திங்கள், 3 ஏப்ரல், 2023

நம் எண்ணம் தான் நமக்குச் சிறை

ஒரு பிச்சைக்காரன் ஒரு தகரப்பெட்டியின் மேல் அமர்ந்து கொண்டு வெகு நாளாக பிச்சை எடுக்கிறான். ஒரு நாள் அவன் இறந்து விடுகிறான்.  அப்போது மக்கள் நல மேம்பாட்டு துறையினர் வந்து அவனை தூக்கி செல்லும் போது, அவன் அமர்ந்திருந்த பெட்டியை திறந்து பார்கிறார்கள். அதில் விலை உயர்ந்த ஆபரணங்கள் இருப்பதைக் கண்டு வியந்து போனார்கள்.  இது தெரியாமல் அவன் வாழ்க்கை முழுவதும் பிச்சை எடுத்தான். 

இது தான் தொழிலில் சிறை.... 

இன்னொரு மனிதர் நிறைய பணம் சேர்த்து, தன் வீட்டுக்கு கீழ் பாதாளம் அமைத்து, அதில் சேர்த்து வைத்திருந்தார். ஆனால் , அவர் ஒரு நாள் கூட அதை சரி பார்த்ததே இல்லை
. 0
இதை எப்படியோ தெரிந்து கொண்ட நபர் ஒருவர் 

அந்த அறையின் அடுத்தப் பக்க சுவரை துளையிட்டு அனைத்து பணத்தையும் எடுத்து செல்கிறார்.

அது இவருக்கு தெரியாமலேயே பணம் பத்திராமாக இருப்பதாக எண்ணி மகிழ்ச்சியாக இருக்கிறார்.  

இது தான் மனித மனம் 

ஒருவன் இருக்கிறது என்பது தெரியாமல் பிச்சை எடுக்கிறான்.

மற்றொருவன் இல்லாததை இருப்பதாக எண்ணி திருப்தி கொள்கிறான்.

இதுவே சிறை கொண்ட மனித மனதின் மாய விளையாட்டு.......!!!





படித்ததில் ரசித்தது.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக