திங்கள், 10 ஏப்ரல், 2023

இது கொஞ்சம் புதுசு

1) அமாவாசை மேகம் 
     அப்பாவி மழை 
     கடலில் பெய்யும். 

2) எந்த முட்டைக்குள் 
     எந்தப் பஞ்சு 
     எல்லாம் ஒரே கோழிக் குஞ்சு. 

3) மெய் 
     ஒரு பொய் 
     காற்றடைத்தப் பை.

4) எது இலையாகும் ?
     எது பூவாகும் ?
     யாருக்குத் தெரியும் ?

5) மூப்பின் அடிப்படையில் இல்லை
     சிவலோகப் பதவி. 
     எமலோகத்திலும் அரசியல்.

6) மயிலுக்குத் தேசிய பறவை
     எலிகளுக்குச்  சோதனைச்சாலை
     நாரதருக்குக் கோபம். 

7) வெறுங் காலைப்
     பதம் பார்க்கிறது.
     செருப்பால் மிதிபட்ட முள் .

8) எங்கள் நிறுவனத்திற்கு 
     எங்கும் கிளைகள் கிடையாது
     அறிவிக்கிறது மூங்கில் .

9) எங்கள் விரல்களில் கரும்புள்ளி 
     தேர்தலில் வென்றார் 
     பெரும்புள்ளி..

10) பறவைக்கு  இல்லை அச்சம்
       சோளக்காட்டுப் பொம்மைத் 
       தலையில் எச்சம்.

1 கருத்து:

  1. //எங்கள் விரல்களில் கரும்புள்ளி
    தேர்தலில் வென்றார் பெரும்புள்ளி//

    ஜெயித்த பின்பு எங்களுக்கு குத்தினார் கரும்புள்ளி செம்புள்ளி...
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...