வியாழன், 10 ஜூலை, 2025

குளோப் லைட்"


வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் globe light எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இந்த லைட் செய்வதற்கு ஒரு பலூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பலூனை நன்றாக ஊதி காற்று வெளியேறாதவாறு நன்றாக இறுக கட்டி விடவும்.

பிறகு அதன் மீது பசை தடவி டிஷ்யூ பேப்பரை பலூன் முழுவதும் ஒட்டிக் கொள்ளவும் பிறகு அதன் மீது உலர்ந்த பூக்களையும் இலைகளையும் ஒட்டிக் கொள்ளவும் பிறகு மீண்டும் அதன் மீது டிஷ்யூ பேப்பரை ஒட்டி விடவும் நன்றாக காய்ந்து பின் ஒரு பல்பை மாட்டி அழகு படுத்தவும். நம்முடைய குளோபலைட் ரெடி.. இதன் செயல்முறை விளக்கத்தை கீழே உள்ள யூடுப் சேனலில் பார்த்து மகிழுங்கள்
 





வியாழன், 3 ஜூலை, 2025

சங்கு பூ ரங்கோலி


சங்கு பூ ரங்கோலி இந்த பூக்கள் பார்ப்பதற்கு சங்கு போன்ற இருப்பதால் இவற்றை சங்கு பூக்கள் என்கிறோம். 




புதன், 2 ஜூலை, 2025

நாட்டு நாவல் பழங்கள்

பச்சை, இளஞ்சிவப்பு 
மற்றும் கருச்சிவப்பு நிறத்தில் குண்டு குண்டாய் பளபளக்கும் இந்த
பழங்களை பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது அல்லவா? 
இவை  நம்ம ஊரு நாட்டு நாவல் பழங்கள் ஆகும் இந்த பழங்கள் எங்கள் செல்லக்குட்டியின் வீட்டில்  காய்த்த பழங்கள் அவற்றை புகைப்படம் எடுத்து  எனக்கு அனுப்பி இருந்தாள். 
அவற்றை நான் உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

திங்கள், 30 ஜூன், 2025

நாவல் பழ சீசன் வந்தாச்சு

நாவல்பழம் கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் பழங்களில் ஒன்றாகும். 
இப்பழங்களை உப்பு மற்றும் மிளகாய்த்தூளுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். 

நாவல்பழம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு ஏற்பட காரணம் அதன் துவர்ப்புச்சுவை. பாக்கு சாப்பிட்டால் எப்படி நாக்கு லேசாகத் தடிக்கிறதோ, அப்படித்தான் நாவல் பழம் சாப்பிடும்போது தொண்டையில் லேசான இறுக்கம் ஏற்படும். துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளின் தன்மைகளில் இதுவும் ஒன்று.
நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தொண்டைக்கட்டு, தற்காலிகமானது. சிறிது நேரத்தில் தானாகவே சரியாகிவிடும். 

தொண்டை கட்டும், ஜலதோஷம் பிடிக்கும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பலரும் இந்தப் பழங்களைத் தவிர்க்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. 


இப்போது நாவல் பழ சீசன். அது முடிவதற்குள் முடிந்தவரை இந்தப் பழங்களைச் சாப்பிடுவது அவசியம். நாவல்பழத்தில் உள்ள ஆந்தோசயனின் என்ற நிறமி, புற்றுநோய்க்கு எதிராகப் போராடக்கூடியது.

சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் மற்றும் அதன் கொட்டை என இரண்டையுமே எடுத்துக்கொள்ளலாம். நாவல் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டைகளை வெயிலில் உலர்த்திப் பொடித்துக் கொள்ளவும். தினமும் காலையில் அதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். ரத்தச் சர்க்கரை அளவு குறையும். ஆனால், இதை மட்டுமே செய்துவிட்டு ரத்தச் சர்க்கரை அளவு குறையும் என எதிர்பார்க்கக்கூடாது. இதை கூடுதலாக ஒரு சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்ளலாம்.

வியாழன், 26 ஜூன், 2025

குன்றிமணிகளின் ரகசியம்

பார்ப்பதற்கு சிகப்பும்  கருப்புமாய் முட்டை முட்டையை இருக்கும் இந்த  மணிகளின் பெயர் குன்றிமணி இவற்றை விநாயகர் சதுர்த்தி பண்டிகைகளுக்கு செய்யப்படும் விநாயகர் சிலைகளில் இவற்றை விநாயகர் கண்களாக பார்த்திருக்கிறோம். 


இந்த குன்றிமணி பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். குன்றுமணி அல்லது குன்றிச் செடி என்பது ஒரு கொடித் தாவரம் ஆகும். கடுமையான சிவப்பு நிறத்தில் கருமை நிறத்தில் ஒரு மறுவைக் கொண்ட இதன் விதை பொதுவாகக் குண்டுமணி என அறியப்படுகிறது. இதன் வேறு பெயர்கள்: குன்றி, குண்டு மணி, மனோசீலை, குன்று மணி, குன்றி வித்து. சிலர் நண்டின் கண்களுக்கு இதனை ஒப்பிடுவர். கவர்ச்சியான இந்த விதை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. எனினும் இதன் தோல் மிகவும் கடினமாக இருப்பதால், இதை முழுதாக விழுங்கினால் எவ்வித பாதிப்பும் இல்லை என அறியப்படுகிறது. 


சில பகுதிகளில் இம் மணிகளை அணிவகைகள் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மரபு வழி நகைத்தொழில் செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குக் குன்றிமணிகளைப் பயன்படுத்துவது உண்டாம் . சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு ஊருக்கு சென்ற பொழுது இந்த குண்டுமணிகளை பறித்து  சேகரித்து வைத்து புகைப்படங்கள் எடுத்திருந்தேன் 

இப்பொழுது அந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது என் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்

பாட்டிலில் கலைப் பொருள்

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நம் காண இருப்பது ஒரு பழைய பாட்டிலை எப்படி பயனுள்ள  கலைப் பொருளாக மாற்றலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். இந்த  பாட்டில் ஒரு பழைய பயன்படுத்த படாத கண்ணாடி பாட்டிலாகும் இதை தூக்கி போடாமல் அதன் மேல் வண்ணங்களால்  வர்ணம் தீட்டி அழகிய சரஸ்வதி ஓவியம் வரைந்து ஒரு கலைப் பொருளாக மாற்றியுள்ளார் என் செல்ல குட்டி நேஹா... 







இந்த கலைப் பொருளை மேஜை அலங்காரமாக கூட பயன்படுத்தலாம். அல்லது அதனுள் தண்ணீரை நிரப்பி இப்படி செடியையும் வளர்க்கலாம் இதே போன்று நீங்களும் 
செய்து 
உங்கள் வீட்டை அலங்கறியுங்கள்.



செவ்வாய், 24 ஜூன், 2025

மருத்துவ குணம் நிறைந்த பொடிகள்



அருகம்புல் பொடி
அதிக உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்கும்,
இது சிறந்த ரத்தசுத்தியாக செயல்படுகிறது. 

நெல்லிக்காய் பொடி
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது. 

கடுக்காய் பொடி
குடல் புண் ஆற்றும், சிறந்த
மலமிளக்கியாகும்.

வில்வம் பொடி
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது. 

அமுக்கரா பொடி
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு
சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த
மூலிகையாகும்.

நவால் பொடி
சர்க்கரை நோய் மற்றும் தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பொடி
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

'தூதுவளை பொடி
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு
இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி
மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு
சிறந்தது.

ஆவரம்பூ பொடி
இதயம் பலப்படும், உடல்
பொன்னிறமாகும்

கண்டங்கத்திரி பொடி
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. 

ரோஜாபூ பொடி
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல்
குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பொடி
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

ஜாதிக்காய் பொடி
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பொடி
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது. 

வெந்தய பொடி
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது. 

கறிவேப்பிலை பொடி
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. ரத்தம் முழுவதும் சுத்தமாகும். இரிம்புச் சத்து உண்டு.

வேப்பிலை பொடி
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். 

அதிமதுரம் பொடி
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்தது.

செம்பருத்திபூ பொடி
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. 

கரிசலாங்கண்ணி பொடி
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியா நங்கை பொடி
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய் க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி,
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது '

கோரைகிழங்கு பொடி
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

 பொன்னாங்கண்ணி பொடி
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருங்கைவிதை பொடி
ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுட்ர்
குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி*
சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி*
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். 

வெட்டி வேர் பொடி
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி
நீங்கும்.

நன்னாரி பொடி
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெரும்.

கஸ்தூரி மஞ்சள் பொடி
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். 

பூலாங்கிழங்கு பொடி
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாழை பொடி
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும். 

மருதாணி பொடி
கை, கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி  குணமாகும்

இஞ்சியை பற்றி தெரியுமா உங்களுக்கு....?

வணக்கம் நண்பர்களே....

இன்றைய பதிலில் நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் இஞ்சியை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க..... 




 



இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை  பெறும்.

சனி, 14 ஜூன், 2025

வாட்டர் ஆப்பிள்கள்

வாட்டர் ஆப்பிள்கள் சைசிஜியம் அக்யூம் என்றும் அழைக்கப்படும். அவற்றின் அதிக நீர் சத்து, , வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காரணமாக ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
அவை செரிமானத்தை ஆதரிப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், எடை மேலாண்மை மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடும் என்று அறியப்படுகிறது.

இந்த ஆப்பிள்களில் உள்ள  நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும்.

ஈச்சம்பழம்.... ஈச்சம்பழம்....

நான் என் குடும்பத்துடன் 
ஸ்ரீசைலம் கோவிலுக்கு செல்லும் வழியில் இந்த ஈச்சம்பழங்கள்  விற்கப்பட்டு வருவதை  பார்த்ததும் உடனே வாங்கி சுவைத்து மகிழ்ந்தோம்.


ஈச்சம்பழம் மிகவும் சுவையாக இருக்கும். இந்த மரங்கள் பார்ப்பதற்கு பேரிச்சை மரத்தைப் போல் காட்சியளிக்கும் மேலும் இது பேரீச்சை மரத்தின் தன்மை கொண்ட ஒரு மரமாக இருக்கிறது. இந்த மரமானது இந்தியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விளையும். இந்த ஈச்சம்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக காணப்படுகிறது.

ஈச்சம் பழ ம் இரண்டு வகைப்படும் ஒன்று பெரிய வகை ஈச்சம்பழம் மற்றொன்று சிறிய வகை ஈச்சம் பழம் இவை இரண்டுமே மிகவும் சுவையாக இருக்கும். இந்த மரங்கள் பார்ப்பதற்கு பேரிச்சை மரத்தைப் போல் காட்சியளிக்கும் மேலும் இது பேரீச்சை மரத்தின் தன்மை கொண்ட ஒரு மரமாக இருக்கிறது. இந்த மரமானது இந்தியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விளையும். இந்த ஈச்சம்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக காணப்படுகிறது.

வாய்ப்பு கிடைக்கும் பொழுது இப்படிப்பட்ட அரிதான பழங்களையும் வாங்கி சுவைத்து மகிழுங்கள் இவை இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதமாகும்.

இப்பொழுது எல்லாம் இவற்றைக் காண்பது அரிதாகி விட்ட நிலையில் இந்தப் பழங்களை வாங்க வாய்ப்பு கிடைத்ததும் அவற்றை சுவைத்து மகிழ்ந்ததும் ஒரு  இனிய அனுபவமாக உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்