வியாழன், 30 மார்ச், 2023

செம்பருத்தி பூ டீ

ஹலோ பிரண்ட்ஸ் குட் மார்னிங் எல்லாரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க....




இன்னைக்கு எங்கள் வீட்டில் கொத்து கொத்தாக செக்கச் சிவந்த நிறத்தில் செம்பருத்தி பூக்கள் பூத்திருக்கின்றன. பொதுவா செடி வைத்திருக்கிறோம் என்றால் பெரிய வீடு இருக்கிறதோ அல்லது பெரிய தோட்டம் இருக்கிறதோ என்று நினைக்க வேண்டாம் ஏனென்றால், செடி வளர்க்க பெரிய வீடோ அல்லது பெரிய தோட்டமா தேவையில்லை.

செடி வளர்க்க வேண்டும் என்று ஆசை இருந்தால் மட்டும் போதும். நான் வளர்க்கும் செடி எல்லாமே சிறிய தொட்டியில் வீட்டில் வளர்க்கின்றேன். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு அல்லவா அப்படித்தான் இந்த செடி வளர்க்கும் ஆசை இருப்பதால் சிறு வயது முதல் இப்படி தொட்டிகளில் செடி வளர்ப்பேன். வீட்டில் பெரியவர்கள் கொடுக்கும் காசை சேர்த்து வைத்து சின்னஞ்சிறு தொட்டிகளை வாங்கி செடிகளை வளர்ப்பேன்.

ஒவ்வொரு செடியும் பூக்கும் பொழுது மனதிற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு செடியில் முதன் முதலாக வரும் இலை கூட மனதிற்கு அவ்வளவு சந்தோஷத்தை தருகிறது. அதனுடன் பேசும்பொழுது பேசும் பொழுதும் வருடும் பொழுதும் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.

வழக்கமாக பூக்கும் செம்பருத்தி பூக்களை சாமிக்கு வைத்து விடுவேன். ஆனால் இன்றைக்கு செம்பருத்திப் பூவில் டீ போடலாம் என்று நினைக்கின்றேன்.

சரி வாங்க இன்னைக்கு நம்ம செம்பருத்தி டீ போட்டு குடிக்கலாம். என்ன நீங்க ரெடியா???  

செம்பருத்தி பூ டீ-க்கு தேவையான பொருட்கள் :

செம்பருத்தி பூக்கள் - 5/6
தேன் அல்லது சர்க்கரை - 1 ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - 1

செம்பருத்தி டீ செய்முறை :

ஒரு கப் தண்ணீரை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும்.
செம்பருத்தி பூக்களை தண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும்.  இவை வீட்டில் பூத்த பூக்கள் என்பதால் நான் வெறும் தண்ணீரில் லேசாக அலசி கொள்கிறேன். ஒருவேளை நீங்கள் கடையில் வாங்குவீர்களனால் பூக்களை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அதில் உள்ள பூச்சிக்கொல்லிகள் அகலும் வரை நன்றாக அலசிக் கொள்ளுங்கள்.

பின்னர் பூக்களின் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது கொதிக்கும் நீரில் செம்பருத்திப் பூவின் இதழ்களை மட்டும் போடுங்கள். இப்பொழுது நீரின் நிறம் மாறுவதை நீங்கள் கண்கூடாக காணலாம்.  தேநீரின் நிறம் இளஞ் சிவப்பு நிறமாக மாறும் வரை சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். 

பூக்களின் நிறம் தண்ணீரில் முழுவதுமாக வடிந்து இளஞ் சிவப்பு நிறத்தில் தண்ணீர் காட்சியளிக்கும். 

பின்னர் டீயை வடிகட்டிக் கொள்ளுங்கள். அதில் ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். எலுமிச்சை சாறு சேர்த்த உடன் இளஞ் சிவப்பு நிற டீ, ரத்த சிவப்பாக மாறிவிடும். அதில் தேவையான அளவு தேன் அல்லது சர்க்கரை கலக்கவும்.  நம்முடைய செம்பருத்திப்பூ டீ தயாராகிவிட்டது.
 
வட்டமாக வெட்டி வைத்த எலுமிச்சை  துண்டுகளால் அலங்கரித்து பரிமாறலாம்.

நம்மளுடைய இந்த டீ கோடையில் உடலுக்கு உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது இதைக் குடிப்பதால் இதய நோய் உள்ளவர்களுக்கு இதயம் வலுவடைகிறது 



செம்பருத்தி டீ பருகுவதால் ஏற்படும் நன்மைகள்:

  • செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது. 
  • செம்பருத்தி பூவிற்கு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத தன்மை உள்ளது. 
  • செம்பருத்தி டீ, இதயம் சுருங்கி விரிவதற்கு போதிய வலிமையைத் தருகிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தையும் மிதமான அளவிற்கு குறைக்க உதவுகிறது. சூடான செம்பருத்தி டீ, ஒரு கப் காலை உணவு உண்பதற்கு முன் வெறும்  வயிற்றில் குடிப்பதால் நல்ல பலனைக் காணலாம். தினமும் செம்பருத்தி டீ பருகுவது நல்லது. 
  • இது உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.

செம்பருத்திப் பூவின் சிறப்புகள் :

  • ஹைபிஸ்கஸ் என்ற அறிவியல் பெயரைக் கொண்டது  இந்த செம்பருத்திப் பூ.
  • மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி 
  • இதற்கு சீன ரோஜா என்ற மற்றொரு பெயரும் உண்டு. 
  • செம்பருத்திப்பூவை தங்கபஸ்பம் என்ற சித்தர்கள் அழைத்து வந்தனர். 

பின் குறிப்பு:

சைனஸ் பிரச்சினை மற்றும் மூச்சுப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த டீயை தவிர்க்கவும் ஏனென்றால் இது அதிகமான குளிர்ச்சியை ஏற்படுத்தும் எனவே அவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக  இருந்தது என்றால் மறக்காமல் கமெண்ட் செய்யவும் மீண்டும் ஒரு புதிய பதிவில் உங்களை சந்திக்கிறேன் நன்றி...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...