சனி, 1 ஏப்ரல், 2023

வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன

திருச்சபையால் நடத்தப்படுகின்ற சர்ச் ஒன்றில் திடீரென்று ஒரு சுற்றறிக்கை கட்டுப்பாடு. குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு படித்திருந்தால் மட்டுமே வேலை. மற்ற அனைவரையும் வெளியே அனுப்புங்கள் என்று.

மழைக்குக் கூட பள்ளிக்கு போகாமல் சர்ச்சில் மணி அடிக்கும் வேலையை பார்த்து குறைந்த ஊதியத்தில் குடும்பம் நடத்திய பீட்டருக்கு வேலை போய் விட்டது.

ஆனால் பாசமாக பழகிய சர்ச் பாதர் ஒன்றும் செய்ய இயல வில்லை .ஆனால் பரிதாபப்பட்டு சற்று பணம் கொடுத்து வேறு ஏதேனும் வேலை பார்த்துக்கொள்! என்று அனுப்பிவிட்டார்.

என்ன செய்வதென தெரியாத பீட்டர் தினமும் சர்ச்சுக்கு வந்து பிரேயர் செய்து விட்டு வாசலில் நின்று சர்ச்சையே வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வலமும் ,இடமுமாக செல்பவர்கள் இங்கே சுருட்டு கிடைக்குமா ?இல்லையெனில் எங்கே கிடைக்கும் ?என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

பீட்டர் அருகில் இருக்கும் கடைகளை சொல்ல ஆரம்பித்தார் .ஒரு வாரம் கழிந்தது திடீரென ஒரு ஞாபகம் வந்து கையில் இருக்கும் பணத்திற்கு சுமார் பத்து கட்டு சுருட்டு வாங்கி ஒரு தட்டில் வைத்து விற்க ஆரம்பித்தார்.

விற்பனை கூடியது. ஒரு சிறிய பெட்டிக் கடையில் வைத்து விற்க ஆரம்பித்தார் .அதிலும் சற்று வருமானம் கூடியது .

டவுனில் சுருட்டு மட்டுமல்லாமல் அனைத்து பொருட்களுக்கும் விற்கும் ஒரு கடையை ஆரம்பித்தார் .அதில் வருமானம் கூடியது.

ஒரு சுருட்டு கம்பெனி சொந்தமாக வைத்தார் .அதில் வருமானம் பல மடங்கு கூடி லட்சங்கள் கோடிகளில் வியாபாரம் வரவு செலவுகள் அதிகரித்தன.

ஆனாலும் இன்றளவும் பீட்டர் கைநாட்டு மட்டுமே .ஒருநாள் அவரைப் பார்க்க வங்கி மேலாளர் வந்திருந்தார். வரவு செலவுகளைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டு பின்னர் என்ன படித்திருக்கிறீர்கள் ?என்று கேட்டார்.

மழைக்கு கூட பள்ளிக்கு செல்லவில்லை, என்று பீட்டர் சொன்னதும் ,பள்ளிக்கு செல்லாமலேயே நீங்கள் லட்சம், கோடியாக சம்பாதித்து இருக்கிறீர்கள். நீங்கள் மட்டும் குறைந்தபட்சம் 10 படித்திருந்தால் உலகையே விலைக்கு வாங்கி இருப்பீர்கள் என்று சொன்னதும்,பீட்டர் அமைதியாகச் சொன்னார்.

இல்லை ,அப்படியெல்லாமில்லை .உள்ளூர் சர்ச்சில் மணி அடித்து கொண்டிருப்பேன் என்றார். மேலாளர் மயங்கி விழுந்தார்.

வாசலில் நிற்க கிடைத்த இடத்தையும்,கையில் கிடைத்த சொற்ப பணத்தையும் நல்வாய்ப்பாக பயன்படுத்தியது சரிதானா ?இல்லையா ?




படித்ததில் ரசித்தது......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...