புதன், 29 மார்ச், 2023

பிசினஸ் தந்திரம் - குட்டி கதை III

ரவி, ஹரி என்ற சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாக கேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் ரவி. 

அது கப்ஸா, அவருக்கு பாம்புச் செவி. நன்றாகவே கேட்கும்!

கடைக்கு வரும் வாடிக்கையாளர் தேடிப்பிடித்து ஒரு ட்ரெஸ் எடுத்து அதன் விலையை ரவியிடம் கேட்பார். ரவி கடைக்கு பின்னால் துணி தைத்துக்கொண்டிருக்கும் ஹரியிடம் ‘இந்த ட்ரெஸ் என்னப்பா விலை’ என்று கத்துவார்.

 ஹரி அங்கிருந்து ‘நாற்பத்தி இரண்டு டாலர்’ என்பார். ரவி உடனே ‘எவ்வளோ’ என்று மீண்டும் கேட்பார். ‘நாற்பத்திரண்டு டாலர் டா செவிட்டு முண்டமே’ என்று ஹரி பதிலுக்கு கத்துவார். ரவி கஸ்டமரிடம் திரும்பி ‘இருபத்திரண்டு டாலர்’ என்பார். கஸ்டமரும் செவிட்டு காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்துவிட்டு துணியோடு எஸ்கேப் ஆவார்!

நாற்பத்தி இரண்டு என்று கேட்ட மனதிற்கு இருப்பத்திரண்டு என்பது மிக சின்னதாய் தெரிகிறது. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது. இக்கதையில் ஒரு ட்விஸ்ட் உண்டு. 

அந்த துணியின் உண்மையான மதிப்பு பதினைந்து டாலர்தான்!



படித்ததில் ரசித்தது.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...