வெள்ளி, 27 ஜனவரி, 2017

அவசியமான தொடர்பு எண்கள்...! 

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...! 

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:-Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்:  044-25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்—044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற     95000 99100 ( SMS )

மனிதஉரிமைகள் ஆணையம் ————-––      044-22410377

மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-      09383337639


போலீஸ் SMS :- —————————————-      9500099100

போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-      9840983832

போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–       98400 00103

வங்கித் திருட்டு உதவிக்கு ———————-      9840814100

வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-      044-28551155
பெண்களுக்கான உதவி : ——-—-–———-         044-23452365

தமிழ்நாடு மகளிர் ஆணையம் —————        044-25264568

女
விலங்குகள் பாதுகாப்பு ————————     044 – 22354959 / 22300666

போலீஸ் : —————————————–——   100

தீயணைப்புத்துறை:————————-—–101

ஆம்புலன்ஸ் : —————————————-        102, 108

போக்குவரத்து விதிமீறல———————–         103

விபத்து :———————————————-–           100, 103

பெண்களுக்கான அவசர உதவி : ——-—-–        1091

குழந்தைகளுக்கானஅவசர உதவி :——-–         1098

அவசர காலம் மற்றும் விபத்து : ———-—        1099

முதியோர்களுக்கான அவசர உதவி:—-—        1253

தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி:         1033

கடலோர பகுதி அவசர உதவி : ———-—–         1093

ரத்த வங்கி அவசர உதவி : —————-—–          1910

கண் வங்கி அவசர உதவி : —————-—–          1919

நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.
நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

தன்னம்பிக்கை


ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.
அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.
ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.
சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார்.
கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனான்.
எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே? எனக் கேட்க, நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி! என்றான்  பிச்சைக்காரன்.
இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க? எனக்கேட்க..
எங்க அப்பா, தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா...ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே! யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம்..
அடப்பாவி!
பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா?
எனக்கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்க,
பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.
கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்...
அந்தப் பிச்சை ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார்.
பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.
சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல...அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..! என பரிதாபமாக கேட்க...
கடைக்காரர் சிரிக்கிறார்.
மேலும் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை.
பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான். ராசியான ஓடு சாமி!
மகான் கொடுத்த ஓடு ஐயா...தர்மப்பிரபு!
கடைக்காரர் ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார்.
சுரண்டச் சுரண்ட...அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...
மெள்ள மெள்ள... மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!
பிச்சைக்காரனின் கையில் அந்தத் தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர்
வேதனையுடன் சொன்னார்!
அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு,
இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க
கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?
என சொல்கிறார்.
இதே போலத்தான்...
நாமும் நமக்குள் இருக்கும்...
ஆழ்மனத்தின்... தன்னம்பிக்கை- யின்
மனோசக்தியின் மகத்துவத்தை, மகாசக்தியை....,
உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...
உங்கள் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று..!


(படித்ததில் ரசித்தது)

தேனும் லவங்கப் பட்டையும்

உலகத்தில் கெட்டு போகாத ஒரே  உணவு தேன் தான்! *தேன் ஒரு  அற்புத உணவு.தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. நாம் இதனை அறிந்து, நமது அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும். தேனும் லவங்கப் பட்டையும் குணப்படுத்தும் நோய்க ள்அதிகபட்ச மாற்றம் எதுவென்றால்,  தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.
*தேனை சூடு படுத்தக்கூடாது.
*தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால்  அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும்.உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன்.

*இதய நோய்*
*இதய நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. இதயத்தின் ரத்தக் குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது. அதை தடுக்க தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 
*2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் உங்களை மீண்டும் அணுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு
வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது. இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும்  ஒரு வரப்பிரசாதம். ஒரே மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவ மனைகளில் இந்த உணவைக் கொடுத்து வருகிறார்கள். அதிசயக்கத் தக்க மாற்றங்களை பதிவு செய்துள்ளார்கள்.அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தைஅதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.

*ஆர்த்ரிரைட்டீஸ்*
*ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம். மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு தித்திக்கும் தேன் போன்ற செய்தி.
தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியைக் கலந்து குடித்து வாருங்கள்.
ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.‘எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்.. தினமும் காலை  1 தேக்கரண்டி தேனும், 1/2 தேக்கரண்டி லவங்கப் பொடியும் கலந்து கொடுத்து வந்தனர். 

*சிறுநீர்க் குழாய் கிருமிகள்*
2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக் காலத்தில் இது அரு மருந்து. கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து 2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன். 2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்கப் பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணீருடன் கலந்து  குடியுங்கள். இரண்டு மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும். ஒரு நாளில் மூன்று முறை இரண்டு கரண்டி தேன், ஒரு கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும். சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.

*ஜலதோஷம்*
சூடான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன் 1/4 தேக்கரண்டி லவங்கப் பொடியை குழைத்து  மூன்று நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடிப் போகும்.
வயிற்று அல்சர் இரு தேக்கரண்டி தேன்,  ஒரு தேக்கரண்டி லவங்கப்
பவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.

*வாயு தொல்லை*
இந்தியாவிலும் ஜப்பானிலும் நடந்த ஆய்வின் முடிவில் தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை தீருமாம்!
*எதிர்ப்பு சக்தி வளரும்*
தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் தொடர்ந்து லவங்கப் பொடியுடன் கலந்து
உண்டு வந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.
ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.

*அஜீரணம்*
சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து  சிரமப்படுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் இரண்டு தேக்கரண்டி தேனில் சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல்
ஜீரணமாகும்.

*நீண்ட ஆயுள்*
நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன்,  1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக் கொண்டு
ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும்.
வயதான தோற்றம் மறைந்தே
போகும்.  100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பைக் காணலாம்.  சருமம் மிருதுவாக இருக்கும். ஆயுள் நீடிக்கும்.

*தொண்டையில் கிச் கிச்!*
1 தேக்கரண்டி தேனை எடுத்து
மெதுவாக உண்ணுங்கள்.
3 மணிக்கு ஒரு தரம் இப்படி
செய்து வாருங்கள்.
தொண்டையில் கிச்கிச் முதல்
அல்லது 2 தேக்கரண்டியில்
போய்விடும்.

*முகப்பருக்கள் அடியோடு மறைய!*
3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடியை எடுத்து இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள்.
காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து இரு வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.

*சரும நோய் தீர*
சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும். தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர இந்த சரும் நோய்கள் குணமாகும்.

*எடை குறைய வேண்டுமா?*
தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்கப் பொடியையும் கலந்து குடிக்கவும்.
அதே போல இரவில் படுக்கப் போகும் முன்னர் தேனையும்,
லவங்கப்பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும்.
தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல்
எடை குறைவது உறுதி.

*அதிசயம்.ஆனால் உண்மை.*
இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும்.அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும். 

*புற்று நோய்க்கு அருமருந்து*
ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்’ என்று தெரிய வந்துள்ளது.
ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து,
தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் குறைந்து விடுமாம்.

*அயர்ச்சி*
‘உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விடச் சிறந்தது இல்லை’ என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் மில்டன். இதில் உள்ள சர்க்கரை அபாயகரமானது
இல்லை. உடலுக்கு உதவக் கூடியது. வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள், சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில், ஒரு தேக்கரண்டி தேனில் லவங்கப் பொடியை நன்று தூவிக் குடிக்க வேண்டும். அதே போல மதியம் 3மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியைப்
பெறுவார்கள்.

*வாய் துர்நாற்றத்தை போக்க!*
தெற்கு அமெரிக்கா மக்கள் தினமும் காலையில் தேனையும் லவங்கப் பொடியையும் கலந்து சுடுநீரில்  வாய் கொப்பளிப்பார்கள். இதனால் வாய் துர்நாற்றம் போய் விடும். நாள் முழுவதும் வாய் மணக்கும்.