வெள்ளி, 31 மார்ச், 2023
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு
வியாழன், 30 மார்ச், 2023
செம்பருத்தி பூ டீ

- செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது.
- செம்பருத்தி பூவிற்கு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத தன்மை உள்ளது.
- செம்பருத்தி டீ, இதயம் சுருங்கி விரிவதற்கு போதிய வலிமையைத் தருகிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தையும் மிதமான அளவிற்கு குறைக்க உதவுகிறது. சூடான செம்பருத்தி டீ, ஒரு கப் காலை உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிப்பதால் நல்ல பலனைக் காணலாம். தினமும் செம்பருத்தி டீ பருகுவது நல்லது.
- இது உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.
- ஹைபிஸ்கஸ் என்ற அறிவியல் பெயரைக் கொண்டது இந்த செம்பருத்திப் பூ.
- மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி
- இதற்கு சீன ரோஜா என்ற மற்றொரு பெயரும் உண்டு.
- செம்பருத்திப்பூவை தங்கபஸ்பம் என்ற சித்தர்கள் அழைத்து வந்தனர்.
பிசினஸ் தந்திரம் - குட்டி கதை IV
ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு மகானிடம் சென்று கேட்டான்:
"நான் திராட்சை சாப்பிடலாமா?''
மகான் சொன்னார்: "ஓ... தாராளமா''
"அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா?''
"ஓ.. பயன்படுத்தலாமே?''
"புளிப்புச் சுவைக்காக கொஞ்சம்
வினிகர் சேர்த்துக் கொள்ளலாமா?''
"அதிலென்ன சந்தேகம்?''
"அப்படீன்னா இதுவெல்லாம் சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது மட்டும் தப்பு என்று சொல்கிறார்களே?''
மகான் யோசித்தார். குறும்புக்கார ஆசாமியிடம் கேட்டார்:
"இங்க பாருப்பா... உன் தலை மேலே கொஞ்சம் மண் அள்ளிப் போட்டா உனக்குக் காயம் ஏற்படுமா?''
"அதெப்படி ஏற்படும்?''
"தண்ணீர் ஊற்றினால்?''
"தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம் ஏற்படும்?''
"மண்ணையும் தண்ணீரையும் கலந்து சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில்
போட்டால்?''
"காயம் ஏற்படும்''
"நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்'' என்றார் மகான்..
புதன், 29 மார்ச், 2023
பிசினஸ் தந்திரம் - குட்டி கதை III
ரவி, ஹரி என்ற சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாக கேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் ரவி.
அது கப்ஸா, அவருக்கு பாம்புச் செவி. நன்றாகவே கேட்கும்!
கடைக்கு வரும் வாடிக்கையாளர் தேடிப்பிடித்து ஒரு ட்ரெஸ் எடுத்து அதன் விலையை ரவியிடம் கேட்பார். ரவி கடைக்கு பின்னால் துணி தைத்துக்கொண்டிருக்கும் ஹரியிடம் ‘இந்த ட்ரெஸ் என்னப்பா விலை’ என்று கத்துவார்.
ஹரி அங்கிருந்து ‘நாற்பத்தி இரண்டு டாலர்’ என்பார். ரவி உடனே ‘எவ்வளோ’ என்று மீண்டும் கேட்பார். ‘நாற்பத்திரண்டு டாலர் டா செவிட்டு முண்டமே’ என்று ஹரி பதிலுக்கு கத்துவார். ரவி கஸ்டமரிடம் திரும்பி ‘இருபத்திரண்டு டாலர்’ என்பார். கஸ்டமரும் செவிட்டு காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்துவிட்டு துணியோடு எஸ்கேப் ஆவார்!
நாற்பத்தி இரண்டு என்று கேட்ட மனதிற்கு இருப்பத்திரண்டு என்பது மிக சின்னதாய் தெரிகிறது. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது. இக்கதையில் ஒரு ட்விஸ்ட் உண்டு.
அந்த துணியின் உண்மையான மதிப்பு பதினைந்து டாலர்தான்!
படித்ததில் ரசித்தது.........
செவ்வாய், 28 மார்ச், 2023
பிசினஸ் தந்திரம் - குட்டி கதை II
பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார்.
எவரும் பழம் வாங்க முன்வரவில்லை.
சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான்.
அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார்.
பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார்.
அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.
முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான்.
'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது.
அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க.
அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.
படித்ததில் ரசித்தது.........
கார் இருக்கா??? அப்போ இது தெரியுமா உங்களுக்கு???
இன்னைக்கு தெரிஞ்சுக்கலாம் வாங்க பகுதியில நாம தெரிஞ்சுக்க போற விஷயம் நோ கிளைம் போனஸ் (No claim bonus). இத பத்தி நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை ஏனென்றால், இது பற்றி எந்த காப்பீட்டு நிறுவனமும் சொல்லுவதும் இல்லை எந்த ஏஜெண்டும் நமக்கு தெரிவிப்பதும் இல்லை.
கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் அந்தக் காரின் காப்பீட்டு பாலிசியைப் படித்துப் பாருங்கள். அதில் விபத்துகள் ஏற்பட்டு கிளைம் எதுவும் வாங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் No claim bonus கூடிக்கொண்டே வந்து 50% வந்தவுடன் நின்று விடும்.
அவ்வாறு விபத்து கிளைம் ஏதும் வாங்காமல் இருக்கும் நிலையில் உங்கள் காரை நீங்கள் விற்று விட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தால், நீங்கள் விற்கப் போகும் காரின் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் No Claim Bonus Certificate வேண்டும் என்று எழுத்துப் பூர்வமாகக் கேளுங்கள் .
அவர்கள் தரும் அந்த Certificate ஐ பெற்று புதிய கார் வாங்கும் ஏஜென்சியிடம் கொடுத்துப் புதிதாக எடுக்கும் வாகன பிரிமியத்தில் உங்கள் பழைய காரின் No claim bonus எவ்வளவு இருக்கிறதோ...அதே அளவு Discount பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் உரிமை .
மேலும் உங்களின் பழைய கார் வாங்குபவர் அவர் பெயரில் இன்ஸுரன்ஸை மாற்றும் போது, உங்கள் நோ கிளைம் போனஸை அவர் பயன்படுத்த முடியாது, வித்தியாச பிரிமியத்தை அவர் கட்டியே ஆக வேண்டும் .
எனவே நீங்களும் பயன்படுத்தாவிட்டால் அந்த நோ கிளைம் போனஸ் யாருக்கும் பயன் இல்லாமல் போய் விடும்.
No claim bonus என்பது காருக்கு அல்ல. விபத்தில் சிக்காமல் காரை இயக்கி வந்தாரே அந்தக் காரின் உரிமையாளருக்குத் தான் சொந்தம் .
அந்த No claim bonus-ஐ புதிய வாகனம் எடுக்கும் போது மறக்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் .
இனிமே இந்த No claim bonus -ஐ தவறாம பயன்படுத்திக் கொள்ளுங்கள் .....
திங்கள், 27 மார்ச், 2023
பிசினஸ் தந்திரம் - I
ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.
கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்.முட்டைகள்
அனைத்தும் கீழே விழுந்து உடைந்துவிட்டன.
கூட்டம் கூடி விட்டது. வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.
பாத்து போக கூடாதா? " " என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?"
அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்.
அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்?
ஏதோ என்னால் முடிந்த உதவி என ஒரு பத்து ரூபாயை குடுத்தார்.
அதோடு " தம்பி ...இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள்.
உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார்.
மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்.
உடைந்த முட்டைகளின் விலையை விட அதிக பணம் கிடைத்து விட்டது. பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.
அப்போது ஒருவர் அந்த பையனிடம் " தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவயோ? " என்றார்.
பையன் சிரித்துக்கொண்டே சொன்னான். " அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி"
படித்ததில் ரசித்தது....
விடை தெரியுமா உங்களுக்கு???
வெள்ளி, 24 மார்ச், 2023
SBI- யின் முதலீட்டு திட்டம்
கவலை இல்லை ...இதோ வந்துவிட்டது....
SBI வங்கியின் Amrit Kalash Fixed Deposit Scheme முதலீட்டு திட்டம்....
இத்திட்டத்தில் மார்ச் 31-க்குள் குறைந்த பட்சமாக 1,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரைக்கும் முதலீடு செய்து பயன் பெறலாம்.
அதாவது இந்த திட்டத்தில் நீங்கள் 60 வயதிற்கு குறைவான வயதுடையவர் என்றால் உங்களுக்கு 7.10% வட்டியும் அதுவே நீங்கள் 60 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பின் (அதாவது Senior Citizen) 7.60% வட்டியும் வழங்கப்படுகின்றது. இதன் கால அளவு 400 நாட்கள் மட்டும் தான். 400 நாட்கள் கழித்து நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற அளவில் வட்டி மற்றும் முதிர்வு தொகையினை பெற்று கொள்ளலாம்.
வியாழன், 23 மார்ச், 2023
இளஞ்சிவப்பு மழை லில்லி
மழை அல்லி அப்படியென்றால் அது மழைக்காலத்தில் அல்லது குளிர்காலத்தில் பூக்குமா? இல்லை...
பிறகு ஏன் அவை மழை அல்லிகள் என்று அழைக்கப்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?
ஏனெனில் அவை பருவகால கனமழை அல்லது புயல்களுக்குப் பிறகுதான் குறுகிய கால பூக்களை உற்பத்தி செய்கின்றன.
ஆம் என் அழகான சிறிய தோட்டத்தில், மழையின்றி மலர்ந்தது மழை லில்லி. அதன் பெயர் மழை லில்லி என்றாலும், அது எப்போதும் கோடையில் தான் பூக்கத் தொடங்குகிறது.
இது ஒரு வகையான கிழங்கு (bulb) வகை தாவரமாகும். ஆண்டு முழுவதும் புல் போல் தெரிகிறது. கோடையில் அழகான இளஞ்சிவப்பு நிற பூக்களை அளிக்கிறது. இது மிக எளிதாக வளரும் மற்றும் அதிக பராமரிப்பு தேவையில்லை. அழகான பூக்களை தரும் இந்த செடியை தொட்டியில் கூட வளர்க்கலாம்.
ஞாயிறு, 19 மார்ச், 2023
திருமண நாள்
திங்கள், 13 மார்ச், 2023
இத்தனை வகை சாபங்களா???
2) பிரேத சாபம்,
3) பிரம்ம சாபம்,
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம்,
6) கோ சாபம்,
7) பூமி சாபம்,
8) கங்கா சாபம்,
9) விருட்ச சாபம்,
10) தேவ சாபம்
11) ரிஷி சாபம்
12) முனி சாபம்,
13) குலதெய்வ சாபம்
அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
வித்தையை தவறாக பயன்படுத்துவது,
மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
மார்ச் 10
நிகழ்வுகள்
1535 – பனாமாவின் ஆயரான ஃபிறே டொமாஸ் டெ பேர்லாங்கா என்பவரின் தலைமையில் வந்த கப்பல் பெருவுக்குச் செல்லும் வழியில் கலாபகசுத் தீவுகளில் தரையிறங்கியது.
1629 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்தான். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.
1735 – ரஷ்யாவின் முதலாம் பவுல் மன்னனுக்கும் ஈரானின் நாதிர் ஷாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி ரஷ்யப் படைகள் அசர்பைஜானின் பக்கூ நகரில் இருந்து வெளியேறினர்.
1801 – பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
1804 – லூசியானா அதிகாரபூர்வமாக பிரான்சிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1814 – பிரான்சில் லாவோன் என்ற இடத்தில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.
1876 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். தன் உதவியாளரை தொலைபேசி மூலம் அழைத்து “மிஸ்டர் வட்ஸன் இங்கே வாருங்கள்” என்றார். அவை தொலைபேசியில் பேசப்பட்ட முதல் வார்த்தைகள்.
1893 – ஐவரி கோஸ்ட் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகியது.
1902 – துருக்கியின் டோச்சாங்கிரி என்ற நகர் நிலநடுக்கத்தினால் முற்றாக அழிந்தது.
1902 – போவர் போர்: தென்னாபிரிக்காவின் போவர்கள் பிரித்தானியப் படைகளுடனான கடைசிச் சமரில் வெற்றி பெற்றனர். 200 பிரித்தானியப் படைகள் கைப்பற்றப்பட்டனர்.
1902 – அசையும் படம்பிடிகருவியை தோமஸ் எடிசன் கண்டுபிடிக்கவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
1906 – வடக்கு பிரான்சில் குரியேரெஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 1,099 தொழிலாளர்கள் பலி.
1911 – இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.
1922 – கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் சுகவீனம் காரணமாக விடுதலையானார்.
1933 – கலிபோர்னியாவின் லோங் கடற்கரையில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 120 பேர் பலி.
1945 – 2 ஆம் உலகப் போரின் போது அமெரிக்க விமானங்கள் ஜப்பானிய பாரிய குண்டுத்தாக்குதல்களை நடத்தின. இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களாவர்.
1948 – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1952 – கியூபாவில் ஃபுல்ஜென்சியோ பட்டீஸ்டா தலைமையில் புரட்சி வெற்றி பெற்றது.
1959 – திபெத்தில் பத்தாண்டு கால சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து லாசா நகரில் நடத்தப்பட்ட போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் சீன இராணுவத்தினரால் படுகாெலை செய்யப்பட்டனர்.
1959 – திபெத்தில் தலாய் லாமா சீனப்படைகளால் கைது செய்யப்படலாம் எனக் கருதப்பட்டதால் அவரை சூழ 3 லட்சம் திபெத்தியர்கள் அரணாக திரண்டனர்.
1969 – அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கை கொன்றவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
1970 – வியட்நாம் போர்: அமெரிக்கத் தளபதி ஏர்னெஸ்ட் மெடினா வியட்நாமில் 1968 இல் நிகழ்த்திய மை லாய் படுகொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டான்.
1977 – யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
1982 – கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.
1990 – ஹெயிட்டியில் இடம்பெறற இராணுவப் புரட்சியில் புரொஸ்பர் அவ்ரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1990 – Jennifer Capriati என்ற இளம் நங்கை தம் 13 ஆண்டு 11 மாதம் என்ற வயதில் நிபுணத்துவ டென்னிஸ் போட்டி ஒன்றில் இறுதிச் சுற்றை அடைந்து சாதனை படைத்தார்.
2003 – விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் இலங்கைக் கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 11 போராளிகள் பலி.
2006 – நாசாவினால் அனுப்பப்பட்ட மார்ஸ் ரெக்கனைசன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்தது.
1933 – பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழறிஞர் (இ. 1995)
இறப்புக்கள்
1966 – ஃபிரிட்ஸ் சேர்னிக்கே, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1888)
2001 – சி. ஜே. எலியேசர், பேராசிரியர், பிரபல கணிதவியலாளர், தமிழ் அபிமானி. (பி. 1918)
பயனுள்ள வீட்டு குறிப்புகள்
1. தீராத விக்கலா...?
- ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்!
- ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!
2. கொட்டாவியை நிறுத்த...
3. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
4. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்க நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
5. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர கட்டி உடையும்.
நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
9. மூக்கு ஒழுகுவது நிற்க...
சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.
10. ஜலதோஷம் :
சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.
11. இருமலை போக்க...
12. இட்லி மாவு மிருதுவாக இருக்க...
13. சூடு பட்டுவிட்டால்...
ஜனவரி 5
கிரிகோரியன் ஆண்டின் ஐந்தாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 360 (நெட்டாண்டுகளில் 361) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1477 – பேர்கண்டி இளவரசன் சார்ல்ஸ் கொல்லப்பட்டான். பேர்கண்டி பிரான்சின் பகுதியானது.
1554 – நெதர்லாந்தில் ஐன்ட்ஹோவென் என்ற இடத்தில் பரவிய தீயினால் 75 விழுக்காடு வீடுகள் சேதமாயின.
1655 – கோ-சாய் என்பவன் ஜப்பானின் மன்னனானான்.
1757 – பிரான்சின் பதினைந்தாம் லூயி கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.
1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: வேர்ஜீனியாவில் ரிச்மண்ட் நகரம் பிரித்தானியக் கடற்படையினரால் தீக்கிரையாக்கப்பட்டது.
1854 – சான் பிரான்சிஸ்கோவில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1896 – வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது பின்னர் எக்ஸ் கதிர் எனப் பெயரிடப்பட்டது.
1900 – ஐரிஷ் தலைவர் ஜோன் எட்வர்ட் ரெட்மண்ட் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராகக் குரல் எழுப்பினார்.
1905 – யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்தது.
1918 – ஜெர்மன் தொழிலாளர்களின் அமைதிக்கான சுதந்திரக் குழு (நாசிக் கட்சி) அமைக்கப்பட்டது.
1933 – கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஆரம்பித்தது.
1940 – பண்பலை வானொலி முதற்தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது.
1945 – போலந்தின் புதிய சோவியத் சார்பு அரசை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.
1967 – இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1971 – உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேர்ணில் நடைபெற்றது.
1972 – விண்ணோடத் திட்டத்தை முன்னெடுக்க அமெரிக்கஅதிபர் ரிச்சார்ட் நிக்சன் உத்தரவிட்டார்.
1974 – பெருவின் தலைநகரான லிமாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 6 பேர் கொல்லப்பட்டனர்.
1975 – தாஸ்மானியாவில் டாஸ்மான் பாலத்தில் சரக்குக் கப்பல் ஒன்று மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
1976 – கம்போடியா சனநாயகக் கம்பூச்சியா என கெமர் ரூச் அரசினால் பெயர் மாற்றம் பெற்றது.
1984 – ரிச்சர்ட் ஸ்டோல்மன் குனூ இயங்குதளத்தைஉருவாக்கத் தொடங்கினார்.
1997 – ரஷ்யப் படைகள் செச்சினியாவில் இருந்து வெளியேறின.
2000 – இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
2005 – ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக்கல் பிரவுண் தலைமையிலான வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங் கோள் (dwarf planet) ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
2007 – கொழும்பிலிருந்து 36 கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டு 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
பிறப்புகள்
1592 – ஷாஜகான், மொகாலயப் பேரரசர் (இ. 1666)
1876 – கொன்ராடு அடேனார், செருமனியத் அரசியல் தலைவர் (இ. 1967)
1902 – ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (இ. 1973)
1917 – சி. டி. ராஜகாந்தம், நகைச்சுவை நடிகைtoday
1926 – ஜே. பி. ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (இ. 2008)
1927 – சிவாய சுப்ரமணியசுவாமி, இந்து அமெரிக்க ஆன்மிகவாதி (இ. 2001)
1928 – சுல்பிக்கார் அலி பூட்டோ, பாக்கித்தான் அரசுத்தலைவர் (இ. 1979)
1932 – லலிதா, நாட்டிய நடிகை
1932 – உம்பெர்த்தோ எக்கோ, இத்தாலிய எழுத்தாளர்
1937 – சித்தி அமரசிங்கம், ஈழத்துக் கலைஞர், பதிப்பாளர் (இ. 2007)
1938 – நுகுகி வா தியங்கோ, கென்ய எழுத்தாளர்
1941 – மன்சூர் அலி கான் பட்டோடி, இந்தியத் துடுப்பாளர் (இ. 2011)
1969 – மர்லின் மேன்சன், அமெரிக்க நடிகர், இயக்குநர்
1986 – தீபிகா படுகோண், இந்திய திரைப்பட நடிகை
இறப்புகள்
1762 – எலிசவேத்தா பெட்ரோவ்னா (பி. 1709)
1933 – கால்வின் கூலிஜ், ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவர் ( பி. 1872)
1943 – கார்வர், அமெரிக்க தாவரவியலாளர் (பி. 1864)
1952 – விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு, ஸ்கொட்லாந்து அரசியல்வாதி (பி. 1887)
1970 – மாக்ஸ் போர்ன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1882)
1981 – அரால்டு இயூரீ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாலளர் (பி. 1893)
2000 – குமார் பொன்னம்பலம், இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர், (பி. 1938)
ஏப்ரல் 06
வரலாற்றில் இன்று 06
பிறப்புகள்
This year in six words
(This blog post is part of #blogchatters wrap-up party 2024 prompt: summarize 2024 in six words more details here: https://www.theblogch...
-
கோடையும் வந்து விட்டது கோடை விடுமுறையும் வந்தாச்சு .... குழந்தைகளை கொளுத்தும் வெயிலில் சுற்றாமல் வீட்டிற்குள் பல விதமான கலைகளை கற்றுக்...
-
கடல் பசு என்பது கடலில் உள்ள தாவரங்களை மட்டுமே தின்று வாழும் ஒரு உயிரினம் ஆகும் . கடல் பசு 3 மீட்டர் நீளமும் 400 கி...
-
முண்டாசு கவிஞன் பாரதி பிறந்த தினம்! வறுமை சூழ்நிலை எனினும், தன்மானம் இழக்கா புரட்சிக் கவிஞன்! தாழ்த்தப்பட்டவர்களை வீட்டில் சேர்த்ததால், ச...