொழி அதிகாரபூர்வ மொழியானது.
1936 - எதியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரை இத்தாலியப் படைகள் கைப்பற்றினர்.
1940 - இரண்டாம் உலகப் போர்: நாடு கடந்த நிலையில் நோர்வேயின் அரசு லண்டனில் அமைக்கப்பட்டது.
1941 - எதியோப்பியாவின் மன்னர் ஹைலி செலாசி அடிஸ் அபாபா திரும்பினார். இந்நாள் அங்கு விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1942 - பிரித்தானியப் படையினர் மடகஸ்காரைத் தாக்கினர்.
1944 - மகாத்மா காந்தி சிறையிலிருந்து விடுதலையானார்.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மன் படைகள் கனடா மற்றும் பிரித்தானியப் படைகளினால் நெதர்லாந்து, டென்மார்க் நாடுகளில் இருந்து விரட்டப்பட்டனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: நாசிகளை எதிர்த்து பிராக் நகரில் கிளர்ச்சி ஆரம்பித்தது.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரியாவின் நாசிகளின் மோதோசென் வதை முகாம் விடுவிக்கப்பட்டது.
1950 - தாய்லாந்தின் ஒன்பதாவது ராமா மன்னராக பூமிபால் அடுள்யாடெ முடி சூடினார்.
1955 - மேற்கு ஜேர்மனி முழுமையான விடுதலை அடைந்தது.
1961 - மேர்க்குரி திட்டம்: அலன் ஷெப்பார்ட் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதரும் முதலாவது அமெரிக்கரும் ஆனார்.
1976 - புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
1980 - ஆறு நாட்களாக தீவிரவாதிகளினால் முற்றுகையிடப்பட்டிருந்த லண்டனின் ஈரானியத் தூதரகத்தின் மீது வான்படையினர் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1981 - ஐரிஷ் புரட்சியாளர் பொபி சான்ட்ஸ் சிறையில் உண்ணாவிரதமிருந்து இறந்தார்.
1991 - ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணி தனது 23 ஆம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
2006 - சூடான் அரசுக்கும் சூடான் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
2007 - கென்யாவின் விமானம் ஒன்று கமரூனில் வீழ்ந்ததில் 15 இந்தியர்கள் உட்பட 118 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
************
1818 - கார்ல் மார்க்ஸ், ஜெர்மனிய மெய்யியலாளர் (இ. 1883)
1916 - பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (இ. 1951)
1916 - ஜெயில் சிங், இந்தியாவின் 7வது குடியரசுத் தலைவர் (இ. 1994))
1922 - டி. ஆர். ராஜகுமாரி, தமிழ்த் திரைப்பட நடிகை
1922 - பி. ஏ. ராஜாமணி, நடிகை
1933 - இரத்னசிறி விக்கிரமநாயக்கா, இலங்கையின் 11வது, 14வது பிரதம மந்திரி
1948 - பிச்சுமணி கைவல்யம், தமிழ்க் கவிஞர்
1964 - ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர்
இறப்புகள்
*************
1821 - நெப்போலியன் பொனபார்ட், பிரெஞ்சு மன்னன் (பி. 1769)
1948 - புதுமைப்பித்தன், நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி (பி. 1906)
1957 - ஆர். மகாதேவன் (தேவன்), நகைச்சுவை எழுத்தாளர் (பி. 1913)
1981 - பொபி சான்ட்ஸ், ஐரிஷ் புரட்சியாளர் (பி. 1954)
1991 - சிவரமணி, ஈழத்துக் கவிஞை
2006 - நெளஷத் அலி, இந்தித் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1919)
சிறப்பு நாள்
*************
சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள் (International Midwives Day)
அல்பேனியா - மாவீரர் நாள்
டென்மார்க் - விடுதலை நாள் (1945)
எதியோப்பியா - விடுதலை நாள் (1941)
நெதர்லாந்து - விடுதலை நாள் (1945).
தென் கொரியா - சிறுவர் நாள்

புதன், 4 மே, 2016

மே 4நிகழ்வுகள்

இன்று
மே 4
நிகழ்வுகள்
*************
1493 - திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை ஸ்பெயினுக்கும் போர்த்துக்கல்லுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
1494 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் ஜமெய்க்காவில் கால் பதித்தார்.
1626 - டச்சு பயணி பீட்டர் மின்யூயிட் மான்ஹட்டன் தீவை அடைந்தார்.
1799 - நான்காம் மைசூர்ப் போர்: திப்பு சுல்தான் பிரித்தானியப் படையினரால் கொல்லப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் கைப்பற்றப்பட்டது.
1814 - பிரான்ஸ் மன்னன் முதலாம் நெப்போலியன் நாடுகடத்தப்பட்ட நிலையில் எல்பா தீவை அடைந்தான்.
1855 - அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றும் நோக்கில் 60 பேருடன் சான் பிரான்சிஸ்கோவை விட்டுப் புறப்பட்டார்.
1886 - ஹேமார்க்கெட் கலகம்: சிகாகோவில் இடம்பெற்ற தொழிலாளர் கலகத்தில் காவல்துறையினர் மீது எறியப்பட்ட குண்டுவீச்சுக்குப் பின் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
1904 - பனாமா கால்வாய் கட்டுமானம் ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.
1912 - ரோட்ஸ் என்ற கிரேக்கத் தீவை இத்தாலி ஆக்கிரமித்தது.
1919 - மே நான்கு இயக்கம்: சீனாவின் பகுதிகள் ஜப்பானுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து தலைநகர் பெய்ஜிங்கில் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர் போராட்டம் இடம்பெற்றது.
1924 - பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
1930 - பிரித்தானியக் காவல்துறையினரால் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானினால் முதல் நாள் ஆக்கிரமிக்கப்பட்ட துளகி தீவின் (சொலமன் தீவுகள்) மீது அமெரிக்கக் கடற்படையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகரில் இருந்த நியூவென்காம் வதை முகாமை பிரித்தானிய இராணுவத்தினர் விடுவித்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: வடக்கு ஜெர்மனி பிரித்தானியாவிடம் சரணடைந்தது.
1949 - அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ். ஏ. கணபதி மலாயாவின் ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
1949 - இத்தாலியில் இடம்பெற்ற விமான விபத்தில் டொரினோ உதைபந்தாட்ட அணியின் அனைத்து விளையாட்டு வீரர்களும் கொல்லப்பட்டனர்.
1973 - சியேர்ஸ் கோபுரம், சிகாகோவில் உள்ள வானளாவி, கட்டி முடிக்கப்பட்டது.
1979 - மார்கரெட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமரானார்.
1982 - போக்லாந்து போர்: பிரித்தானியாவின் போர்க்கப்பல் ஒன்று ஆர்ஜெண்டீனாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கிலக்காகியதில் 20 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1994 - இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபினுக்கும், பாலஸ்தீன அதிபர் யாசர் அரபாத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டின்படி காசாக் கரையில் பாலஸ்தீனர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது.
2000 - லண்டனின் முதலாவது நகரத் தந்தையாக கென் லிவிங்ஸ்டன் தெரிவு செய்யப்பட்டார்.
2002 - நைஜீரியாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
**************
1767 - தியாகராஜர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1847)
1945 - என். ராம், இந்தியப் பத்திரிகையாளர்
1983 - த்ரிஷா, தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை
இறப்புகள்
**************
1799 - திப்பு சுல்தான், மைசூர் மன்னன் (பி. 1750)
1879 - சேர் முத்து குமாரசாமி, இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர் (பி. 1834)
1949 - எஸ். ஏ. கணபதி, மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் (பி. 1925)
1980 - டீட்டோ, யூகோஸ்லாவியாவின் அதிபர் (பி. 1892)
சிறப்பு நாள்
**************
அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்
நெதர்லாந்து - இறந்தவர்கள் நினைவு நாள்
சீனா - இளைஞர் நாள் (青年节, மே நான்கு இயக்கம் நினைவு - 1919)

செவ்வாய், 3 மே, 2016

மே 3 நிகழ்வுகள்

இன்று
மே 3
நிகழ்வுகள்
**********
1494 - ஜமெய்க்கா எனப் பின்னர் பெயரிடப்பட்ட நாட்டை முதன் முதலில் கிறிஸ்தோபர் கொலம்பஸ் கண்டார்.
1802 - வாஷிங்டன், டிசி நகரமாக்கப்பட்டது.
1814 - பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டு போர்ட்டோஃபெராய்யோ நகரை அடைந்தான்.
1815 - டொலெண்டீனோ என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் நேப்பில்ஸ் மன்னன் முராட் ஆஸ்திரியர்களால் தோற்கடிக்கப்பட்டான்.
1879 - யாழ்ப்பாணம், கரவெட்டியில் வெல்லனிற் பிள்ளையார் கோயில் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற தீ விபத்தில் 50 பேர் வரையில் தீயில் கருகி மாண்டனர். நூற்றுக் கணக்கானோர் உடல் ஊனமுற்றனர். கோயில் முழுவதும் எரிந்து சாம்பரானது.
1901 - புளோரிடாவின் ஜாக்கன்ஸ்வில் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயினால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிந்தன. 10,000 பேர் வரையில் வீடுகளை இழந்தனர்.
1913 - இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிஸ்சந்திரா வெளியானது.
1916 - உயிர்த்த ஞாயிரன்று இடம்பெற்ற கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்ட ஐரிஷ் தலைவர்கள் டப்ளின் நகரில் தூக்கிலிடப்பட்டார்கள்.
1939 - சுபாஸ் சந்திர போஸ் அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் கட்சியை ஆரம்பித்தார்.
1941 - பிபிசி தமிழோசை வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய கடற்படையினர் சொலமன் தீவுகளின் துளகி தீவைக் கைப்பற்றினர்.
1959 - முதலாவது கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன.
1962 - டோக்கியோவில் பயணிகள் தொடருந்துகள் சரக்கு தொடருந்துடன் மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
1973 - சிக்காகோவின் சியேர்ஸ் கோபுரம் உலகின் அதியுயர் கோபுரமானது.
1979 - மார்கரெட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமர் ஆனார்.
1986 - கொழும்பு விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றில் குண்டு வெடித்ததில் 21 பேர் கொல்லப்பட்டு 41 பேர் காயமடைந்தனர்.
1999 - ஐக்கிய அமெரிக்காவின் ஓக்லகோமா நகரை சூறாவளி தாக்கியதில் 42 பேர் கொல்லப்பட்டும் 665 பேர் காயமும் அடைந்தனர்.
2002 - இந்தியாவின் ராஜஸ்தானில் இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - ஆர்மீனியாவின் பயணிகள் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
**************
1933 - ஜேம்ஸ் ப்ரௌன், சோல் இசையின் தந்தை என அழைக்கப்பட்ட அமெரிக்க இசை வல்லுநர் (இ. 2006)
1935 - சுஜாதா, தமிழ் எழுத்தாளர் (இ. 2008)
இறப்புகள்
***********
1680 - சிவாஜி (பேரரசர்) இந்தியப் பேரரசர் (பி. 1627)
1969 - சாகிர் ஹுசைன், மூன்றாவது இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1897)
சிறப்பு நாள்
**************
உலக பத்திரிகை சுதந்திர நாள்
போலந்து - அரசியலமைப்பு நாள்
ஜப்பான் - அரசியலமைப்பு நாள்

திங்கள், 2 மே, 2016

மே 2 நிகழ்வுகள்

இன்று
மே 2
நிகழ்வுகள்
************
1568 - ஸ்கொட்லாந்தில் லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினாள்.
1808 - மாட்ரிட் மக்கள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1814 - முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமஸ் கோக் தமது மதத்தைப் பரப்புதற்காக கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரும் வழியில் காலமானார்.
1876 - பல்கேரியாவில் ஏப்ரல் கிளர்ச்சி ஆரம்பித்தது.
1885 - புல்ஜிய மன்னர் இரண்டாம் லெயொபோல்ட் கொங்கோ சுதந்திர நாட்டை அமைத்தான்.
1889 - எதியோப்பியாவின் அரசன் இரண்டாம் மெனெலிக் என்பவன் இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின் படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது.
1928 - அமெரிக்காவின் பிரபல கேலிச்சித்திர ஓவியரான வோல்ட் டிஸ்னி பிரபல கேலிச்சித்திரக் கதாபாத்திரமான மிக்கி எலியின் படத்தினை வரைந்தார்.
1933 - ஹிட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார்.
1945 - இரண்டாம் உலகப் போர்: பேர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. ஜெர்மனியப் படைகள் இத்தாலியில் சரணடைந்தனர்.
1952 - உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, முதற்தடவையாக லண்டனுக்கும் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்தது.
1964 - வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது.
1964 - 8,027 மீட்டர் உயர ஷிஷபங்குமா மலையின் உச்சியை சீனாவின் இரு மலையேறிகள் எட்டினர்.
1982 - போக்லாந்து போர்: பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் கொன்கரர் என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆர்ஜெண்டீனாவின் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
2002 - கேரளாவில் பாலக்காடு நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 8 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
2004 - நைஜீரியாவில் 630 முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்டனர்.
2006 - குஜராத் மாவட்டத்தில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலகத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
2009 - வல்லிபுரக்குறிச்சி மருதடி தான்றோன்றியீஸ்வரர் தேர்.
பிறப்புக்கள்
************
1921 - சத்யஜித் ராய், இந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 1992)
1969 - பிறயன் லாறா, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாளர்
1975 - டேவிட் பெக்காம், இங்கிலாந்து கால்பந்து ஆட்டக்காரர்
1983 - பொத்துவில் அஸ்மின், ஈழத்துக் கவிஞர்
இறப்புகள்
**********
1519 - லியனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர் (பி. 1452)
2009 - கே. பாலாஜி, தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்
சிறப்பு நாள்
**************
போலந்து - கொடி நாள்
ஈரான் - ஆசிரியர் நாள்
இந்தோனீசியா - தேசிய கல்வி நாள்

பிஞ்சு மனசு

"திண்டுக்கல் டைம்ஸ் " ல்  வெளியான எனது சிறுகதை... 




ஞாயிறு, 1 மே, 2016

மே 1 நிகழ்வுகள்

இன்று
மே 1
நிகழ்வுகள்
************
1328 - ஸ்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. ஸ்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1707 - இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து இணைக்கப்பட்டு பெரிய பிரித்தானியா என்ற ஒரு நாடாகியது.
1778 - அமெரிக்கப் புரட்சி: பென்சில்வேனியாவின் ஹாட்பரோ என்ற இடத்தில் பிரித்தானியப் படையினர் பென்சில்வேனியா துணை இராணுவத்தினர் மீது திடீர்த் தாக்குதலை நிகழ்த்தி 26 பேரைக் கொன்று 58 பேரைக் கைது செய்தனார்.
1834 - பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின.
1840 - உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.
1851 - லண்டனில் பெரும் பொருட்காட்சி விக்டோரியா மகாராணியினால் திறந்து வைக்கப்பட்டது.
1886 - ஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1891 - பிரான்சில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வாலத்தின்போது படையினர் சுட்டதில் 9 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமுற்றனர்.
1898 - அமெரிக்க கடற்படையினர் மணிலா விரிகுடாவில் ஸ்பானிய கடற்படைக் கப்பலை தாக்கியழித்தனர்.
1900 - ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் ஸ்கொஃபீல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
1915 - ஆர்.எம்.எஸ். லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 அவதும் கடசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள் அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில் 1,198 பேர் கொல்லப்பட்டனர்.
1925 - சீனாவில் அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று 134 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும்.
1930 - புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1931 - நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.
1940 - கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் கிரேக்க தீவான கிறீட் மீது மிகப் பெரும் வான் தாக்குதலை நிகழ்த்தினர்.
1945 - சோவியத் இராணுவத்தினர் பேர்லினில் நாடாளுமன்றக்க் கட்டிடத்தில் சோவியத் கொடியை ஏற்றினார்கள்.
1946 - மேற்கு அவுஸ்திரேலியாவில் பில்பாரா என்ற இடத்தில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மனித உரிமை, போதுமான சம்பளம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 3 ஆண்டுகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
1948 - கொரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டாது. கிம் உல்-சுங் அதன் முதலாவது அதிபரானார்.
1950 - குவாம் ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது.
1956 - இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
1960 - மகாராஷ்டிரா மாநிலம் அமைக்கப்பட்டது.
1961 - கியூபாவை சோசலிச நாடாகவும் தேர்தல் முறையை ஒழித்தும் அதன் பிரதமர் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.
1977 - தொழிலாளர் நாள் நிகழ்வின் போது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 36 பேர் கொல்லப்பட்டனர்.
1978 - ஜப்பானியரான நவோமி யூமுரா தன்னந்தனியாக வட முனையை அடைந்த முதல் மனிதரானார்.
1987 - இரண்டாம் உலகப் போரின் போது அவுஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்ட யூதப் பெண்மதகுரு ஈடித் ஸ்டெயின் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டார்.
1989 - இந்திய அமைதி காக்கும் படையின் வவுனியா சிறையை உடைத்து விடுதலைப் புலிகளும் பொதுமக்களுமாக 43 பேர் தப்பி வெளியேறினர்.
1993 - இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் வைத்து மனிதக் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.
2004 - சைப்பிரஸ், செக் குடியரசு, எஸ்தோனியா, ஹங்கேரி, லாத்வியா, லித்துவேனியா, மால்ட்டா, போலந்து, சிலவாக்கியா,, சிலவேனியா ஆகிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.
2006 - புவேர்ட்டோ ரிக்கோ அரசு நாட்டின் பணவீக்கம் காரணமாக பாடசாலைகளையும் அரச நிறுவனங்களையும் மூடியது.
2011 - அல் கைடா தலைவர் உசாமா பின் லாதின் அமெரிக்கப் படையினரால் பாக்கித்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிறப்புக்கள்
**************
1913 - பி. சுந்தரய்யா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சியக் கட்சித் தலைவர் (இ. 1985)
1919 - மன்னா டே, இந்தித் திரைப்படப் பாடகர் (இ. 2013)
1951 - கோர்டன் கிரீனிட்ச், மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துடுப்பாளர்
1971 - அஜித் குமார், தமிழ்த் திரைப்பட நடிகர்
இறப்புகள்
*************
1965 - ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (பி. 1910)
1993 - ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அதிபர் (பி. 1924)
2011 -அலெக்ஸ், திரைப்பட நடிகர், மாஜிக் நிபுணர்
2011- உசாமா பின் லாதின், அல் கைடா தலைவர் (பி. 1957)
சிறப்பு நாள்
************"
மே நாள் - உலகத் தொழிலாளர் நாள்
இத்தாலி - தேசிய நாள் (Giorno dei Lavoratori)
செக் குடியரசு - தேசிய காதல் நாள்

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...