புதன், 13 ஜூலை, 2016

அழகு குறிப்புகள் 3

முகத்தை களையாக மாற்ற வீட்டிலேயே இருக்கு கண்கண்ட அழகு சாதன பொருட்கள். அவற்றை உபயோகித்துப் பாருங்களேன்...

தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்¬ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும். 
இளநீரில் உள்ள வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூட அவை காணாமல் போய்விடும். 
பாசிப்பருப்பு ப்ளீச் முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல் "திட்டுகள்" தோன்றும். இதற்கு பாசிப்பருப்பு சிறந்த ப்ளீச் போல செயல்படுகிறது. பாசிப் பருப்பு, கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவினால் முகத்தின் கருந்திட்டுக்கள் காணமல் போகும். 
பழக்கூழ் பேஷியல் ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, கலக்கி பஞ்சில் முக்கி முகத்தில் பூசவேண்டும். இதனால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். 
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்,1 உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்து இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், இந்த பேஷியல் மாற்றி விடும்.
பிசுபிசுப்பு நீங்க முகத்தில் அதிக எண்ணெய் பசை இருந்தாலே முகம் கருமை அடையும். தலையில் பிசுபிசுப்பை நீக்க ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும். 
ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும். அப்புறம் பாருங்கள் முகம் ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல பளிச் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

This year in six words

    (This blog post is part of #blogchatters wrap-up party 2024 prompt: summarize 2024 in six words more details here: https://www.theblogch...