திங்கள், 15 ஜூலை, 2024

கடல் பசு

           கடல் பசு  என்பது கடலில் உள்ள தாவரங்களை மட்டுமே தின்று வாழும் ஒரு உயிரினம் ஆகும். கடல் பசு 3 மீட்டர் நீளமும் 400 கிலோ எடையும் உள்ள கடற்பசு கிட்டத்தட்ட தரை விலங்கான யானையின் பருமனுக்கு சமனானது. கடல் பசுவின் பிறந்த குட்டி 3 அடி நீளம் இருக்கும். இதன் எடை 60 பவுண்ட். இவை நாள் ஒன்றுக்குச் சுமார் 45 கிலோ எடை கொண்ட தாவரங்களை உண்ணும். மன்னார் வளைகுடாப் பகுதியில் ஒரு காலத்தில் கடல் பசுக்கள் அதிகம் வாழ்ந்தன. இன்று குறைந்துவிட்டன. அதற்குக் காரணம் இவை அதிகமாக வேட்டையாடப்படுவதே ஆகும்.


    இவை பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன கடல் பசுவின் இறைச்சி சுவை மிக்கதாக இருப்பதால் சந்தையில் இதற்கு அதிகமாக வரவேற்பு உள்ளது.
இவற்றின் பற்களைப் பொடி செய்து நச்சு முறிவு மருந்து தயாரிக்கின்றனர். தலையை வேக வைத்து தலைவலி தைலமும், துடுப்புகளிலிருந்து மலச்சிக்கல் மருந்தும் தயாரிக்கின்றனர். தோலை உரித்து செருப்பு செய்கின்றனர். கடல் பசுக்கள் அலைகளற்ற அமைதியான கடலில் வாழ்வதாலும், அடிக்கடி கரையோரம் வருவதாலும் வேட்டையாடுவது எளிது.

    கடல் பசு வகையைச் சேர்ந்த மேனிட்டிகள் இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டன. கடலில் வாழ்ந்த போதிலும் கழிமுகம் வழியே நதிக்கு நீந்தி வருவதுண்டு. படகுகளைக் கண்டால் சுற்றி சுற்றி நீந்தி வருமே தவிர எந்த விதத்திலும் எதிர்ப்பைக் காட்டாது. பயந்த சுபாவமுடைய விலங்கு ஆகும். கடலில் மீன் பிடி பகுதிகளில் அதிகமாக காணப்படுவதால் இவற்றை மீனவர்கள் ஆவுளியா என்று அழைக்கிறார்கள். கடல் பாசிகளையும், கடலுக்கு அடியில் காணப்படும் நீர் தாவரங்களையும் விரும்பி உண்ணும். பத்து கடல் பசு ஒரு பெரிய ஏரியில் இருந்தால் அந்த ஏரியில் உள்ள நீர் தாவரங்களை எளிதில் அழித்து விடலாம். கடல் பசு இறைச்சிக்காகவும், தோலிற்காகவும் அதிகம் வேட்டையாடப்படுகின்றன. அமெரிக்காவில் இந்த இனத்தை பாதுகாப்பதற்காக தனிச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

       கடல் பசு அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் மாநில விலங்கு ஆகும். இவை பார்ப்பதற்கு டால்பின்கள் போல் இருந்தாலும் இவற்றிற்கு முதுகுத்துடுப்பு இல்லை, இதனால் இது தண்ணீருக்கு வெளியே தாவும் திறனற்றது.

இப்படிப்பட்ட அரிய வகை உயிரினங்களை காப்போம். இந்த உலகில் நாம் மட்டும் வாழவில்லை இப்படிப்பட்ட அற்புதமான மருத்துவ குணம் படைத்த அறிய வகை உயிரினங்களும் இந்த உலகில் வாழ்கின்றன என்பதை நம் வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைப்போம் அவர்களும் இந்த உயிரினங்களை பற்றி அறிந்து கொள்ளவும் அவற்றின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ளவும் வழிவகை செய்வோம்

கடல் பசு

            கடல் பசு   என்பது கடலில் உள்ள தாவரங்களை மட்டுமே தின்று வாழும் ஒரு உயிரினம் ஆகும் . கடல் பசு 3 மீட்டர் நீளமும் 400 கி...