செவ்வாய், 16 ஜூலை, 2024

பிளாஸ்டிக் பாட்டில் செய்த பூந்தொட்டி


 காலை வணக்கம் நண்பர்களே.... அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்? நான் நலமாக இருக்கிறேன்.

பழைய பிளாஸ்டிக் பாட்டிலை வைத்து ஒரு அழகான வீட்டு உபயோக பொருள் எப்படி தயார் செய்வது என்பதை இன்றைய பதிவில் காணலாம்..

ஒரு பழைய பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக்கொண்டு அதனை இரண்டாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய இரண்டு துண்டுகளையும் தலைகீழாக பொருத்திக் கொள்ளலாம். இப்பொழுது அது பார்ப்பதற்கு ஒரு கோப்பை போன்று காட்சி அளிக்கும். இரண்டு துண்டுகளையும் நன்றாக இணைத்துக் கொள்ளவும். இப்பொழுது அதன்மீது டிஷ்யூ காகிதத்தை எடுத்து பசை தடவி நன்றாக பாட்டில் தெரியாத அளவுக்கு ஒட்டிக் கொள்ளவும். நன்றாக பசை தடவி காகிதத்தை ஒட்டியவுடன் அதை காய விட வேண்டும். பாட்டில் நன்றாக காய்ந்தவுடன் அதன் மீது வெள்ளை சுண்ணாம்பு நன்றாக தடவிக் கொள்ள வேண்டும் .பாட்டில் நன்றாக காய்ந்ததும் நாம் அந்த பாட்டிலின் மேல் பகுதியை கண், காது, மூக்கு ஆகியவற்றை செய்து ஒட்ட வேண்டும் இப்படி ஒட்டிய பிறகு அதற்கு வண்ணம் பூசி தயார் செய்து கொள்ள வேண்டும் இப்பொழுது ஒரு அழகான பூந்தொட்டி நமக்கு தயாராகி விட்டது இதனை மேஜை மேல் அலங்கார பொருளாக வைத்துக் கொள்ளலாம். இதன் செய்முறையை  வீடியோ பதிவில் தெளிவாக காணலாம் மீண்டும் ஒரு புதிய பதிவில் உங்களை சந்திக்கிறேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அழகான பாட்டில் விளக்கு

வணக்கம் நண்பர்களே, இன்று ஒரு அழகிய பதிவுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது ஒரு அழகான பாட்டில் வி...