திங்கள், 27 ஆகஸ்ட், 2012

சருமம் பொலிவு பெறச்செய்யும் மாஸ்க்

1. சருமம் பொலிவு பெற ஃபேஸ் மாஸ்க்:-
10 உலர்ந்த திராட்சை,  டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சைசாறு எடுத்துக் கொள்ளவும். திராட்சையை நன்கு அரைத்து விழுதாக்கி, தேன், எலுமிச்சை சாறு கலந்து உதடுகள், மற்றும் முகமெங்கும் பூசிக் கொள்ளவும். இப்படியே ஒரு மணி நேரம் ஊறவைத்து, வெந்நீரில் சுத்தம் செய்யவும். சருமம் பொலிவுடன் காணப்படும்.

2.சப்போட்டா ஃபேஸ் மாஸ்க்:-

சப்போட்டா பழம் (பெரியது) – 1
ஆரஞ்சு ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
தேன் – 2 டீஸ்பூன்
பாதாம் விழுது (அரைத்தது) – 2 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்

செய்முறை:–

சப்போட்டாவை, தோல், விதைகளை நீக்கி அரைத்துக் கொள்ளவும். மேலே உள்ள ஒவ்வொன்றையும் ஒன்றாகக் கலந்த கழுத்து, முகம், கண்களைச் சுற்றி எல்லா இடங்களிலும் அடர்த்தியாக போட்டுக் கொள்ளவும்.

இரண்டு மணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரால் இதமாக தேய்த்து சுத்தம் செய்யவும். இப்போது பாருங்கள், முகம் பளிச்சென்று பிரகாசிக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால், முகம் எப்போதும் பொலிவுடன் விளங்கும்.

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

உயிரே...




கவிதை எழுத விரும்பி,
கற்பனையில் ஆழ்ந்தேன்.
காகிதங்கள் பல கழிந்தும்,
கவிதை பிறக்க வில்லை.
கன்னி நினைவில்,
கைவிட எண்ணிய வேளையில்,
என்ன சிதறல் தென்றலாய் உன் வதனம்.
கண் சிமிட்டும் நேரத்தில் -என் உள்ளத்தில்
தோன்றிய கவிதைகள் ஓராயிரம்.
கருவில் உள்ள குழந்தையும் கவி பாடும்
உன் கண்கள் கண்டால்...
காளை நான் கவி ஆனதில் வியப்பில்லை,
கட்டுண்டு கிடந்த என் மனதை...
கவி பாட செய்தவளே
என்று இக்கவியின் காவியம் ஆக போகிறாய்???

நண்பா...




சின்ன சின்ன,நினைவுகள்
இன்பங்கள்,துக்கங்கள்,எதிர்பார்ப்புகள்
என் நாயகன் நினைவுகள்,வெறும் கனவுகள்
இவை எல்லாம் எங்கெங்கோ,எப்பொழுதோ நடந்தாலும்;
உன் கண் அசைவினாலும் உன் நினைவாலும்
ஒரே நேரத்தில் நடக்கின்றன.
காலம் என்னும் கவிதை புத்தகத்தில்
வாழ்க்கையின் வர்ணனை பகுதியின்
முதல் வார்த்தை நட்பு
உருவத்தில் மயங்கி பருவ வாசலில்
புன்னகை நீர் தெளித்து போட்ட
முதற் கோலம் நட்பு
நிலவை நீர் உற்றி வளர்ப்பதும் இல்லை
சூரியனை தீ மூட்டி எரிப்பதும் இல்லை
இயற்கையின் படைப்புகள் அவை
அதனிலும் இன்னும் ஒன்று நம் நட்பு...

அவன்



நான் உயிரோடு இருப்பது
எல்லாருக்கும் தெரியும்..
ஆனால்
என்னுயிர் அவனோடு இருப்பது
யாருக்கு புரியும்!!!

ஹைக்கூ

இறந்தது மனிதன்
என்னை புதைப்பது எதற்கு???
குமுறியது சவ பெட்டி...

அவள்




ஒரு நாளில் வாடும்
பூக்களை பறிக்கவே
தயங்கியவள்...
என் காதல் பூவை
மட்டும் என் ஒடித்து விட்டாள்?

காதல்

காதலர் தினத்தன்று,
என் காதலை சொல்லிவிட்டு
பதிலுக்காக காத்திருந்த போது;
என் தவிப்பும்,
அவள் மௌனமும்,
கட்டி பிடித்து தவிக்கையில்
அவள் கால் விரல்களால்,கிறுக்கினாள்
சம்மதக் கோலம்...

காதல்




காதல் சொர்க்கம் தான்
காதலிக்கும் வரை...

என் அன்பே...

என்னுயிரே...
என் துன்பம் கண்டு
நீ துடிக்கிறாய்,
என் கண்ணீர் கண்டு
நீ துடைக்கிறாய்,
என் வேதனை கண்டு
நீ விம்முகிறாய்,
என் அன்பே...
எந்நாளும்
என் நினைவுகளை
நீ காட்டுவாய்
கனவுகளை கூட
என் உயிரே...
எந்நாளும்
உன்னை மறக்க
முடியாதே என்னால் !!!

யாரோ ஒருவன்...

உன் குரலை 
கேட்டதும் 
வானில் பறப்பது 
போன்று மனம் 
பரவசமடையும்.
கண்கள்
மகிழ்ச்சியில் 
படபடக்கும்.
இதயம் வேகமாக 
துடிக்கும்.
என்னவோ 
ஓர் இனிய அவஸ்தை 
நீ பேசும் மொழிகளின் 
உச்சரிப்பில்,
என் இயல்பை மாற்ற 
உன்னால் தான் முடியும்!

மனம்

சில தினங்களாக
நான்
இதை தான்
செய்கிறேன்...
உன் நினைவுகளை
வரிசைபடுத்தி
பார்க்கிறேன்...
ஆனாலும்
பார்க்க துடிக்கிறதே மனம்...
உன் நிலை என்னவோ...???

சிற்பம்


கடற்கரை மணலும் காட்சி பொருளானது
கலைஞனின் கை வண்ணத்தால்...