ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

ஐஸ் குச்சி டேபிள் விளக்கு

ஹலோ குட் மார்னிங் நண்பர்களே....... இன்று ஞாயிற்றுக்கிழமை காலை எழுவதற்கு  மிகவும் தாமதமாகி விட்டது.

அதற்கு  என்ன காரணம் என்றால் நேற்று இரவு எங்கள் கோனி குட்டி வந்திருந்தான். 

அவனுடன் விளையாடிவிட்டு தூங்குவதற்கு வெகு நேரம் ஆகிவிட்டது.

சென்ற வாரம் விடுகதைக்கான விடை இதோ👇🏻


விடை: 1,2,4,8,16


இன்றைய பதிவில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்றால் ஐஸ் குச்சிகளை வைத்து ஒரு அழகான மேஜை விளக்கு செய்யப் போகிறோம்.
 
அதை எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாமா?

இதற்கு இரண்டே பொருட்கள் இருந்தால் மட்டும் போதும், அழகான விளக்கை தயார் செய்யலாம். 

இதற்கு ஒரு ஐந்து கட்டுகள் ஐஸ் குச்சிகள் மற்றும் பசை இருந்தால் போதும்.


நான்கு குச்சிகளை சதுரமாக ஒட்டிக் கொள்ளவும். இப்படி அனைத்து குச்சிகளையும் சதுரங்களாக ஒட்டி காய வைத்துக் கொள்ளவும்..


இந்தக் குச்சிகளை எல்லாம் நன்றாக காய்ந்தவுடன் இப்பொழுது விளக்கு தயார் செய்யலாம். சதுரங்களாக ஒட்டிய குச்சிகளை ஒன்றின் மீது ஒன்றாக பசை பூசி ஒட்டிக் கொள்ளவும்


இப்பொழுது ஒரு அழகிய கோபுரம் போல் நமது ஐஸ் குச்சிகள் அடுக்குகளாக இருக்கும். இந்த ஐஸ் குச்சி கோபுரத்தினுள் விளக்கை பொருத்திக் கொள்ளவும். நான் இதில் எல் இ டி விளக்கை பொருத்தி உள்ளேன்.


 இப்பொழுது பார்த்தீர்களா நமது விளக்கு எவ்வளவு அழகாக இருக்கிறது. 

இந்த பதிவு உங்களுக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் அதுவரை தமிழ் போல் வளர்வோம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக