மழை அல்லி அப்படியென்றால் அது மழைக்காலத்தில் அல்லது குளிர்காலத்தில் பூக்குமா? இல்லை...
பிறகு ஏன் அவை மழை அல்லிகள் என்று அழைக்கப்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?
ஏனெனில் அவை பருவகால கனமழை அல்லது புயல்களுக்குப் பிறகுதான் குறுகிய கால பூக்களை உற்பத்தி செய்கின்றன.
ஆம் என் அழகான சிறிய தோட்டத்தில், மழையின்றி மலர்ந்தது மழை லில்லி. அதன் பெயர் மழை லில்லி என்றாலும், அது எப்போதும் கோடையில் தான் பூக்கத் தொடங்குகிறது.
இது ஒரு வகையான கிழங்கு (bulb) வகை தாவரமாகும். ஆண்டு முழுவதும் புல் போல் தெரிகிறது. கோடையில் அழகான இளஞ்சிவப்பு நிற பூக்களை அளிக்கிறது. இது மிக எளிதாக வளரும் மற்றும் அதிக பராமரிப்பு தேவையில்லை. அழகான பூக்களை தரும் இந்த செடியை தொட்டியில் கூட வளர்க்கலாம்.
மலர்கள் நம்மை மகிழ்ச்சியடையச் செய்து மனதை அமைதிப்படுத்துகின்றன.
அதனால் தான் நான் தினமும் காலையில் எனது சிறிய (மினி) மாடி தோட்டத்தில் உலா வருவேன்.
அவை பூக்கும் போதெல்லாம் என் கேமராவில் படம் பிடித்து இந்த அழகிகளின் நினைவுகளை என்றென்றும் ரசித்து பார்க்க விரும்புகிறேன். நான் இந்த இளஞ்சிவப்பு அழகியைப் ரசிக்கிறேன்..... அப்போ நீங்கள்....?
Amazing
பதிலளிநீக்குமழை லில்லி மனதை நனைத்துவிட்டது.... பிரம்மாதம்!!...
பதிலளிநீக்கு