திங்கள், 27 மார்ச், 2023

பிசினஸ் தந்திரம் - I

 

ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.

கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்.முட்டைகள்  

அனைத்தும் கீழே விழுந்து  உடைந்துவிட்டன.

கூட்டம் கூடி விட்டது. வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.

பாத்து போக கூடாதா? " " என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?"

அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்.

அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்?


ஏதோ என்னால் முடிந்த உதவி என ஒரு பத்து ரூபாயை குடுத்தார்.

அதோடு " தம்பி ...இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள்.

உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார்.

 மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்.

உடைந்த முட்டைகளின் விலையை விட அதிக பணம் கிடைத்து விட்டது. பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.

அப்போது ஒருவர் அந்த பையனிடம் " தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவயோ? " என்றார். 

பையன் சிரித்துக்கொண்டே சொன்னான். " அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி"



படித்ததில் ரசித்தது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...