செவ்வாய், 18 ஏப்ரல், 2023

புத்தகங்களின் மகத்துவம்

புத்தகங்களின் மகத்துவம் பற்றிச் சொல்லும் உயர்ந்த கருத்துக்கள்: 

  • தன்னைத் துாக்கிலிட அழைத்தபோது, தான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை முடித்து விட்டு வருகிறேன் என் சாகும் தருவாயிலும் கூட புத்தகம் வாசித்தவர் மாவீரன் பகவத்சிங்.

  • மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம் கிரேக்க நாட்டு சிந்தனைாளர் சாக்ரட்டீஸ்.

  • வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் பு்த்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்நாராம் நெல்சன் மண்டேலா.

  • ஒரு கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு நுாலகம் கட்டுவேன் என்று சொன்னாராம் காந்தியடிகள்.

  • ஒவ்வொரு படமும் நடிகக ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நுாறு டாலர்களுக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்.

  • ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் அதி சிறந்த பரிசு ஒரு புத்தகந்தான் என்றார் வின்சன்ட் சேர்ச்சில்.

  • தான் மறைந்த பிறகு தனது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்க வேண்டாம். புத்தகங்கள் வைக்க வேண்டும் என்றாராம் ஜவஹர்லால் நேரு.

  • புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும்வரை அறுவைச் சிகிச்சையை தள்ளி வைக்கச் சொன்னாராம் அறிஞர் அண்ணா.

  • ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரத்தை படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டாராம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாகடர் ராதாகிருஷ்ணன்.

  • “கற்றனைத்துாறும் அறிவு“ என்றார் திருவள்ளுவர்.

  • ஒரு நுாலகம் திறக்கப்படும்போது, 100 சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன. என்றார் விவேகானந்தர்.

  • கைத்துப்பாக்கிகளை விட புத்தகங்களே பெரிய ஆயுதங்கள் என்றார் புரட்சியாளர் லெனின்.

1 கருத்து:

  1. உடுத்தும் நூல்கள் மானம் காக்கும்... படிக்கும் நூல்கள் ஞானம் காக்கும்...
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...