புதன், 27 செப்டம்பர், 2023

தமிழின் அழகு


1.வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - மந்திரம்

2.செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - தந்திரம்

3.ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - இசை

4. பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - கடாக்ஷம்

5.அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - யோகா

6.மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- தியானம்

7. சுவாசம் அமைதியை உருவாக்கினால் அது - பிராணாயாமம்

8.சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - குண்டலினி

9. இடம் அமைதியை தருமானால் அதன் பெயர்   கோவில் 

10..உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் - குடும்பம்

11. தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - அன்பு

12. இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - பக்தி

சனி, 23 செப்டம்பர், 2023

திருக்குறள்களை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசு


தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1,330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல் நேராய்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நேராய்வில் கலந்து கொண்டு 1330 திருக்குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.15,000/- பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த நேராய்வில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்படுவர். இதற்கான திறனாய்வு திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையினரால் நடத்தப்படும்.

இந்நேராய்வில் பங்கேற்பவர்கள் 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றை தெரிவித்து, அதற்கான திருக்குறளைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்தப் பரிசைப் பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்கக் கூடாது.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவியர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, திருண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 30.11.2023-ஆம் நாளுக்குள் அளிக்கலாம்.

This year in six words

    (This blog post is part of #blogchatters wrap-up party 2024 prompt: summarize 2024 in six words more details here: https://www.theblogch...