திங்கள், 27 மார்ச், 2023

விடை தெரியுமா உங்களுக்கு???

ஹலோ பிரண்ட்ஸ் குட் மார்னிங்...

இன்னைக்கு தெரிஞ்சுக்கலாம் வாங்க பக்கத்துல, நாம பாக்க போறது ஒரு மூளைக்கு விளையாட்டு....
மூளைக்கும் விளையாட்டா ???அது என்ன??? அப்படின்னு தானே யோசிக்கிறீங்க ???அது ஒன்னும் இல்லைங்க....
நம்ம முன்னோர்கள் நமது மூளை வளர்ச்சிக்கும் அறிவுத்திறன் மேம்பாட்டுக்கும் பயன்படுத்திய ஒரு வகை விளையாட்டு தான்  இன்னைக்கு நம்ம பாக்க போறோம் அது என்னன்னா விடுகதை.
பொதுவா நம்ம எல்லோருக்கும் விடுகதை பிடிக்கும் அல்லவா இன்றைக்கு நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்ல போறேன் அந்த விடுகதையை படிச்சிட்டு பதில் தெரிஞ்சவங்க  கமெண்ட்ல  சொல்லுங்க. தெரியாதவங்களுக்கு அடுத்த திங்கட்கிழமை தெரிஞ்சிக்கலாம் வாங்க பக்கத்துல நானே சொல்றேன் இப்ப வாங்க அது என்ன விடுகதை என்று பார்க்கலாம்...

ஒரு மாமனார் தனது மருமகனை விருந்துக்கு வீட்டுக்கு வர சொல்லி அழைத்தாராம்  ஆனால் மாப்பிள்ளை மாமனார் வீட்டுக்கு ஒன்றாம் தேதியிலிருந்து 31-ஆம் தேதிக்குள் என்றைக்கு வேண்டுமானாலும் வருவேன். நான் வர தேதி எண்ணிக்கைக்கு சமமான அளவுக்கு (கிராம்) தங்க காசு தரணும் என்று ஒரு கண்டிஷன் போட்டாராம். அதற்கு மாமனாரும் சரின்னு சொல்லிட்டு தங்க நகை  செய்யும் ஆச்சாரியிடம் மாப்பிள்ளை என்றைக்கு வந்தாலும் கொடுக்கிற மாதிரி 31  தங்க  காசு செய்த தர சொன்னாராம், ஆனால் புத்திசாலி ஆச்சாரியோ மாப்பிள்ளை என்றைக்கு  வந்தாலும் கொடுக்கிற மாதிரி.அஞ்சே அஞ்சு  தங்க  காயிண்ஸ் செய்து கொடுத்தாராம்.அந்த அஞ்சு காயின்ஸ்  வெயிட் என்னென்ன சொல்லுங்க பார்ப்போம்.....  

என்ன நண்பர்களே விடுகதை பிடிச்சிருக்கா ? சுவாரசியமா இருக்கா? இல்ல கொஞ்சம் குழப்பமா இருக்கா? இது எதுவுமே இல்லன்னா ரொம்ப எளிமையா இருக்கா ??? விடுகதை எப்படி இருந்துச்சுன்னு சொல்லிட்டு கீழ பதில் சொல்லுங்க ஐ அம் வெயிட்டிங் மீண்டும் சந்திப்போம் அதுவரை தமிழ் போல் வளர்வோம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

This year in six words

    (This blog post is part of #blogchatters wrap-up party 2024 prompt: summarize 2024 in six words more details here: https://www.theblogch...