வியாழன், 12 அக்டோபர், 2023

தமிழனின் பெருமை

நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்தான் தமிழன்

கோதுமை
நெல்
துவரை 
பாசிப்பயறு
கொண்டைக்கடலை
மொச்சை 
எள் 
உளுந்து 
கொள்ளு

நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை எட்டாகப் பிரித்தான் 

கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
வட கிழக்கு
வட மேற்கு
தென் கிழக்கு
தென் மேற்கு

திசையை எட்டாகப் பிரித்த தமிழன் 
இசையை ஏழாகக் கொடுத்தான்... 

ச ரி க ம ப த நி

இசையை ஏழாக கொடுத்த தமிழன் 
சுவையை ஆறாக பிரித்தான்... 

இனிப்பு
கசப்பு
கார்ப்பு
புளிப்பு 
உவர்ப்பு
துவர்ப்பு

சுவையை ஆறாக பிரித்த தமிழன் 
நிலத்தை ஐந்தாக பிரித்தான்... 

குறிஞ்சி (மலைப்பகுதி) 
முல்லை ( வனப்பகுதி) 
நெய்தல் ( கடல் பகுதி) 
மருதம் ( நீர் மற்றும் நிலம்) 
பாலை ( வறண்ட பகுதி) 

நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன்
காற்றை நான்காக பிரித்தான்... 

தென்றல்
வாடை 
கோடை 
கொண்டல்

கிழக்கிலிருந்து வீசும் காற்று
கொண்டல் 

தெற்கிலிருந்து வீசும் காற்று
தென்றல்

மேற்கிலிருந்து வீசும் காற்று
கோடை 

வடக்கிலிருந்து வீசும் காற்று
வாடை

காற்றை நான்காக பிரித்த தமிழன்
மொழியை மூன்றாக பிரித்தான்... 

இயல் ( இயற் தமிழ் ) 
இசை ( இசைத்தமிழ்) 
நாடகம் ( நாடகத்தமிழ்) 

இம்மூன்றும் தமிழுக்கு இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்து கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 

இம்மூன்று மொழிகளுக்கும் தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 

மொழியை மூன்றாக பிரித்த தமிழன்
வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்... 

அகம் 
புறம் 

கணவன் மனைவி வாழும் வாழ்க்கை
அக வாழ்க்கை... 

வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம் 
புற வாழ்க்கை... 

வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன்... 
ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்... 

அதை... 
உயிரினும் மேலாக வைத்தான்... 

இதைத்தான்  வள்ளுவர் இரண்டு அடியில் அழகாகச் சொன்னார்... 

"ஒழுக்கம் விழுப்பந் தரலான்"
"ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்"

This year in six words

    (This blog post is part of #blogchatters wrap-up party 2024 prompt: summarize 2024 in six words more details here: https://www.theblogch...