ஞாயிறு, 8 ஜூலை, 2018

கௌரவர்கள் நூறு பேர்

பாண்டவர்கள்
ஐவர் 

அவர்கள் யுதிஷ்டிரர், அர்ஜுனன், பீமன், நகுலன் மற்றும் சகாதேவன். அதனால் தான் அவர்கள் பஞ்ச பாண்டவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்பதை  நாம் நன்கு அறிவோம் ....

அதுப்போல்

கௌரவர்கள்
நூறு பேர் :

1 துரியோதனன்- Duryodhana
2 துச்சாதனன்- Dussahana
3 துசாகன்- Dussalan
4 ஜலகந்தன் - Jalagandha
5 சமன் - Saman
6 சகன் - Sahan
7 விந்தன் - Vindhan
8 அனுவிந்தன் - Anuvindha
9 துர்தர்சனன்- Durdharsha
10 சுபாகு - Subaahu
11 துஷ்பிரதர்ஷனன் - Dushpradharsha
12 துர்மர்ஷனன் - Durmarshana
13 துர்முகன் - Durmukha
14 துஷ்கரன் - Dushkarna
15 காஞ்சநத்வாஜா - Kaanchanadhwaja
16 விகர்ணன்- Vikarna
17 சலன்- Saalan
18 சத்வன் - Sathwa
19 சுலோசனன் - Sulochana
20 சித்ரன் - Chithra
21 உபசித்ரன் - Upachithra
22 சித்ராட்சதன் - Chithraaksha
23 சாருசித்ரன்- Chaaruchithra
24 சரசனன் - Saraasana
25 துர்மதன் -Durmada
26 துர்விகன் - Durvigaaha
27 விவித்சு - Vivilsu
28 விக்தனன் - Vikatinanda
29 உர்ணநாபன் - Oornanaabha
30 சுநாபன்- Sunaabha
31 நந்தன் - Nanda
32 உபநந்தன் - Upananda
33 சித்திரபாணன்- Chithrabaana
34 அயோபாகன் - Ayobaahu
35 சித்திரவர்மன்- Chithravarma
36 சுவர்மன் - Suvarma
37 துர்விமோசன்- Durvimocha
38 மகாபாரு- Mahaabaahu
39 சித்திராங்கன் - Chithraamga
40 சித்திரகுண்டாலன் -Chithrakundala 41 பிம்வேகன் - Bheemavega
42 பிமவிக்ர - Bheemavikra
43 பாலகி - Vaalaky
44 பாலவரதன்- Belavardhana
45 உக்ரயுதன் - Ugraayudha
46 சுசேனன் - Sushena
47 குந்தாதரன்- Kundhaadhara
48 மகோதரன்- Mahodara
49 சித்ரயுதன் - Chithraayudha
50 நிஷாங்கி - Nishamgy
51 பஷி- Paasy
52 விருதகரன் - Vrindaaraka
53 திரிதவர்மன் - Dridhavarma
54 திரிதட்சத்ரன் - Dridhakshathra
55 சோமகீர்த்தி - Somakeerthy
56 அனுதரன் - Anthudaran
57 திரிதசந்தன் - Dridhasandha
58 ஜராசங்கன்- Jaraasandha
59 சத்தியசந்தன் - Sathyasandha
60 சதஸ் - Sadaas
61 சுவாகன் - Suvaak
62 உக்ரச்ரவன் - Ugrasravas
63 உக்ரசேனன் - Ugrasena
64 சேனானி - Senaany
65 துஷ்பரஜை- Dushparaaja
66 அபராஜிதன் - Aparaajitha
67 குண்டசை - Kundhasaai
68 விசாலாட்சன் - Visaalaaksha
69 துராதரன் - Duraadhara
70 திரிதஹஸ்தன் - Dridhahastha
71 சுகஸ்தன் - Suhastha
72 வத்வேகன்- Vaathavega
73 சுவர்ச்சன் - Suvarcha
74 ஆடியகேது - Aadithyakethu
75 பாவசி - Bahwaasy
76 நகாதத்தன் - Naagadatha
77 அமப்ரமாதி - Amapramaadhy
78 கவசி - Kavachy
79 கிராதன்- Kradhana
80 சுவீர்யவ - Suveeryava
81 குண்டபேடி - Kundhabhedy
82 தனுர்தரன் - Dhanurdhara
83 பீமபாலா - Bheemabala
84 வீரபாகு- Veerabaahu
85 அலோலுபன் - Alolupan
86 அபயன்- Abhaya
87 உக்ராசாய் - Ugrasaai
88 திரிடரதச்ரயன் -Dhridharathaasraya
89 அனாக்ருஷ்யன்-Anaadhrushya
90 குந்தபேதி - Kundhy
91 விரவி - Viraavy
92 சித்திரகுண்டலகன் - Chithrakundhala
93 தீர்தகாமாவு - Dhridhakarmaavu
94 பிரமாதி - Pramadhan
95 வீர்யவான் - Viraavy
96 தீர்கரோமன் - Deerkharoma
97 தீர்கபூ- Dheerkhabaahu
98 மகாபாகு - Mahabaahu
99 குந்தாசி - Kundhaasy
100 விரஜசன்- Virajass
(ஒரே ஒரு சகோதரி)
101 துர்சலை - Dursalai

சனி, 7 ஜூலை, 2018

அழகிய 26 வார்த்தைகள்

A - Appreciation
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

B - Behaviour
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

C - Compromise
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

D - Depression
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

E - Ego
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

F - Forgive
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

G - Genuineness
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

H - Honesty
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

I - Inferiority Complex
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

J - Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

K - Kindness
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

L - Loose Talk
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

M - Misunderstanding
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

N - Neutral
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

O - Over Expectation
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

P - Patience
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

Q - Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

R - Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

S - Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

T - Twisting
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

U - Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

V - Voluntary
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

W - Wound
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

X - Xerox
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

Y - Yield
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

Z - Zero
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்...

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...