ஞாயிறு, 19 மார்ச், 2023

திருமண நாள்

 



அனைவருக்கும் வணக்கம்....

எனது மகிழ்ச்சியான தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த வருடம் எனது ஐந்தாவது திருமண நாளை வெகு விமர்சையாக கொண்டாட விரும்பினேன். ஆனால் வழக்கம்போல் சோதப்பிவிட்டது. இருப்பினும் மிக எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் வீட்டிலேயே சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தோம். 

திருமண நாளன்று எனது சகோதரன் கேக் வாங்கி வந்தான். சகோதரனின் மனைவி அறுசுவை விருந்து சமைத்து கொண்டு வந்தார்கள்.

குழந்தைகளுடன் சேர்ந்து கேக் கட் செய்து சிறப்பாக கொண்டாடினோம். இது ஒரு சிறிய மகிழ்ச்சியான தருணம். மறக்க முடியாத ஒரு அனுபவம். நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் இப்படி கொண்டாடுவதன் மூலம் நமது மகிழ்ச்சி பெருகுகிறது.

மனதிற்கு மிகவும் உற்சாகத்தை கொடுக்கிறது. மேலும் பரிசுகளை பரிமாறிக் கொள்வதன் மூலம் பரஸ்பரம் அன்பு கூடுகிறது. இதுதான் எங்களுடைய குட்டி குடும்பம். இந்த குட்டிக் குடும்பத்துடன் நாங்கள், திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தோம்.

இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மேலும் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்த்து சொல்ல வரும் அனைத்து நண்பர்களுக்கும் எங்களது எனது மனமார்ந்த நன்றிகள். 

 மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,  அதுவரை தமிழ் போல் வளர்வோம்.

1 கருத்து: