வெள்ளி, 31 மார்ச், 2023

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

இந்திய மக்கள் அனைவரும் பான் கார்டுடன் ஆதார் கார்டை மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது வரி செலுத்துபவர்களின் நிலையை கருத்தில் கொண்டு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதாவது இதுவரை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் கட்டாயம் இணைத்து விட வேண்டும்.

வருமான வரி சட்டம் 1961-ன் படி ஒவ்வொரு நபருக்கும் பான் எண் அளிக்கப்பட வேண்டும் என்ற விதியின் படி 2017 ஆம் ஆண்டில் பான் எண் வழங்கும் பணி தொடங்கி இந்தியர் அனைவருக்கும் பான் கார்டு வழங்கப்பட்டது.

அவ்வாறு பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த காலக்கெடுவினை பயன்படுத்தி பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இணைக்காதவர்களின் பான் எண் ஜூலை ஒன்றாம் தேதி முதல் செயலற்றதாக மாற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அவ்வாறு பான் எண் செயலற்றதாக மாற்றப்படும் ஆனால் வருமான வரி செலுத்தி டிடிஎஸ் பெறுவருக்கு அந்தத் தொகை திருப்பி செலுத்தப்பட மாட்டாது.

பான் எண் செயல்படும் விதத்தில் மாற்றப்படும் வரையில் டி டி எஸ் TDS -ற்கான  வட்டிதொகை வழங்கபட மாட்டாது. அதே சமயம் வருமான வரி விதிகளின் படி, டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.

ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த 30 நாட்களுக்குப் பிறகு பான் கார்டு மீண்டும் செயல்பட தொடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

This year in six words

    (This blog post is part of #blogchatters wrap-up party 2024 prompt: summarize 2024 in six words more details here: https://www.theblogch...