செவ்வாய், 9 ஜூலை, 2013

அழகு குறிப்புகள் - II

  • கை நகங்களை நீளமாக வளர கைகளில் ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்யவும் .
  • துளசி இலைகளை கையால் நசுக்கி அதன் சாற்றை பூசினால் முகப்பரு.
  • வியர்க்குறு தொல்லை தீர சந்தனத்தை அரைத்து தடவவும்.உடல் குளிர்ச்சி அடையும்.
  • பாலாடையை உதட்டில் தடவி வர உதடுகள் அழகுடன் மிளிரும்.
  • கண்கள் சோர்வடையும் போது மல்லிகை பூக்களை கண்களுக்கு மேல் கட்டிக் கொண்டு ஓய்வெடுத்தால் சோர்வு நீங்கும்.
  • கடுகு எண்ணெயால் மசாஜ் செய்தால் தொப்பை குறையும்.
  • பட்டு போன்ற கைகளுக்கு தினமும் பேபி ஆயிலை கொண்டு மசாஜ் செய்யவும்.
  • முகத்தை ஐஸ் தண்ணீரால் கழுவிய பின் மேக்கப் செய்து கொண்டால் நீண்ட நேரம் மேக்கப் களையாமல் இருக்கும்.
  • இரவில் தூங்கும் முன் கண்களில் ஒரு சொட்டு ஆமணக்கு எண்ணெய் விட்டால் கண்கள் சுத்தமாகி விடும்.
  • கஸ்துரி மஞ்சள் அரைத்து பூசி வர சருமம் மிளிரும்.
  • மருதாணி போடுவதற்கு முன் கையில் ஏதாவது ஒரு தலைவலி பாமை தடவிக் கொண்டால் மருதாணி நன்றாக சிவக்கும்.
  • சூடான தவாவில் ஒரு கிராம்பு போட்டு அதன் மேல் ஒரு சொட்டு எண்ணெய்  விட்டு அந்த சூட்டில் மருதாணி இட்ட கைகளை காட்டினால் மருதாணி நன்றாக சிவக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...