செவ்வாய், 10 டிசம்பர், 2024

பாரதி


முண்டாசு கவிஞன் பாரதி பிறந்த தினம்!


வறுமை சூழ்நிலை எனினும்,
தன்மானம் இழக்கா 
புரட்சிக் கவிஞன்! 

தாழ்த்தப்பட்டவர்களை
வீட்டில் சேர்த்ததால், 
சுற்றத்தாரால் தள்ளி
வைக்கப்பட்ட போது!
அவர்கள் யார் 
என்னை தள்ளிவைக்க! 
அவர்களை நான் தள்ளி வைக்கிறேன் என்று சொன்ன 
சுதந்திர கவிஞன்! 

பாருக்குள்ளே நல்ல நாடு 
என்று பாடி வைத்த 
தேசக் கவிஞன்! 

தமிழை துச்சமாய் 
எண்ணிய
கூட்டத்தில்
நீ தமிழ் 
அமுதம் பருகிய
தமிழ்க் கவிஞன்!

வ. உ .சிதம்பரம், 
சுப்ரமணிய சிவா 
இருவருடன் பயணித்த 
உணர்ச்சிக் கவிஞன்! 

பெண்களை
அடிமை படுத்தி தள்ளி வைத்த காலத்தில்,
மனைவி செல்லம்மா
தோளில் கை போட்டு
சாலையில் நடந்த 
சமதர்ம கவிஞன்! 

காந்தியை மகாத்மா என்று அழைத்த காலத்தில்,
மிஸ்டர் காந்தி என்று அழைத்த 
எதார்த்த கவிஞன்!

ஆஹா என்று எழுந்தது பார் 
யுக புரட்சி!
என்று ரஷ்ய புரட்சியை
பாடி வைத்த 
சோசலிச கவிஞன்!

குழந்தைகளை பெற்றோர்கள் 
படி, படி, படி என்று சொல்லும் 
இன்றைய சூழலில் 
மாலை முழுவதும் விளையாட்டு என்று 
பாடி வைத்த 
குழந்தை கவிஞன்!

தன் கண் எதிரே 
காசியில் நடந்த 
தவற்றைப் பார்த்து 
கொதித்து எழுந்து 
தன் அடையாளத்தை 
தூக்கி எறிந்த 
தைரிய கவிஞன்! 

நல்லோர்களை, 
தியாகிகளை, 
மாமனிதர்களை 
உயிரோடு இருக்கும்போது அவர்களை கவனியாமல் 
இருப்பதும்,
அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு சிலை வைத்து வணங்குவதும் 
தமிழர்களின் வழக்கம் அல்லவா? 
உனக்கு மட்டும் என்ன அதில் விதிவிலக்கா? 
ஆம் !
நீ உயிருடன் இருந்தபோது 
உன்னை காணாது
விட்டு விட்டோம்! 
நீ இறந்த பிறகு உனக்கு 
சிலை வைத்தோம்!
நீ சென்னையில்தான்
 உயிர் விட்டாய்! 
அந்த இறுதி நிகழ்ச்சியில் 
வெறும் ஏழு பேர் மட்டும் 
கலந்துகொண்டார்களாம்?
அதில், 
உன் கவிதை ரசிகை 
ஆங்கிலேய பெண்
ஒருவரும் தானாம்?
அந்தப் பெண்ணுக்கு இருந்த உணர்வு கூட, 
எங்கள் முன்னோருக்கு இல்லையே?
நீ மாண்டு விட்டாய்! 
ஆனால் உன் கவிதை 
அப்படியல்ல!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக