புதன், 13 ஜூலை, 2016

பசி எடுக்க பாட்டி வைத்தியம்

• முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கி, நல்ல பசி உண்டாக்கும்.

• புதினா இலைச்சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் தலா 100 மிலி அளவில் எடுத்து கால் கிலோ தேனுடன் சேர்த்து காய்ச்சி இறக்கிக் கொள்ளவும். இதை காலை மாலை இரு வேளையும் 15 மிலி அளவுக்குச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.

•  கொத்தமல்லிச் சாறில் பெருஞ்சீரகம், ஓமம் இரண்டையும் ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் உணவுக்கு முன் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

• கை அளவு கறிவேப்பிலையை மூன்று மிளகு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நல்ல பசி உண்டாகும்.

• வெங்காயத்தாளுடன் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நல்ல பசி உண்டாகும்.

• முள்ளங்கிக் கீரை சாறில் மிளகை ஊற வைத்துப் பொடியாக்கி, அதிகாலையில் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.

• பிரண்டையின் இளந்தண்டை நெய்விட்டு வதக்கிச் சாப்பிட, சுவையின்மை, ருசியின்மை நீங்கி, நன்றாகப் பசி எடுக்கும்.

•   தூதுவளைக் கீரையை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து, மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் நன்றாகப் பசி எடுக்கும்.

• முடக்கத்தான் கீரையுடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.


• நல்வேளைக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.


•  ஆரைக்கீரையைப் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் நல்ல ருசியும் பசியும் உண்டாகும்.


•  புளியாரைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.


• சுக்காங் கீரையுடன் சிறிது இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.


•  முள்ளிக்கீரையை மிளகு, சீரகம் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.


•  துயிலிக் கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.


• பாற்சொரிக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து அதிகாலையில் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.

• சாணாக்கிக் கீரையை  மிளகு, பூண்டு, வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...