திங்கள், 13 மார்ச், 2023

பயனுள்ள வீட்டு குறிப்புகள்

1. தீராத விக்கலா...?

  • ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்!
  • ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!

2. கொட்டாவியை நிறுத்த...

கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்..  அதனால் 
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்.
கொட்டாவி போய்  சுறுசுறுப்பாகி விடுவீர்கள்!

3. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?

எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து வாயைக் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

4. உடல் துர் நாற்றத்தைப்போக்க...

குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்க நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

5. வேனல் கட்டி தொல்லையா?

வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர கட்டி உடையும்.

6. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?

வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க, முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

7. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!

செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால்          முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

8. நீர்க்கோவை, தலைபாரம் குணமாக...

நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

9. மூக்கு ஒழுகுவது நிற்க...

சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

10. ஜலதோஷம் :

சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

11. இருமலை போக்க...

புளியம்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்து  சட்னி 
செய்து சாப்பிட இருமல் நிற்கும்.

12. இட்லி மாவு மிருதுவாக இருக்க...

மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.

13. சூடு பட்டுவிட்டால்...

சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

14. பாகற்காய் கசப்பு நீங்க...
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

This year in six words

    (This blog post is part of #blogchatters wrap-up party 2024 prompt: summarize 2024 in six words more details here: https://www.theblogch...